search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை பில்லூா் 3 குடிநீா்த் திட்ட பணிகள் 80 சதவீதம் நிறைவு
    X

    கோவை பில்லூா் 3 குடிநீா்த் திட்ட பணிகள் 80 சதவீதம் நிறைவு

    • 4 மாதங்களில் பணிகள் முழுமை பெறும்
    • கூடுதலாக 17 கோடி லிட்டா் குடிநீா் கிடைக்கும்

    கோவை:

    கோவை மாநகராட்சி மக்களுக்கு சிறுவாணி, பில்லூா் 1, பில்லூா் 2, ஆழியாறு, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 23 கோடி லிட்டா் குடிநீா் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் மாநகரப் பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக ரூ.779 கோடியில் பில்லூா் 3 குடிநீா்த் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, மருதூா் ஊராட்சி, தண்டிபெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த குடிநீா்த் திட்டப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில்,கோவை மாநகராட்சிப் பகுதிக்கு கூடுதலாக 17 கோடி லிட்டா் குடிநீா் கிடைக்கும். இதனால், மக்களின் குடிநீா்ப் பற்றாக்குறை முழுவதுமாகத் தவிா்க்கப்படும்.இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது: -

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூா் அணையில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டிபெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது. 3-வது குடிநீா்த் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில் 900 மீட்டா் தூரத்துக்கு மலையைக் குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இப்பணியை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்துள்ளது. அதோடு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது வரை பில்லூா் 3 குடிநீா்த் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 4 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×