search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    8 ஜிபி ரேம் கொண்ட மோட்டோ G32 - ரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம்!
    X

    8 ஜிபி ரேம் கொண்ட மோட்டோ G32 - ரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம்!

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G32 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி வெர்ஷன் அறிமுகம்.
    • ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ G32 ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெற இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G32 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வெர்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ரேம் மற்றும் மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மோட்டோ G32 ஸ்மார்ட்போனிலும் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. எனினும், எப்போது வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    மோட்டோ G32 அம்சங்கள்:

    6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ மேக்ஸ்விஷன் LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

    அட்ரினோ 610 GPU

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யுஎக்ஸ்

    ஹைப்ரிட் டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    16MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் டர்போ சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோ G32 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாடின் சில்வர், மினரல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் தற்போது ரூ. 10 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×