search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்டங்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணி முடிவடையாத போது திட்டத்துக்கான செலவு அதிகரிப்பதோடு, நிறைவேறாத பணிகளால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள்.
    • ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது.

    சென்னை:

    4 மாவட்ட கலெக்டர்கள் கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    சாலைப் பணிகள், பாலங்கள், சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றி தருவதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும். பெரும்பாலான பணிகள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறினாலும் ஒரு சில பணிகளில் தொய்வு இருப்பதை கவனித்தோம். அதற்கான விளக்கத்தை தெரிவித்தீர்கள்.

    அதன்படி பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்கிறேன். திட்டங்கள் காலதாமதம் ஏற்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி முந்தைய ஆய்வு கூட்டங்களில் சொன்னதை மீண்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசின் உட்கட்டமைப்பு பணிகள் பெரும் நிதி ஒதுக்கீட்டில் நடக்கிறது. அந்த பணி முடிவடையாத போது திட்டத்துக்கான செலவு அதிகரிப்பதோடு, நிறைவேறாத பணிகளால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள்.

    எனவே எக்காரணம் கொண்டும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

    கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிவடைய வேண்டும் என்பது போல் நலத்திட்டங்களும் குறிப்பாக விளிம்பு நிலை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்கள் எந்தவித குறைபாடும் இன்றி முழுமையாக குறிப்பிட்ட காலத்தில் சென்றடைய வேண்டும் என்பதை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்.

    இந்த அரசு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது.

    எனவே அனைத்து துறை தலைவர்களும் தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார தலைவர்களும் அனைத்து துறை திட்டங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    நான் 2 முக்கிய அறிவிப்புகளை இந்த கூட்டத்தின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன்.

    1. தென்சென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த அரசு பதவி ஏற்றவுடன் ராஜீவ்காந்தி தகவல் தொழில் நுட்ப சாலையில் உள்ள பெருங்குடி கட்டண சாவடியில் கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது.

    2. சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சியையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் (சிறிய அடுக்குமாடி வீடுகள்) உள்ளன.

    அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் கட்டண முறையை மாற்றியமைத்த போது இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொது பயன்பாட்டு பணிகளுக்கான மின் கட்டணங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

    இதனால் பொது மக்களுக்கான மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டி உள்ளது.

    இக்குடியிருப்புகளில் வசிக்க கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என பல்வேறு குடியிருப்பு நல சங்கங்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இதனை பரிசீலித்து 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாக 3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் இருக்க கூடிய மின் தூக்கி (லிப்ட்) இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டுக்கான புதிய சலுகை கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படும்.

    இதன் கீழ் பொது பயன்பாட்டுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் 1 யூனிட்டுக்கு 8 ரூபாயில் இருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறையும்.

    இதனால் மாநிலம் முழுவதும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்.

    • மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
    • ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆணையர் அலுவலகத்தில் சந்தித்து தனது தொகுதியில் உள்ள குறைகள் அடங்கிய கோரிக்கை மனுவை வழங்கி னார். பின்னர் ராஜன் செல் லப்பா எம்.எல்.ஏ கூறியதா வது:-

    திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடை பிரச்சினை, சாலை பிரச்சினை ஆகிய வற்றை வார்டு வாரியாக மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்திருக்கிறேன். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்த வும் வலியுறுத்தி உள்ளேன்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநக ராட்சி ஆணையர் உறுதி அளித்தார்.

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ெரயில்வே கேட் அடைத்திருப்பதால் பொது மக்கள், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு வைகை கரை திட்டம், சாலைகள் என பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி னார். ஆனால் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நாளை தனது தந்தை பெயரில் கட்டப்பட்ட நூல கத்தை அவர் திறக்கிறார். நூலகம் என்ற அடிப்படையில் நாங்கள் அதனை வரவேற்கிறோம் முதலில் 80 கோடிக்கு நிதி நிலையின் போது ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து 114 கோடி என்ற அளவில் தெரிவிக்கப்பட்டு இப்போது 210 கோடி என அறி விக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக மதுரை மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். மகளிர் உரிமைத்தொகை ஒன்றை அறிவித்துவிட்டு அதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்க வேண்டும். இந்த கட்டுப்பாடு களை புகுத்தினால் அரசு கூறியது போல் ஒரு கோடி மகளிர்க்கு வழங்க இயலாது.

    மதுரை மாநகராட்சிக்கு நிதி பற்றாக்குறை இருந்தால் மத்திய, மாநில அரசுகளிடம் நிதியை கேட்டுப் பெற வேண்டும். நாங்கள் இருந்த காலத்திலும் மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை இருந்தது. பல்வேறு நிதிகளை திரட்டி நிர்வாக திறனுடன் நிர்வா கத்தை செயல் படுத்தினோம். தற்போது இருக்கும் மேயர் மீது குற்றம்சாட்டவில்லை நிதியை பெற முயல வேண்டுெமன கூறுகிறேன்.நாளை மதுரை வரும் மு.க. ஸ்டாலின் மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக பட்ஜெட்டில் உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
    • உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் ஏழை, எளியோர்கள் பயனடைந்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் பயனடைவார்கள். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் ஏழை, எளியோர்கள் பயனடைந்துள்ளனர்.

    தி.மு.க. அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கை யில் தெரிவித்த திட்டமான பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டத்தை 2-வது ஆண்டிலேயே அறிவித்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். இது மிகப்பெரிய செலவுத்திட்டம் ஆகும்.

