திறனாய்வு தேர்வில் நத்தமேடு அரசு பள்ளி மாணவிகள் சாதனை

திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.
சாதனை படைத்த பள்ளி மாணவிகளை படத்தில் காணலாம்.
சாதனை படைத்த பள்ளி மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

கடத்தூர்,

தருமபுரி மாவட்ட கல்வி துறை சார்பில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கான திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.

இதில் நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். இதில் அப்பள்ளியை சேர்ந்த சிவசங்கரி, பிரிய தர்ஷினி, நதியா, பிரியங்கா ஆகிய 4 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் ரூ.1500 வீதம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.

வெற்றி பெற்ற மாணவி களை பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராசு, தேர்வு பொறுப்பாசிரியர் செந்தில் அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com