search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழக்கடை"

    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக விருத்தாசலம் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
    • பொருட்கள் அனைத்தையும் லாரியில் ஏற்றி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் வைத்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாறு பாலத்தின் நடைபாதையில் ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்டோர் கடைகள் வைத்திருந்தனர். இக்கடைகள் பாலத்தின் மீது நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக விருத்தாசலம் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த பழக்கடை, காய்கறி கடை மற்றும் பேன்சி கடைகளை அகற்றினர். மேலும், பொருட்கள் அனைத்தையும் லாரியில் ஏற்றி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2 மாம்பழ குடோன்களில் வேதிப்பொருட்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்ப ட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
    • மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்பிற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூரில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருட்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, பாலமுருகன், தங்கவேல், கேசவராஜ், கோடீஸ்வரன், சிரஞ்சீவி, ரகுநாதன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நான்கு குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே. எஸ் .சி. ஸ்கூல் ரோடு, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி, நொய்யல் வீதி மற்றும் வெள்ளியங்காடு ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் வாழைப்பழ குடோன்களில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது 2 மாம்பழ குடோன்களில் வேதிப்பொருட்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்ப ட்டிருப்பதை கண்டு பிடித்தனர். அங்கு இருந்து சுமார் 3.50 டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்பிற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2.50லட்சம் ஆகும். இது தொடர்பாக 5 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள் வைத்தி ருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறிய தாவது:-

    பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும் .எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படி யாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது. சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே பழங்களை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு ,அசிட்டலின் போன்ற ரசா யனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. இவ்வாறு செய ற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் போது உடல் உபாதைகள் ஏற்படும்.

    குறிப்பாக செயற்கையான முறையில் பழுக்க வைக்க ப்பட்ட மாம்பழம் சாப்பி ட்டால் தோல் அலர்ஜி ,வயிற்று வலி ,வயிற்று ப்போக்கு, வாந்தி ஏற்படும். ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்ப ழங்களின் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் .உட்பகுதி காயாக இருக்கும் .பழச்சாறு அளவு குறைவாக இருக்கும். பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். மாம்பழ விற்பனை உரிமை யாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார்.

    • தொழில் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது .
    • அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து நம்பியம்பாளையத்தை சேர்ந்தவர் பூவேஸ். இவர் அந்தப் பகுதியில் காய்கறி மற்றும் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் தொழில் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் நேற்று சந்தோஷ் அந்த கடைக்குள் புகுந்து பூவேசை திட்டியும் அங்கு இருந்த காய்கறி ,பழம் ஆகியவற்றை எடுத்து வீசி எறிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தந்தை, மகனான மகேந்திரன், சதிஷ் ஆகியோர் பழக்கடை நடத்தி வருகின்றனர்.
    • அங்கமங்கலம் தோணிபாலம் அருகே சதிஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    குரும்பூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் அடுத்த மாரியம்மாள்புரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் சதிஷ் (வயது 23). இவரும், இவரது தந்தையும் திருச்செந்தூர் கே.டி.சி. டெப்போ அருகே பழக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த மாசானமுத்து (25) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சதிஷ் பைக் வாங்குவதற்காக திருச்செந்தூர் வங்கியில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொண்டு வங்கியிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த மாசானமுத்து, உன் தந்தை என்னிடம் வாங்கிய கடன் ரூ.1 லட்சத்தை தரவில்லை என்று தகராறு செய்து, அந்த பணத்தை பறித்து கொண்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த சதிஷ் அங்கமங்கலம் தோணிபாலம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலமுருகன் என்பவரது பழக்கடையில் 5½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
    • பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது கடையிலும் 1½ கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மலையான்குளம் பகுதியிலுள்ள ஒரு பழக்கடையில் குட்கா விற்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாலமுருகன் என்பவரது பழக்கடையை சோதனை செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 5½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர் .மேலும் இதேபோல் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது கடையிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடமிருந்து சுமார் 1½ கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். 

    • குளச்சல் களிமார் பாலம் அருகில் பழக்கடையில் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.22 ஆயிரம் திருட்டு.
    • குளச்சல் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல்மார்க்கெட் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). இவர் களிமார் பாலம் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் வியாபாரம் முடிந்ததும் இரவில் கடையை பூட்டிச் சென்றார். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு ராஜேஷ் கடையை திறக்க வந்தார்.

    அப்போது கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்க்கும்போது மேசை டிராயரில் வைத்து சென்ற ரூ.22 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ராஜேஷ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×