search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் சாதனை"

    • திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.
    • 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்ட கல்வி துறை சார்பில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கான திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.

    இதில் நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். இதில் அப்பள்ளியை சேர்ந்த சிவசங்கரி, பிரிய தர்ஷினி, நதியா, பிரியங்கா ஆகிய 4 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் ரூ.1500 வீதம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.

    வெற்றி பெற்ற மாணவி களை பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராசு, தேர்வு பொறுப்பாசிரியர் செந்தில் அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • இந்த கல்லூரியில் கடந்த ஏப்ரல் 2023ல் கோவை பாரதியார் பல்கலைக்கழக பருவ தேர்வு நடந்தது.
    • திருப்பூர் குமரன் கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக தேர்வில் சாதித்துள்ளனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் குமரன் கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக தேர்வில் சாதித்துள்ளனர்.திருப்பூர் மங்கலம் ரோட்டில் செயல்படும் இந்த கல்லூரியில் கடந்த ஏப்ரல் 2023ல் கோவை பாரதியார் பல்கலைக்கழக பருவ தேர்வு நடந்தது. இதில் பி.காம்., பாடப்பிரிவில் மாணவி ஸ்வேதா, பி.காம்., (கோ-ஆபரேஷன்) பாடப்பிரிவில் கீர்த்தனா, பி.எஸ்சி., (கணிதம் சி.ஏ.,) பாடப்பிரிவில் மாணவி அனுசுயா, எம்.காம்., சி.ஏ., பாடப்பிரிவில் சரண்யா, எம்.எஸ்சி., கணிதம் பாடப்பிரிவில் சுகுணா, எம்.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவில் உம்மு குல்சம் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர்.மேலும் 44 ரேங்க்குகளை இக்கல்லுாரி மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதித்த மாணவிகளை கல்லூரி தலைவர் மற்றும் தாளாளர் அர்த்தனாரீஸ்வரன், கல்லூரி முதல்வர் வசந்தி மற்றும் நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

    • சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    • 9 மாணவி கள் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் சென்ற 17 மற்றும் 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.

    இதில் மாணவிகளுக்கான கபடி போட்டியில் சூப்பர் சீனியர் எனப்படும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மத்தூர் கலைமகள் கலாலயா பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மாநில அளவிலான கபடி போட்டிக்கு வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் சூரிய மூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, கலைமகள் களாலயா பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மோகன் உள்ளிட்டோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி னார்கள்.

    கலைமகள் பள்ளியின் சூப்பர் சீனியர் கபடி குழுவின் கேப்டன் ரஞ்சனி மற்றும் துணை கேப்டன் பவித்ரா உள்பட 9 மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் சிதம்பரத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
    • பள்ளியின் முதல்வா் சின்னையா, துணை முதல்வா் ரவி, உடற்கல்வி ஆசிரியா்கள் பாலமுருகன், மோகனசுந்தரம் ஆகியோா் பாராட்டினா்.

    திருப்பூர்:

    இந்தியாவின் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் சிதம்பரத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 10 ம் வகுப்பு மாணவி தியாஸ்ரீ வெற்றி பெற்று தேசிய அளவிலான கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா். அதேபோல, கே.பி.ஆா். கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 9 ம் வகுப்பு மாணவி திவ்யா வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளியின் முதல்வா் சின்னையா, துணை முதல்வா் ரவி, உடற்கல்வி ஆசிரியா்கள் பாலமுருகன், மோகனசுந்தரம் ஆகியோா் பாராட்டினா்.

    • மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.

    பரமக்குடி

    மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி யுவஸ்ரீபிரபா 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் கலந்து கொண்டு முதலிடத்தையும் தங்கப் பதக்கத்தையும் வென்றார். 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் வாணிஸ்ரீ கலந்து கொண்டு மாநில அளவில் வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். இம்மாணவிகள் அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.

    வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா, அன்புச்செல்வி ஆகியோரை கீழமுஸ்லிம் ஜமாஅத் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கதலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் ஜாஜஹான் தலைமையில் ஆசிரியர் அஜ்மல்கான், உதவித்தலைமை ஆசிரியர் புரோஸ்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • பள்ளியில் படித்த மாணவி சைலஜா 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
    • பள்ளியில் சிறப்பிடம் பெற்று பெருமை சேர்த்த மாணவி, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இந்த பள்ளியில் படித்த மாணவி சைலஜா 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.

    நிரஞ்ஜனா மற்றும் நவீன் ஆகியோர் 590 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 62 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    வேதியலில் 7 பேரும், கணினி பயன்பாட்டியலில் 2 பேரும், கணினி அறிவியலில் ஒருவரும், பொருளியலில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் தமிழில் 27 பேரும், ஆங்கிலத்தில் 15 பேரும், இயற்பியலில் 16 பேரும், வேதியியலில் 30 பேரும், உயிரியலில் 19 பேரும், கணித பாடத்தில் 10 பேரும், கணினி அறிவியலில் 10 பேரும், கணக்கு பதிவியலில் 7 பேரும் 100-க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

    பள்ளியில் சிறப்பிடம் பெற்று பெருமை சேர்த்த மாணவி, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

    மேலும் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலர் டாக்டர் சந்தோஷ், பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் பாராட்டினார்கள்.

