search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்டின்"

    • அதிக நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.
    • அதிக மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியவர் மார்டின்.

    அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க இந்தியாவில் நடைமுறையில் உள்ள வழக்கம் தான் தேர்தல் பத்திரங்கள். இதை கொண்டு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க முடியும்.

    அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வடிவில் கடந்த 2018 முதல் 2024 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி கிடைத்துள்ளது, அதனை யார் வழங்கினர் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

     


    இவை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வலைதள விவரங்களின் படி அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை அவர்களுக்கு அதிக நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அதன்படி லாட்டரி அதிபர் மார்டின் தி.மு.க. கட்சிக்கு ரூ. 509 கோடி வரை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். நாட்டிலேயே அதிக மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியவர் மார்டின். இவர் தான் வாங்கிய தேர்தல் பத்திரங்களில் 37 சதவீத தொகையை தி.மு.க. கட்சிக்கு வழங்கியுள்ளார். இதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது."

    "சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது."

    "ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது."

    "மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க. கட்சி ரூ. 656.8 கோடி பெற்று இருக்கிறது.
    • யார் கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    லாட்டரி அதிபர் மார்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகளவு தேர்தல் பத்திரங்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கிய தேர்தல் பத்திரங்களில் ரூ. 509 கோடி மதிப்பிலான பத்திரங்களை தமிழ் நாட்டில் ஆளும் தி.மு.க. கட்சிக்கு வழங்கியுள்ளார்.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க. கட்சி ரூ. 656.8 கோடி பெற்று இருக்கிறது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் பத்திரங்கள் வடிவில் நிதி வழங்க முடியும்.

    இது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் எவ்வளவு நிதி பெற்றுள்ளது, அதனை யார் கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    அதன்படி பியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ. 1368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இதில் 37 சதவீதம் தொகையை பியூச்சர் கேமிங் நிறுவனம் தி.மு.க. கட்சிக்கு வழங்கி உள்ளது. பியூச்சர் கேமிங் மட்டுமின்றி மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ. 105 கோடியும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ. 14 கோடியும், சன் டி.வி. ரூ. 100 கோடியும் வழங்கி உள்ளது.

    • நடிகர் துருவா சர்ஜா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மார்டின்’.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

    இயக்குனர் ஏபி அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் திரைப்படம் 'மார்டின்'. இப்படத்தில் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    நடிகர் அர்ஜுன் கதை எழுதியுள்ள இப்படத்தை வசாவி எண்டர்பிரைசஸ் (Vasavi Enterprises) சார்பில் தயாரிப்பாளர் உதய் கே மேத்தா தயாரிக்கிறார். பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.


    இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் கே மேத்தா, நடிகர் அர்ஜுன், இயக்குனர் ஏபி அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


    இப்படத்தின் டீசர் ஆக்ஷன் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும் துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்றுவரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.




    ×