search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "80 பாராளுமன்ற தொகுதி"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • திற்பரப்பு சந்திப்பு பகுதியிலிருந்து பெரிய ஏலா வழியாக அருவிப் பகுதிக்கு செல்லும் பாதையை மேம்படுத்த ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    களியல்-அழகியபாண்டி யபுரம் கூட்டுத்குடிநீர்த் திட்டத்தில் குழாய் பதிப்ப தற்காக சாலை உடைக்கப்பட்ட நிலை யில், களியல் முதல் உண்ணியூர்கோணம் வரையிலான 3.5 கி.மீ. பகுதிகள் சீரமைக்கப்படா மல் கிடப்பில் போடப்பட் டன.

    இந்நிலையில் இந்த சாலையை ரூ.80 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    திற்பரப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் தினேஷ், திருவட்டார் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜான்சன், திற்பரப்பு பேரூர் செயலாளர் ஜான் எபனேசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜெ.எம்.ஆர். ராஜா, குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட், திற்பரப்பு பேரூ ராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின் தாஸ், வார்டு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    திற்பரப்பு அருவியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் திற்பரப்பு சந்திப்பு பகுதியிலிருந்து பெரிய ஏலா வழியாக அருவிப் பகுதிக்கு செல்லும் பாதையை மேம்படுத்தி ஒருவழிப்பாதையில் வாகனங்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறுகையில், தமிழக அரசு சார்பில் திற்பரப்பு அருவியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள் ளன. தற்போது அருவிக்கு செல்லும் பாதையில் மாற்று ஒரு வழிப்பாதை அமைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அருவிப்பகுதியில் அரசுத்துறை சார்பில் தங்கும் விடுதி (யாத்ரா நிவாஸ்), கட்டுவது என்றும் கூடுதல் கழிப்பறைகள், கோவில் எதிரே உள்ள கல் மண்டபத்திற்கு செல்லும் பாலத்தை சீரமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றார்.

    • கடலில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்த வசதி செய்து தர வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.
    • ரூ.80 லட்சம் மதிப்பில் 32 படகுகள் வாங்கி உள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:-

    போஸ் ( அனைத்து விசை படகுகள் சங்க தலைவர்):- ரூ.8 லட்சம் சொந்த பணம் செலுத்தி மத்திய-மாநில அரசுகளின் மானியத்துடன் ரூ.80 லட்சம் மதிப்பில் 32 படகுகள் வாங்கி உள்ளோம். அவற்றை நிறுத்த துறைமுகம் இல்லை. பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் படகுகளுக்கு பாதுகாப்பு இல்லை.

    இதனால் ஆழ்கடல் படகு வாங்க விண்ணப்பித்த பலர் வேண்டாம் என எழுதி கொடுத்துள்ளனர். ஆழ்கடல் படகுக்குரிய வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். முதலீட்டை திரும்ப தரவேண்டும்.

    கருணாமூர்த்தி (கடல் தொழிலாளர் சங்கம்):- கடல்பாசி சேகரிக்கும் செல்லும் பெண்களுக்கு வனத்துறையினர் பாது காப்பு என்ற பெயரில் நெருக்கடி தருகின்றனர்.

    27 தீவுகளில் கடல்பாசி எடுக்க உரிமம் வழங்க வேண்டும். நல்ல தண்ணி தீவு கோவில்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். விசைப்படகினர் ஆழ்கடலில் மீன் பிடிக்காமல் கரையோரங்களில் மீன்பிடிப்பதால் நாட்டு படகு மீனவர்கள் பாதிக்கப்ப டுகின்றனர். இதனால் 130 கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தேவதாஸ் (மீனவர் விசைப்படகு சங்க செய லாளர், ராமேசுவரம்):- உயிரை பணயம் வைத்து மீன்பிடிக்கிறோம். அதற்கு ரிய விலை கிடைக்கவில்லை. 800 விசைப்படகுகள், 3000 நாட்டுப்படகுகள் உள்ளன. 1500 லிட்டர் டீசல் மானியம் போதுமானதாக இல்லை, அதை உயர்த்த வேண்டும். சேமிப்பு நிவாரணத்துடன் மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    ரெஜிஸ் (தங்கச்சி மடம்):-ஆழ்கடல் படகை ரூ.80 லட்சம் கொடுத்து வாங்கவும், பயன்படுத்தவும் ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளோம். படகுகளை நிறுத்த முடியவில்லை. தூண்டில் வலை இல்லை. கேரளா, நாகர்கோவில் பகுதிகளில் நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளோம். இதைத்தொ டர்ந்து சில மீனவர்கள் எலி மருந்தை சாப்பிட்டு சாகப்போகிறோம் என்று தெரிவித்து எலி 'பேஸ்ட்' பாக்கெட்டை காண்பித்தனர்.