    • அகில இந்திய செயல்திட்டப் போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளது.
    • இந்த செயல்திட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்த பேராசிரியர்கள் கருப்பசாமி, கார்த்திகேயன், சங்கர் கணேஷ் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    சிவகாசி

    ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில், அடல் இன்னோவேசன் சென்டர் சார்பில் அகில இந்திய அளவில், கல்லூரி மாணவர்களுக்கான செயல் திட்டப் போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இதில் தங்களின் படைப்புகளை சமர்ப்பித்தனர். இவர்களில் 30 குழுக்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டு 3 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. இறுதிச் சுற்றில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி இரண்டாமாண்டு மாணவிகள் சந்தியா, மெர்லின் எஸ்தர், நித்யஸ்ரீ மற்றும் பவித்ரா குழுவினர் 3-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி பிரித்தெடுப்பது என்பது விளக்கும் செயல்திட்டத்தை இவர்கள் சமர்ப்பித்திருந்தனர். வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி, முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை தலைவர் வளர்மதி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். இந்த செயல்திட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்த பேராசிரியர்கள் கருப்பசாமி, கார்த்திகேயன், சங்கர் கணேஷ் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • கராத்தே போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
    • சப்- கலெக்டர் சரண்யா, சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    ஒசூர்,

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்தியவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

    தென் இந்தியாவிற்கான 8-வது தேசிய கராத்தே போட்டி பெங்களூரில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 5 வயது முதல் 13 வயது வரையிலான சுமார் 1500 மாணவர்கள் இந்த போட்டியில் பங்குபெற்றனர். இதில் ஓசூரில் உள்ள ஜப்பான் சோட்டேகான் கராத்தே அகாடமி என்ற பயிற்சிப் பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டு ,11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் பெற்றும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் சுழற்கோப்பையை வென்றும் சாதனை புரிந்தனர். .

    இதனைத் தொடர்ந்து, ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சப்- கலெக்டர் சரண்யா, சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் ரவி, காரனேசன் கிளப் செயலாளர் திருப்பதிசாமி, கராத்தே சங்க மேலாளர் ஜெயராமன் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.
    • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். 9 மற்றும் 10ம் வகுப்பு பிரிவுகளில் மனிதநேயம் பாடல் மற்றும் தலைப்பை ஒட்டி வரைதல், கவிதை புனைதலில் முதலிடமும், ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனம், தனி ஆங்கிலம் செவ்வியல் பாடல் தனி ஓவியம் வரைதலில் 2ம் இடமும் , செவ்வியல் நடன குழு , மேற்கத்திய நடன குழு,  நாட்டுப்புறப் பாடல் , தனி காகித வேலைப்பாடு ஆகியவற்றில் 3ம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    நடனத்திற்கு பயிற்சி அளித்த பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் விஜயலட்சுமி மற்றும் இசை ஆசிரியர் கஜலட்சுமி ஓவிய ஆசிரியர் லாவன்யா ,தமிழாசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் விஜயா பாராட்டு தெரிவித்தார். முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

    • தருமபுரி மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
    • முகேஷ் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வளையப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சாந்தினி மூத்தோர் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

    தருமபுரி மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். மாணவர் தேவஅபிஷேக் மேல் மூத்தோர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

    டேக் வோண்டு போட்டியில் மூத்தோர் 52 கிலோ எடைப் பிரிவில் மாணவர் முகேஷ் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

    ஜீடோ போட்டியில் மூத்தோர் ஒற்றையர் பிரிவில் மாணவர் மணிகண்டன் 60 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

    தடகள போட்டியில் (நீளம் தாண்டுதலில்) மாணவி நந்தனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டியில் 4.10 மீட்டர் நீளம் தாண்டி மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

    ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் தண்வந்திரிபிரபு இளைஞர் பிரிவில் தங்கம் வென்று தெற்கு ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளிதாளாளர் உதயகுமார், பள்ளி செயலாளர் சவிதா உதயகுமார், இயக்குநர் ஸ்ருதி உதயகுமார், பள்ளி முதல்வர் ஜெயராஜ், பள்ளி துணை முதல்வர் குமரன்,உடற்கல்வி ஆசிரியர்கள் மாரியப்பன், பிரகதீஸ்,அரவிந்த்குமார், மணிமொழி மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பர்கூர் சரக அளவிலான விளையாட்டு போட்டி அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    • 48 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சரக அளவிலான விளையாட்டு போட்டி அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இந்த போட்டிகளில் பருகூர் சரக அளவில் உள்ள 48 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் சூலாமலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரம் மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் ஆண்கள் பிரிவில் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சச்சின்குமார் என்பவர் முதலிடமும், பெண்கள் பிரிவில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா இரண்டாம் இடமும், பத்தாம் வகுப்பு படிக்கும் மதுமிதா மூன்றாம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர் மேலும் 14 வயதுக்குட்பட்ட 600 மீட்டர் ஓட்டப்பந்தய பெண்கள் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஷாலினி மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    இந்த சாதனை படைத்து, பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சூலாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

    விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பத்மப்ரியா தலைமை வகித்து, சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் பரத்குமார், கனிமொழி, பப்பில்லா ஆரோக்கியமேரி, விஜயலட்சுமி, சபிதா தனலட்சுமி மற்றும் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    • பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது.
    • முதல் பரிசான தங்கப் பதக்கத்தை மாணவிகள் வென்றனர்.

    திருப்பூர் :

    தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவிகளான சத்யா, நிஷாந்தி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்று, முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வென்றனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகள் சத்யா, நிஷாந்தி ஆகியோரை பள்ளி தலைவரும், தாளாளருமான பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில், துணை தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பிவிஎஸ் பி.முருகசாமி, செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓகே எம்.கந்தசாமி, இணை செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி மற்றும் பள்ளி முதல்வர் சுமதி, ஆசிரிய-ஆசிரியைகள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    ×