search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commented by KS Alagiri"

    • தமிழக பட்ஜெட்டில் உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
    • உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் ஏழை, எளியோர்கள் பயனடைந்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் பயனடைவார்கள். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் ஏழை, எளியோர்கள் பயனடைந்துள்ளனர்.

    தி.மு.க. அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கை யில் தெரிவித்த திட்டமான பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டத்தை 2-வது ஆண்டிலேயே அறிவித்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். இது மிகப்பெரிய செலவுத்திட்டம் ஆகும்.

    அதேபோல் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இது வரவேற்க வேண்டிய விஷயம். வளர்ச்சி தான் ஒரு தேசத்தை மேம்படுத்துமே தவிர வாய் வார்த்தை அல்ல என்பதை தமிழக நிதி அமைச்சர் புரிந்து கொண்டுள்ளார். அவரை பாராட்டுகிறேன். கடும் நிதி நெருக்கடியிலும் தமிழக பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அம்மா பட்டி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், நகர தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, கவுன்சிலர் அமுதா சரவணன், நகர துணைத் தலைவர் சரவணன், நகர செயலாளர் ராஜாதேசிங், நிர்வாகிகள் காளியப்பன், பெருமாள், பாலசுப்பிரமணி, சங்கரலிங்கம், குழந்தைவேல், அக்கையா சாமி, விமல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×