பல்கலைக்கழக தேர்வில் திருப்பூர் குமரன் கல்லூரி மாணவிகள் சாதனை

இந்த கல்லூரியில் கடந்த ஏப்ரல் 2023ல் கோவை பாரதியார் பல்கலைக்கழக பருவ தேர்வு நடந்தது.திருப்பூர் குமரன் கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக தேர்வில் சாதித்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர் : 

திருப்பூர் குமரன் கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக தேர்வில் சாதித்துள்ளனர்.திருப்பூர் மங்கலம் ரோட்டில் செயல்படும் இந்த கல்லூரியில் கடந்த ஏப்ரல் 2023ல் கோவை பாரதியார் பல்கலைக்கழக பருவ தேர்வு நடந்தது. இதில் பி.காம்., பாடப்பிரிவில் மாணவி ஸ்வேதா, பி.காம்., (கோ-ஆபரேஷன்) பாடப்பிரிவில் கீர்த்தனா, பி.எஸ்சி., (கணிதம் சி.ஏ.,) பாடப்பிரிவில் மாணவி அனுசுயா, எம்.காம்., சி.ஏ., பாடப்பிரிவில் சரண்யா, எம்.எஸ்சி., கணிதம் பாடப்பிரிவில் சுகுணா, எம்.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவில் உம்மு குல்சம் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர்.மேலும் 44 ரேங்க்குகளை இக்கல்லுாரி மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாதித்த மாணவிகளை கல்லூரி தலைவர் மற்றும் தாளாளர் அர்த்தனாரீஸ்வரன், கல்லூரி முதல்வர் வசந்தி மற்றும் நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com