    உடனே உதவி இயக்குனர் கோபிநாத், விரைந்து சென்று அவர்களிடமிருந்து அதனை பறித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

    மேலும் மீனவர்கள் பேசும்போது, மூக்கையூர் துறைமுகத்தில் டீசல் பம்ப் நிலையம் திறக்க வேண்டும். மடிவேலை பார்க்கும் மையம் இல்லாததால் தூத்துக்குடி செல்ல வேண்டியுள்ளது. பெண்களின் பாதுகாப்பி ற்காக மூக்கையூர் கடற்கரை பகுதியில் போலீஸ் சோதனை சாவடி அமைக்க வேண்டும். மீனவர்களின் குழந்தைகளுக்குரிய கல்வி உதவி தொகை தரவில்லை. பாசி எடுக்க செல்லும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றனர்.

    மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் பேசும்போது, மீனவர்கள் தெரிவித்த குறை கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

    கூட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் கோபிநாத், சிவராமசந்திரன், அப்துல் கலாம் ஜெயிலானி, மரைன் கூடுதல் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உள்பட மீன்வளத்துறை அதிகாரி கள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • 4 மாதங்களில் பணிகள் முழுமை பெறும்
    • கூடுதலாக 17 கோடி லிட்டா் குடிநீா் கிடைக்கும்

    கோவை:

    கோவை மாநகராட்சி மக்களுக்கு சிறுவாணி, பில்லூா் 1, பில்லூா் 2, ஆழியாறு, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 23 கோடி லிட்டா் குடிநீா் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் மாநகரப் பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக ரூ.779 கோடியில் பில்லூா் 3 குடிநீா்த் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, மருதூா் ஊராட்சி, தண்டிபெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த குடிநீா்த் திட்டப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில்,கோவை மாநகராட்சிப் பகுதிக்கு கூடுதலாக 17 கோடி லிட்டா் குடிநீா் கிடைக்கும். இதனால், மக்களின் குடிநீா்ப் பற்றாக்குறை முழுவதுமாகத் தவிா்க்கப்படும்.இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது: -

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூா் அணையில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டிபெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது. 3-வது குடிநீா்த் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில் 900 மீட்டா் தூரத்துக்கு மலையைக் குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இப்பணியை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்துள்ளது. அதோடு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது வரை பில்லூா் 3 குடிநீா்த் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 4 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என குலாம் நபி ஆசாத் இன்று அறிவித்துள்ளார். #Congresscontest #LokSabhaelections #GhulamNabiAzad
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்தன. இந்த இரு கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து பலமாக கூட்டணி அமைத்து பாஜகவுடன் மோதும் என எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

    எனினும், தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொண்ட சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர்கள் ராகுல் காந்தியின் அமேதி தொகுதி மற்றும் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் எங்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்தனர்.

    இந்த முடிவு காங்கிரஸ் பக்கம் இவ்விரு கட்சிகளும் பரிவு காட்டுவதைப்போல் தோன்றியது. அதற்கேற்ப, கடைசி நேரத்தில் இந்த கூட்டணிக்குள் காங்கிரசுக்கும் இடம் கிடைக்கலாம் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநில அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களின் அவசர கூட்டம் இன்று லக்னோ நகரில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத்,
    ‘பாஜகவை தோற்கடிப்பதற்காக அனைத்து கட்சிகளுடன் கைகோர்க்க தயார் என நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். ஆனால், சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தங்களுக்குள் மட்டும் ஒரு கூட்டணியை அமைத்துகொண்டு கதவை சாத்திக் கொண்டனர். அதனால், நாங்கள் யாரையும் வற்புறுத்த முடியாது.

    எனவே, வரும் தேர்தலில் தனியாகவே பாஜகவை வீழ்த்த நாங்கள் தயாராகி விட்டோம். உ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும். எங்களுடன் இணைந்து பாஜகவை வீழ்த்த நினைக்கும் மதச்சார்பற்ற கட்சிகளை வரவேற்போம்’ என குறிப்பிட்டார்.

    கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதலிடத்தை பெற்றதுபோல் காங்கிரஸ் வரும் தேர்தலிலும் முதலிடத்தை பிடிக்கும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட இருமடங்கு கூடுதலான இடங்களை நாங்கள் பிடிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.  #Congresscontest #80seatsofUP #LokSabhaelections #GhulamNabiAzad
    ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்போனில் புதிய செயலியை பயன்படுத்தி 80 பெண்களின் அந்தரங்க தகவல்களை திருடிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். எம்.சி.ஏ. பட்டதாரி.

    அந்த பகுதியில் உள்ள தனது உறவுக்கார பெண் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார் தினேஷ் குமார். அவரிடம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் ஆசை ஆசையாய் அனுப்பி வைத்த ஸ்மார்ட் போனை கொடுத்து அதில் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து கேட்டுள்ளார் அந்த பெண்.

    அந்த ஸ்மார்ட் போனில் டிராக் வியூ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார் அந்த டிராக் வியூ செயல்பாட்டை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்த ஏதுவாக வழிவகை செய்துள்ளார்.

