search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டில் கொள்ளை"

    • நகை, பட்டு சேலைகள் திருடிசென்றனர்
    • குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற போது கும்பல் கைவரிசை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் கண்டிகையை சேர்ந்தவர் பாபு(50). இவர் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றிய துணை தலைவராக உள்ளார். மேலும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் பாபு குடும்பத்தோடு நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்ப கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதிலிருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.11 ஆயிரம், 9 பட்டுப் புடவைகள் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்றனர்.

    தரிசனம் முடிந்து பாபு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்ப ட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் பாபு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    கோவிலுக்கு சென்ற போது பா.ஜ.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் கொள்ளை யடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த சுமார் 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரத்தை மர்மகும்பல் திருடி சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டில் கைவரிசை காட்டிய மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 35). இவர் லாரி உரிமையாளர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு, பச்சியப்பன்கொட்டாய் பகுதியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு சொந்த வேலையாக குடும்பத்துடன் சென்றதாக கூறப்படுகிறது.

    பின்னர் மீண்டும் நேற்று காலை, ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து அவர் பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த சுமார் 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரத்தை மர்மகும்பல் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டில் கைவரிசை காட்டிய மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    • கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை
    • கையுறை அணிந்திருந்ததுடன் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர்.

    ராஜாக்கமங்கலம், மே.16-

    ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பூதலிங்கம். இவரது மகன் முருகன் (வயது 43) தொழிலதிபர்.

    இவர் தனது வீட்டின் வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் மற்றும் வெளி நாட்டிற்கு பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவரது மனைவி மேரிபெல். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் சென்னை யில் படித்து வருகிறார்.

    இன்னொரு மகனும், மகளும் வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். முருகன் அவரது மனைவி யும் சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக சென்றிருந்தனர். நேற்று காலை பூதலிங்கம் மகன் முருகன் வீட்டிற்கு வந்து மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு உணவளிக்க வந்திருந்தார். அப்போது நிதி நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் கதவுகளும் உடைக்கப் பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப் பட்டு இருந்தது.

    இதுகுறித்து பூதலிங்கம் மகன் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். முருகன் ராஜாக்கமங்கலம் போலீ சுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் 53 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். அப்போது கைரேகைகள் எதுவும் சிக்கவில்லை.

    கொள்ளையர்கள் கையுறை அணிந்து கை வரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. மோப்ப நாயும் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை யர்கள் தடயங் கள் சிக்காமல் இருக்கும் வகையில் மிளகாய் பொடி யையும் வாசலில் தூவி சென்றுள்ளனர். மின் விளக்குகளை துண்டித்து கை வரிசையில் ஈடுபட்டி ருப்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி களை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வரு கிறார்கள். மேலும் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்க ளது செல்போன் அழைப்புகளையும் போலீசார் சோதனை செய்தனர். முருகன் ஊரில் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளை யர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கி றார்கள். மேலும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கையுறை அணிந்திருந்ததுடன் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர்.

    மேலும் மின்விளக்கை துண்டித்து கைவரிசையில் ஈடுபட்டுள்ளதால் ஏற்கனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இதில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே பழைய கொள்ளையர்களின் விவரங்களை சேகரித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

    • 40 பவுன் திருடு போனதாக நாடகமாடியது அம்பலம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் சக்திநகரை சேர்ந்தவர் என்ஜினீயர். இவர் ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    என்ஜினீயர்

    இவரது தாயார் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் சக்தி நகரில் வசித்து வருகின்றனர். இருவரும் கடந்த 31-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வாலாஜாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    2 நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ஆங்காங்கே பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று வீடு, பீரோக்களை பார்வையிட்டு அவருடைய மாமியார் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் 3 வாலிபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஆரணி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 19),வேலூர் முள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்கிற ரஞ்சித் (23) என தெரிய வந்தது.

    மேலும் தலைமறைவாக உள்ள சேண்பாக்கம் சூர்யா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப் செல்போன் ஒரு டேப் மற்றும் வெள்ளி கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது.

    திருடப்பட்டதாக புகாரில் கூறப்பட்ட 40 பவுன் குறித்து அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் நாங்கள் நகைகள் ஏதும் திருடவில்லை என்று தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் என்ஜினீயரை அழைத்து விசாரணை செய்தனர்.

    அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அது குறித்து போலீசார் கூறியதாவது:-

    என்ஜினீயர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து தனது வீட்டில் 40 பவுன் நகைகள் திருடப்பட்டதாக கூறினார். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் திருடவில்லை என்றனர். தீவிர விசாரணையில் என்ஜினீயர் அவரது நகைகளை விற்பனை செய்து வீடு கட்டி வந்துள்ளார்.

    திருட்டு சம்பவம் நடந்த பின்னர் அக்கம் பக்கத்தினர் கூறியதன் பேரில் திருடப்பட்ட பொருளுடன் நகையும் திருடு போனதாக கூறி நாடகமாடி உள்ளது தெரியவந்தது என்று போலீசார் கூறினர்.

    • 4 பவுன் நகை, பைக் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தேசூர் போலீசார் ஏரிக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரிடம் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பதும் இவர் பெரணமல்லூர் தேசூர் செஞ்சி சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் திருத்தணி ஆற்காடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் தினகரன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து தேசூர் போலீசார் தினகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவரிடம் இருந்த 4 பவுன் நகை, வெள்ளி கொலுசுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 4 வாலிபர்கள் முககவசம் அணிந்தபடி சங்கமேஸ்வரன் வீட்டுக்கு வந்தனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் மும்பைக்கு தப்பி சென்றுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அவினாசி ரோடு ராயபண்டார வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (வயது 63). நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இளைய மகள் ஷிவானி (27), பெங்களூருவில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். தற்போது பெற்றோருடன் திருப்பூரில் உள்ளார்.

    கடந்த 25 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் முககவசம் அணிந்தபடி சங்கமேஸ்வரன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் சங்கமேஸ்வரன், ராஜேஸ்வரி, ஷிவானி ஆகியோரின் கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பினர். இதில் 40 பவுன் நகை, ரூ.30 லட்சம் கொள்ளைபோனதாக கூறப்படுகிறது.

    கைரேகை பதிவு செய்ததில் பழைய குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்து போனது. பிரபல கொள்ளையன் தனது கூட்டாளிகள் 3 பேருடன் இந்த கொள்ளை சம்பவததில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. திருப்பூரில் தங்கி இருந்து பிரிண்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

    தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொள்ளையன் மும்பைக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் மும்பையில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்ததும் நகை, பணத்ைத மூட்டை கட்டிக்கொண்டு சாவகாசமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் மும்பைக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

    ×