என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கரின் மதுரை நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
  X

  முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கரின் மதுரை நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் கே.பி.பி. பாஸ்கரின் நெருங்கிய நண்பரின் ஆர்.ஆர். இன்போ கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் வீடு கே.கே.நகர் முதல் தெருவில் உள்ளது.
  • லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 6 பேர் இன்று அதிகாலை சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

  மதுரை:

  நாமக்கல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கர் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் குவித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  விசாரணையில் கே.பி.பி.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா மற்றும் நண்பர்களது பெயர்களிலும் சுமார் 315 சதவீதம் சொத்துக்களை குவித்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

  மதுரையில் கே.பி.பி. பாஸ்கரின் நெருங்கிய நண்பரின் ஆர்.ஆர். இன்போ கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் வீடு கே.கே.நகர் முதல் தெருவில் உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 6 பேர் இன்று அதிகாலை சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  சோதனையின் போது வெளிநபர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் செல்போன் பயன்படுத்தவும், போலீசார் அனுமதி மறுத்தனர். வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

  விசாரணையின் போது இந்த கட்டுமான நிறுவனம் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கருக்கு எந்த வகையில் தொடர்புடையது என்பது குறித்தும், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிதி நிறுவனத்தின் வரவு, செலவு மற்றும் சொத்து ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.

  நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. நண்பரின் வீட்டில் நடந்து வரும் இந்த சோதனையால் மதுரை அ.தி.மு.க.வினர் மத்தியில் திடீர் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×