search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபி சிங்"

    • வி.பி.சிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • வி.பி.சிங் சிலை அமைப்பதற்கான மகத்தான வாய்ப்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகிறேன்.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    வி.பி.சிங் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கிருந்த உருவப் படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வி.பி.சிங் மனைவி சீதாகுமாரி, அவருடைய மகன்கள் அஜயா சிங், அபய்சிங், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு கலைவாணர் அரங்கில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நானும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும் 2 முறை சந்தித்துள்ளோம். முதல் சந்திப்பு 1988-ம் ஆண்டு தேசிய முன்னணியின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.

    அப்போது இளைஞரணி சார்பில் மாபெரும் ஊர்வலத்தை நான்தான் தலைமை தாங்கி நடத்தி வந்தேன். கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற அந்த ஊர்வலத்தை இதே அண்ணா சாலையில் காயிதே மில்லத் கல்லூரி பக்கத்தில் மேடை அமைத்து மாலையில் தொடங்கி இரவு வரை வியந்தபடி பார்த்து வாழ்த்தினார் வி.பி.சிங்.

    அப்போது நான் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த சந்திப்பு அவர் பிரதமர் ஆன போது டெல்லிக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் குழுவில் நானும் இருந்தேன். அப்போது என்னை அறிமுகம் செய்து வைத்தனர்.

    அப்போது வி.பி.சிங் என்னிடம் இவரை எப்படி மறக்க முடியும்? இவர்தான் சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து நடத்தினார் என்று மறக்காமல் என்னை பாராட்டினார். அந்த பாராட்டு என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு.

    இன்றைக்கு நான் முதலமைச்சராக பொறுப்பேற்று அவருக்கு சிலை திறந்து வைத்துள்ளேன் என்றால் இதைவிட என்ன பெருமை வேண்டும்?

    இந்தியா முழுவதும் பரவி உள்ள சமூக நீதி குடும்பத்தை சார்ந்தவர்கள் நாங்கள். வி.பி.சிங்குக்கு சிலை வைப்பதின் மூலம் அவரது புகழ் உயருது. நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி உள்ளோம்.

    காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங். தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று உறுதியாக இருந்தவர் வி.பி.சிங். அவருக்கு சிலை அமைப்பதை திராவிட மாடல் அரசு தனது கடமையாக கருதுகிறது.

    சமூக நீதியை காக்கிற கடமையில் இருந்து இம்மி அளவும் வழுவாமல் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

    வி.பி.சிங் பற்றியும் அவரது தியாக வாழ்வு பற்றியும் இந்திய மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தவர். தன்னுடைய நிலங்களை தானமாக வழங்கியவர்.

    வி.பி.சிங் பிரதமராக பதவியில் இருந்தது 11 மாதம்தான். ஆனாலும் அவர் செய்த சாதனை மகத்தானது.

    அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. அதை வழங்குவதற்காக 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் வி.பி.மண்டல் தலைமையிலான ஆணையம்.

    சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அழைக்கப்படும் சமூகத்துக்கு மத்திய அரசு பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற வி.பி.மண்டல் பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதி காவலர்தான் வி.பி.சிங்.

    வி.பி.சிங் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் அல்ல. ஏன் ஏழை எளிய குடும்பத்தை சார்ந்தவரும் கிடையாது. ஆனாலும் ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தி காட்டினார்.

    வி.பி.சிங் சிலையை திறந்ததின் மூலம் நாம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    வி.பி.சிங்கின் வாழ்க்கை வரலாற்றை இளைஞர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வி.பி.சிங் முயற்சியால் தான் இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரடியாவது முன்னேறி இருக்கிறார்கள். நாம் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டும்.

    நமக்கான உரிமைகள் இன்றைக்கும் முழுமையாக கிடைக்காத கிடைக்க முடியாத சூழல்தான் நிலவுகிறது.

    சமூக நீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சனை கிடையாது. எல்லா மாநிலங்களிலும் உள்ள பிரச்சனை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஜாதி வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்சனை ஒன்றுதான்.