    அதேபோல் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இது வரவேற்க வேண்டிய விஷயம். வளர்ச்சி தான் ஒரு தேசத்தை மேம்படுத்துமே தவிர வாய் வார்த்தை அல்ல என்பதை தமிழக நிதி அமைச்சர் புரிந்து கொண்டுள்ளார். அவரை பாராட்டுகிறேன். கடும் நிதி நெருக்கடியிலும் தமிழக பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அம்மா பட்டி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், நகர தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, கவுன்சிலர் அமுதா சரவணன், நகர துணைத் தலைவர் சரவணன், நகர செயலாளர் ராஜாதேசிங், நிர்வாகிகள் காளியப்பன், பெருமாள், பாலசுப்பிரமணி, சங்கரலிங்கம், குழந்தைவேல், அக்கையா சாமி, விமல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. செயல்படுத்திய வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு காட்ட தயாரா? என ராஜேந்திரபாலாஜிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. சவால் விடுத்துள்ளார்.
    • புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் ராஜபாளையத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பொன்விழா மைதானத்தில் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டார்வேல்முருகன் தலைமை தாங்கினார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி, மாநில விவசாய அணி செயலாளர் விஜயன் , தலைமை கழக பேச்சாளர் நன்னிலம் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதா வது:-

    கடந்த 5 ஆண்டுகளில் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோது ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரெயில்வே மேம்பாலம், அரசு மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் வசதி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    தற்போது சட்ட மன்ற உறுப்பினரானபோது ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிட்டு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் அதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம் வட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகத்துடன் செயல்பட்டு வந்ததை பிரித்து மீண்டும் சிவகாசி கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

    இனிவரும் ஆண்டுகளில் ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ராஜபாளையத்திற்கு அரசு பெண்கள் கல்லூரி, எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து அமிழ் ஓட்டல்வரை இணைப்புசாலை அமைத்தல், ராஜபாளையம் தொகுதியில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,

    ராஜபாளையம் வளர்ச்சிக்கான பணிகள் நடக்காதது போல, பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இதற்குமுன் இருந்த எந்தவொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வும் ஒரே ஒரு வளர்ச்சி திட்டமாவது கொண்டுவந்து செயல்படுத்தியதாக அவர் நிரூபிக்க தயாரா? இந்த கூட்டத்தின் வாயிலாக அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். ஆதாரங்களோடு நான் செயல்படுத்திக் கொண்டி ருக்கும் திட்டங்களை பட்டியலிட்டுக் காட்டத் தயார். அவரால் முடியுமா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா , பேரூர் சேர்மன்கள் பாலசுப்பிரமணியன் , ஜெயமுருகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பா ளர் நவமணி பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோ வன் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன்கள் கல்பனா குழந்தைவேலு, துரை கற்பகராஜ், விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிச்செல்வம், மாணவரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவரை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார். இதில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், மாரியம்மாள், புனிதா, தீபா, புனிதா சேகர், சந்திரசேகர், தயாவதி, ஜெயராணி, ஜெபமணி, மரிய நிர்மலா தேவி, சிவகுமார், சகாயரமணி, ஆறுமுகநயினார் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களிடம் வார்டுகளின் தேவைகள் பற்றி கலெக்டர் கேட்டறிந்தார்.

    ஆறுமுகநேரி காமராஜர் பூங்காவை நவீன வசதிகளுடன் சீரமைக்க வேண்டும். ஆறுமுகநேரிக்கு குரங்கணியில் இருந்து தனி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள குப்பை மேடு அகற்றப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை வசம் உள்ள அந்த இடத்தை தினசரி சந்தை அமைப்பதற்காக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தர வேண்டும்.

    மேலும் பேரூராட்சியின் குப்பை களை கொட்டுவத ற்காக 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை ஒதுக்கி தர வேண்டும். காயல்பட்டினம் வருவாய் கிராம அலுவலகத்தின் கீழ் உள்ள ஆறுமுகநேரியின் 10 வார்டு பகுதிகளை ஆறுமுகநேரி வருவாய் கிராம நிர்வாகத்தின் கீழ் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் கலெக்டரிடம் வழங்கினார்.

    அவரிடம் மனுவில் கூறியுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் உறுதி கூறினார்.

    இதனைத் தொடர்ந்து காமராஜர் பூங்காவை கலெக்டர் பார்வையிட்டார். ஆறுமுகநேரி ெரயில் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப் பட்டுள்ள வளாகம், வேளாண்மை விரிவாக்க மையம், அங்கன்வாடி ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் மாலா, நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் ஆகி யோரும் உடன் இருந்தனர்.

    • அரசு திட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று ஊராட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்படும் தீர்மானம் நிலையான ஒன்றாக இருக்கும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கல்லல் யூனியன், பனங்குடி கிராமத்தில் காந்தியடிகள் 154-வது பிறந்தநாளையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    அரசு திட்டத்தின் மூலம் மக்களின் வளர்ச்சிக்கும், ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் பயனாளிப்பட்டியல் தோ்வு செய்வதற்கும் கிராமச்சபைக் கூட்டம் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

    இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்படும் தீர்மானம் நிலையான ஒன்றாக இருக்கும். அதன்படி, மக்கள் முன்னிலையில் ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்து எதிர்க்காலத் தேவைகளை நிறைவேற்ற பேசி முடிவு செய்ய இந்தக்கூட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

    ஊராட்சியினுடைய வளர்ச்சிக்கேற்ப பொது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வழங்க அரசு தயார்நிலையில் உள்ளது. பொதுமக்களாகிய நீங்கள் இது போன்ற திட்டங்களில் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஊராட்சியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து, பி.நடராஜபுரம், ராமசாமி நினைவு அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் மரக்கன்று நட்டார். இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை கோட்டாட்சியர்(பொறுப்பு) ரத்தினவேல், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், பனங்குடி ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் அருண், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×