    அந்த போனில் இருந்து அந்த பெண் கணவருடன் பேசும் அத்தனை அந்தரங்க விவகாரங்களையும் தன்னுடைய டிராக் வியூ செயலி மூலம் லேப் டாப்பில் பதிவு செய்துள்ளான் தினேஷ் குமார்.

    அவர் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளான். அதனை வைத்து, தான் யார் என்று தெரிவிக்காமல் அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கு இணக்கும் படி வற்புறுத்தி உள்ளான். பணியாவிட்டால் அந்தரங்க காட்சிகளையும் படங்களையும் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளான்.

    இதையடுத்து கடந்த ஒரு வாரமாக செய்வதறியாமல் தவித்த அந்த பெண் இந்த விவகாரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அவர், தனது சகோதரி அனுப்புவது போல, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று கூறி தினேஷ்குமாரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.

    அதனை உண்மை என்று நம்பிய தினேஷ் குமார் அங்கு வந்துள்ளார். அவனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரரரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தினேஷ்குமார் உறவு முறையில் அந்த பெண்ணிற்கு தம்பி என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.

    உடனடியாக தினேஷ் குமாரை பிடித்து விசாரித்த போது அவன் தான் அந்தரங்க வீடியோ மற்றும் புகைபடங்களை டிராக் வியூ ஆப் மூலம் திருடி வைத்துக்கொண்டு மிரட்டிய சைக்கோ என்பது தெரியவந்தது. அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தினேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவனது வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது அங்கிருந்து 2 மடி கணினிகள், 3 செல்போன்கள், பெண்களின் ஆடைகளையும் பறிமுதல் செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி ஒன்றில் கணினி டெக்னீசியனாக பணிபுரிந்த போது கல்லூரியில் படித்த மாணவி ஒருவரின் செல்போனில் இருந்து வீடியோக்களை திருடி மிரட்டி உள்ளார். அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததால் தினேஷ் குமாரை அடித்து விரட்டி உள்ளனர். அப்போது காவல்துறையில் புகார் ஏதும் அளிக்கவில்லை.

    அதன்பின்னர் தான் சந்தித்த உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என அனைவரது ஸ்மார்ட் போனையும் வாங்கி பார்ப்பது போல அவர்களது போனில் டிராக் வியூ செயலியை பதிவிறக்கம் செய்து அவற்றை தனது செல்போன் மற்றும் மடி கணினியின் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளான்.

    அந்தரங்க காட்சிகளுடன் சிக்கும் பெண்களை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளான். அப்படி ஆசைக்கு இணங்கிய பெண்களின் ஆடைகளை மட்டும் அவனது வீட்டில் சேகரித்து வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசைக்கு இணங்காத பெண்களின் வீடியோக்களை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகின்றது.

    தினேஷ்குமார் வெளிநாட்டில் இருந்து பேசுவது போல இணைய வழி தொலைபேசி மூலம் பலரிடம் பேசி உள்ளான். இதனால் அவனை யார் என அடையாளம் காணமுடியாமல் பல பெண்கள் தவித்துள்ளனர்.


    அவனது ஒரு மடிக்கணியில் இருந்து மட்டும் 80-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க காட்சிகளையும், ஏராளமான பெண்களின் அந்தரங்க உரையாடல்களையும் காவல்துறையினர் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

    இதில் பெரும்பாலானோர் தினேஷ்குமாரின் உறவினர்கள் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

    இதில் அவன் உடன் பிறந்த சகோதரி தனது கணவருடன் பேசிய அந்தரங்க உரையாடல்களும் , கணவருடன் உள்ள அந்தரங்க புகைபடங்களையும் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    தினேஷ்குமார் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நடராஜன், தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    சென்னை மற்றும் அருப்புக்கோட்டை எஸ்பிகே கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ரூ.80 கோடி ரொக்கத்துடன் 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளது.
    சென்னை:

    சென்னை மற்றும் அருப்புக்கோட்டை எஸ்பிகே கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை, அருப்புக்கோட்டை,மதுரை உட்பட 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டையில் செய்யாதுரை என்பவருக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவனத்தின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

    இந்த சோதனையில், ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜாய்ஸ் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முட்டை கொள்முதல் ஊழல் தொடர்பாக  பல்வேறு இடங்களில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடந்த நிலையில் இன்று நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
    சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் 80 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #ITRaid #SPK
    சென்னை:

    தமிழகத்தில் சாலைப்பணிகள் உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை ஆராய்ந்த அதிகாரிகள் இன்று சோதனை நடத்த முடிவு செய்தனர்.  அதன்படி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.



    சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் இந்த சோதனையின்போது ரூ.80 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சோதனை நடப்பதால், சோதனை நிறைவுற்ற பிறகே, முழு விவரமும் வெளியாகும்.

    முட்டை கொள்முதல் ஊழல் தொடர்பாக  பல்வேறு இடங்களில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடந்த நிலையில் இன்று நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. #ITRaid #SPK 
    ×