    அதுதான் புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதை முறியடிக்கிற மருந்தாக இருப்பது தான் சமூக நீதி. அந்த சமூகநீதி தளைக்க வேண்டுமானால் அதை முன்னெடுக்க வேண்டிய சில முக்கிய செய்திகளை சொல்கிறேன்.

    தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை, அந்த கணக்கெடுப்போடு ஜாதி வாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.

    சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து உறுதி செய்ய அனைத்து கட்சி எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

    இதை அகில இந்திய அளவில் சமூக நீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நன்மைக்காக செயல்பட வேண்டும்.

    சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதிமொழி.

    இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை விளிம்பு நிலை மக்களுடைய உயர்வுக்கான அரசியல் செயல் திட்டங்களை அரசியல் செயல் திட்டங்களாக மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் தமிழக அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக உ.பி. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

    சென்னை:

    பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்.

    இத்தகைய சிறப்புமிக்க முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் தமிழக அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார்.

    சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநாட்டை இளைஞரணி நடத்தினாலும் கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் இதில் பங்கேற்கும் உரிமையுண்டு.
    • 'அனைவருக்கும் அனைத்தும்' என்கிற திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக்காட்டியவர் வி.பி.சிங். அவருடைய இந்தச் சிறப்பான முடிவின் பின்னணியில் ஊக்கசக்தியாக விளங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.

    சமூகநீதிக் காவலர் எனப் பெயர் பெற்ற வி.பி.சிங் ஆட்சியை, சமூக அநீதியை காலம் காலமாக ஆதரித்தும்-நிலைநாட்டியும் வரும் பா.ஜ.க. கவிழ்த்தது. ஓராண்டு கூட முழுமையாகப் பதவியில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமர்களின் வரிசையிலே நிலையான இடத்தைப் பிடித்திருப்பவர் வி.பி.சிங். அத்தகைய மாமனிதருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசின் சார்பில் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அன்று இளைஞரணிச் செயலாளராகவும் இன்று கழகத் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உள்ள உங்களில் ஒருவனான நான் அதனைத் திறந்து வைக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றுள்ளதால்தான், வாழ்வில் ஒரு பொன்னாள் என்று இந்நன்னாளைக் குறிப்பிட்டேன்.

    ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதிக்காகவும், மாநில உரிமைக்காகவும் தேசிய முன்னணி தொடங்கப்பட்டபோது, கழகத்தின் இளைஞரணி எத்தகைய எழுச்சிமிக்க பேரணியை நடத்திக் காட்டியதோ, அதுபோல, சமூகநீதியை முற்றிலுமாக அழிக்கத் துடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறித்திடும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகவும் மக்களின் ஆதரவை நாடிக் கையெழுத்து இயக்கத்தையும், இரு சக்கர வாகனப் பரப்புரைப் பேரணியையும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது இன்றைய இளைஞரணி.

    முத்தாய்ப்பாக, டிசம்பர் 17-ம் நாள் சேலத்தில் 'மாநில உரிமை மீட்பு முழக்க'த்துடன் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இளைஞரணிச் செயலாளரும்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி இன்று தன் பிறந்தநாளில் என்னிடம் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். அவரை மட்டும் நான் வாழ்த்தவில்லை. இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என அயராது பாடுபடும் இருபத்தைந்து லட்சம் இளைஞரணி உடன்பிறப்புகளையும் நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.

    மாநாட்டை இளைஞரணி நடத்தினாலும் கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் இதில் பங்கேற்கும் உரிமையுண்டு. இந்த மாநாடு, இன்னும் சில மாதங்களில் நாம் எதிர்கொள்ள இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக்களம். கழகத்தினர் கூடுகின்ற பாசறைக்கூடம். அதனால்தான் நேற்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தின் மையப்பொருளாக இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் குறித்தும், அதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    2007-ம் ஆண்டு உங்களில் ஒருவனான என் தலைமையில் இளைஞரணி செயல்பட்டபோது, அதன் வெள்ளி விழா ஆண்டையொட்டி முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இப்போது உதயநிதி அமைச்சராக இருப்பதுபோல அப்போது நான் அமைச்சர். இப்போது நான் முதலமைச்சராக இருப்பதுபோல அப்போது தலைவர் கலைஞர் முதலமைச்சர். இளைஞரணி மாநாட்டுப் பணிகளை நான் முன்னின்று அப்போது மேற்கொண்டபோது, அதன் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, நெறிப்படுத்தி வழிநடத்தியவர் தலைவர் கலைஞர்தான். அதே பொறுப்புணர்வுடன்தான் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் என் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன்.

