search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வாகனம்"

    • ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 5 வீரர்கள் பலியாகினர்.
    • இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது.

    இந்த கோர விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது என முதல் கட்ட தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் தான் ராணுவ வாகனம் தீ பிடித்துள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ராணுவம் கண்டறிந்துள்ளது.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    • ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது.

    இந்த கோர விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    • கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் காயம் அடைந்த 4 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்திற்கு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஜீமா என்ற இடத்தில் வளைவில் திரும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்களில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயம் அடைந்த 4 வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×