search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை"

    • பினாமி பெயர்களில் பல இடங்களில் சொத்துக்களையும் வாங்கி குவித்ததாகவும் புகார்கள் எழுந்தது.
    • சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவில் நடைபெற்ற சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி தாய்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவர் கடந்த 2023 ஜனவரி முதல் அக்டோர் வரை 10 மாதங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணி புரிந்தார்.

    அவர் பணிபுரிந்த காலங்களில் பத்திரப்பதிவு செய்யவருபவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரம் பதிவு செய்து வந்ததாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து அவர் செங்கல்பட்டுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு அங்கு பணிபுரிந்து வருகிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பணி புரிந்த காலகட்டங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயர்களில் பல இடங்களில் சொத்துக்களையும் வாங்கி குவித்ததாகவும் புகார்கள் எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாய் நகரில் கட்டப்பட்டுள்ள அவரது பிரமாண்டமான சொகுசு பங்களாவில் காலை 11 மணி முதல் மாலை 4 வரை சோதனை நடத்தினர்.

    மேலும் பொதுப் பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பொறியாளர் பரமசிவம் தலைமையிலான குழுவினர் சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவை மதிப்பீடு செய்ததாக கூறப்படுகிறது.

    5 மணி நேரம் சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவில் நடைபெற்ற சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    • ரூ.4 கோடிக்கும் அதிகமான ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
    • இயந்திரங்கள் மூலம் பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் சஞ்சய் குமார் ராய் மற்றும் அவருக்கு கீழ் பணி புரியும் இரண்டு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. பாட்னா மற்றும் கிஷன்கஞ்ச் பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையின் போது கட்டுக்கட்டாக லஞ்சப்பணம் சிக்கியது.

    பணம் எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எண்ணி பார்த்தபோது மொத்தமாக 4 கோடிக்கும் அதிகமாக பணம் இருந்தது தெரிய வந்தது. மேலும் பல ஆவணங்கள் மற்றும் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. 


    அந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாட்னா லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுஜித் சாகர் தெரிவித்துள்ளார். அரசு உயர் அதிகாரிகள் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேனி அருகில் உள்ள அரண்மனைபுதூர் பசுமை நகரில் பால்வள துணை ப்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
    • பழனிசெட்டிபட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள அரண்மனைபுதூர் பசுமை நகரில் பால்வள துணை ப்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பால் உற்பத்தி யாளர்கள் சங்கங்கள் பதிவு செய்வதிலும், புதுப்பித்தல், கட்டணம் வசூலித்தல் மற்றும் பால் கொள்முதலுக்கு காசோலை வழங்குவதில் முறைககேடு நடப்பதாக சென்னை ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு குழு ஆய்வாளர் சத்தியசீலன், துணை மேலாளர் ரவி, செயல் அலுவலர் கோபி ஆகியோர் கொண்ட குழுவினர் பழனிசெட்டி பட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.

    இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், ரசீதுகள், அலுவலர்கள் கையெழுத்திட்ட கோப்புகள் ஆகியவற்றை கைப்பற்றி சென்றனர். இது குறித்து அதிகாரி தெரிவிக்கையில், முறைகேடுகள் குறித்து புகார் வந்ததால் இந்த சோதணை நடத்தப்பட்டடது.

    ஆய்வுக்காக சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளோம். விசா ரணை முடிந்தபிறகு உண்மை நிலவரம் வெளிவரும் என்றனர்.

    • மதுரையில் கே.பி.பி. பாஸ்கரின் நெருங்கிய நண்பரின் ஆர்.ஆர். இன்போ கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் வீடு கே.கே.நகர் முதல் தெருவில் உள்ளது.
    • லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 6 பேர் இன்று அதிகாலை சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    நாமக்கல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கர் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் குவித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில் கே.பி.பி.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா மற்றும் நண்பர்களது பெயர்களிலும் சுமார் 315 சதவீதம் சொத்துக்களை குவித்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் கே.பி.பி. பாஸ்கரின் நெருங்கிய நண்பரின் ஆர்.ஆர். இன்போ கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் வீடு கே.கே.நகர் முதல் தெருவில் உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 6 பேர் இன்று அதிகாலை சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சோதனையின் போது வெளிநபர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் செல்போன் பயன்படுத்தவும், போலீசார் அனுமதி மறுத்தனர். வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

    விசாரணையின் போது இந்த கட்டுமான நிறுவனம் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கருக்கு எந்த வகையில் தொடர்புடையது என்பது குறித்தும், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிதி நிறுவனத்தின் வரவு, செலவு மற்றும் சொத்து ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. நண்பரின் வீட்டில் நடந்து வரும் இந்த சோதனையால் மதுரை அ.தி.மு.க.வினர் மத்தியில் திடீர் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×