search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில்   தருமபுரி டான் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
    X

    மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் தருமபுரி டான் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

    • தருமபுரி மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
    • முகேஷ் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வளையப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சாந்தினி மூத்தோர் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

    தருமபுரி மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். மாணவர் தேவஅபிஷேக் மேல் மூத்தோர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

    டேக் வோண்டு போட்டியில் மூத்தோர் 52 கிலோ எடைப் பிரிவில் மாணவர் முகேஷ் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

    ஜீடோ போட்டியில் மூத்தோர் ஒற்றையர் பிரிவில் மாணவர் மணிகண்டன் 60 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

    தடகள போட்டியில் (நீளம் தாண்டுதலில்) மாணவி நந்தனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டியில் 4.10 மீட்டர் நீளம் தாண்டி மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

    ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் தண்வந்திரிபிரபு இளைஞர் பிரிவில் தங்கம் வென்று தெற்கு ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளிதாளாளர் உதயகுமார், பள்ளி செயலாளர் சவிதா உதயகுமார், இயக்குநர் ஸ்ருதி உதயகுமார், பள்ளி முதல்வர் ஜெயராஜ், பள்ளி துணை முதல்வர் குமரன்,உடற்கல்வி ஆசிரியர்கள் மாரியப்பன், பிரகதீஸ்,அரவிந்த்குமார், மணிமொழி மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×