    'அனைவருக்கும் அனைத்தும்' என்கிற திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். கலைஞர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பெண்களின் நலன் காக்கும் திட்டங்கள் நேரடிப் பயன்களைத் தருவதால் தமிழ்நாட்டு பெண்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாகத் திராவிட முன்னேற்றக்கழகம் மட்டுமே இருக்கிறது. அதுபோல இளைஞர்களுக்கான நான் முதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, புதிய வேலைவாய்ப்புகள், மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள், விளையாட்டுப் பயிற்சிகளுக்கான ஊக்கம் இவற்றை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது.

    பொய்களை விற்று அதில் கூலி பெற்று இளைஞர்களை ஏமாற்றும் கூட்டம் ஒரு புறம், வதந்திகளை பரப்பி-வன்முறையை விதைத்து தமிழ்நாட்டில் கால் ஊன்றி விடலாம் எனத் தப்புக்கணக்கு போடும் கூட்டம் மறுபுறம், தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்து விட்டுப்போன முதுகெலும்பற்ற கூட்டம் இன்னொரு புறம்.

    இந்த மோசடி அரசியல் சக்திகளை எதிர்கொண்டு, மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வரும் தி.மு.கழகமும் அதன் தோழமை சக்திகளும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் முழுமையாக வென்றாக வேண்டும். அப்போதுதான் இந்திய அளவில் நம் இந்தியா கூட்டணி வலுவான ஆட்சியை அமைக்கும். இளைஞரணி முன்னெடுத்துள்ள நீட் விலக்கு என்ற இலக்கினை வெற்றிகரமாக எட்ட முடியும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.

    இவற்றை மனதில் கொண்டு, இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செயலாற்ற வேண்டும் என்பதை நேற்றைய கூட்டத்தில் எடுத்துரைத்தேன். தேர்தல் களத்திற்கான பயிற்சிக்களமாக அமைய இருக்கும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் வெற்றி அதனைப் பறைசாற்ற வேண்டும்.

    களத்தில் பாய்வதற்குத் தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டுத் தலைவர் உதயநிதி அழைக்கிறார்.

    கழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், அந்தந்த மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்துக் கிளைகளிலிருந்தும் தேர்தல் களத்திற்கான வீரர்களாக உடன்பிறப்புகள் திரளட்டும். கடல் இல்லாச் சேலம், கருப்பு-சிவப்புக் கடலினைக் காணட்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்கிய தலைவர் வி.பி.சிங்குக்கு இன்று 15-ஆம் நினைவு நாள்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு, சமூகநீதி விரிவாக்கம் ஆகியவை வி.பி.சிங் அவர்களின் கனவு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தி, இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்கிய தலைவர் வி.பி.சிங் அவர்களுக்கு இன்று 15-ஆம் நினைவு நாள்.

    சாதிவாரி கணக்கெடுப்பு, சமூகநீதி விரிவாக்கம் ஆகியவை வி.பி.சிங் அவர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கி, அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதி இலக்கை எட்டி, பாதுகாக்க வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் உறுதியேற்போம்!

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

    • காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தவர்.
    • பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறந்த முதலமைச்சராக திகழ்ந்தார்.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் தமிழக அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    வி.பி.சிங் சிலை திறப்பு விழா நாளை (27-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவரது சாதனைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கி பேசுகிறார்.

    வி.பி.சிங் சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலேயே காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களை தானமாக வழங்கியவர்.

    சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், வர்த்தகத் துறை துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வி.பி.சிங் பதவிகளையும் வகித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 1980-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறந்த முதலமைச்சராக திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, வி.பி.சிங் 1984-ம் ஆண்டு நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்தார். பின்பு, 1989-ம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தவர். சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்.

    பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்.

    இத்தகைய சிறப்புமிக்க முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், மற்றும் அமைச்சர் அன்னாரது குடும்பத்தினர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    • வி.பி.சிங்கின் சிந்தனைகள் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்.
    • மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை நிறுவப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாளருக்கு என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன்.

    சமூக நீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் "இடஒதுக்கீடு எங்கள் உரிமை" என ஓங்கி முழங்கச் செய்தவர் அவர்.

    வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் வி.பி.சிங்கும், தலைவர் கலைஞரும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் ஆவர். வி.பி.சிங்கின் சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கிற்கு மாநில கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மாநில கல்லுரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    .

    • தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் அவர்கள் நினைத்தார்.
    • தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக்கொண்டார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார் அவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங்கிற்கு மகனாகப் பிறந்தவர்தான் விஸ்வநாத் பிரதாப் சிங்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது.

    ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் பி.பி. மண்டல் தலைமையிலான ஆணையம். சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, பி.பி. மண்டல் பரிந்துரையின் ஒன்றிய அரசுப் பணி இடங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங்.

    தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் அவர்கள் நினைத்தார். தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக்கொண்டார்.

    'ஒரு மனிதனுக்குச் சாவை விட மிகக் கொடுமையானது 'அவமானம்'. அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் 'சுயமரியாதை' என்று சொன்னவர் வி.பி.சிங். தலைவர் கலைஞரை சொந்த சகோதரனைப் போல மதித்தார்.

    'எனக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கலைஞர் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார். தனது ஆட்சியைப் பற்றிக் கூட பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக, லட்சியத்துக்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர்' என்று பாராட்டியவர் வி.பி.சிங்.

    1988-ம் ஆண்டு தேசிய முன்னணி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றபோது, மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி நான் நடத்தி வந்தேன். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வெள்ளுடை தரித்து அணிவகுத்த வீரக்காட்சியை மேடையில் இருந்தபடி பார்த்து வணங்கினார் வி.பி.சிங். அவர் பிரதமர் ஆனபின்னர், டெல்லி சென்றோம்.

    சட்டமன்றக் குழுவோடு நானும் சென்றேன். அப்போது என்னை அவரிடத்தில் அறிமுகப்படுத்தினார்கள். 'இவரை எனக்கு அறிமுகப்படுத்துகிறீர்களா? இவரை எனக்குத் தெரியாதா? நீங்கள்தானே சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தினீர்கள்!' என்று சொன்னது, என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.

    அத்தகைய சமூகநீதிக் காவலர் அளித்த ஊக்கத்தின் உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூக நீதிப் பார்வையில், சமூக நீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தவர் வி.பி.சிங் அவர்கள். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி 'இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என் கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங்.

    சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில், தலைவர் கலைஞருடைய வேண்டுகோளை ஏற்று, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்கு தமிழ் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என்பதை மிகுந்த பெருமிதத்தோடு, இந்த மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.

    உயர் வர்க்கத்தில் பிறந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சிந்தித்த, எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராத, டயாலிசிஸ் செய்யப்பட்ட உடல்நிலையிலும் ஏழை மக்களுக்காக வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வி.பி.சிங்கின் புகழ் வாழ்க, வாழ்க, வாழ்க என்று கூறி அமர்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாமானியர்களுக்கான சமூகநீதியைக் காக்க ஆட்சி மகுடத்தை உதறித் தள்ளிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் 92-ஆவது பிறந்தநாள் இன்று.
    • இந்தியாவில் சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை.

    சென்னை:

    பா.ம.க. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சாமானியர்களுக்கான சமூகநீதியைக் காக்க ஆட்சி மகுடத்தை உதறித் தள்ளிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் 92-ஆவது பிறந்தநாள் இன்று. இந்தியாவில் சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை.

    தமிழ்நாட்டில் சமூக நீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை. அதற்கான சமூகநீதி பயணத்தை இன்னும் வேகமாக முன்னெடுக்க சமூகநீதிக் காவலர் விபிசிங் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×