search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரபரப்பு புகார்"

    • நர்சுகள் பொதுநல சங்க மாநில நிர்வாகிகள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு டாக்டர் கடந்த சில மாதங்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டி எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நர்சுகள் பொதுநல சங்க மாநில நிர்வாகிகள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் நான் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு டாக்டர் கடந்த சில மாதங்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டி எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். நான் இந்த மருத்துவமனைக்கு வந்த புதிதிலும் இதே போல மிரட்டி மன உளைச்சலை ஏற்படுத்தினார். பணியின்போதும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் பணியை சரியாக செய்தபோதும் வேண்டுமென்றே கண்டிப்பது போல திட்டிவிட்டு பின் ஏன் என்னிடம் வந்து நீ மன்னிப்பு கேட்கவில்லை என கேட்டு இதேபோன்று தொடர்ச்சியாக துன்புறுத்தி வருகிறார். மேலும் இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    • நீதிமன்றத்திற்கு வந்தவர் காணாமல் போய் விட்டதாக புகார் அளித்துள்ளார்.
    • காணாமல் போனாரா? அல்லது கடத்தப்பட்டு இருப்பாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ராஜா கொள்ளஹள்ளி அரக்காசன கொட்டாய் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், அவருடைய தாயார் நாகமணி நீதிமன்றத்திற்கு வந்தவர் காணாமல் போய் விட்டதாக புகார் அளித்துள்ளார்.

    அந்தப் புகார் மனுவில் ஜெயக்குமார் அவருடைய தந்தை முருகன் மற்றும் தாயார் நாகமணி (வயது 45) ஆகியோர் நேற்று முன் தினம் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு ஏற்கனவே விசாரணை நடைபெற்று வந்த வழக்கிற்கு ஆஜராகுவதற்காக தடங்கம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மேல் தளத்தில் ஜெயக்குமார் மற்றும் அவருடைய தந்தை சென்ற பொழுது அவருடைய தாயார் தரைதளத்தில் காத்திருந்ததாகவும் மீண்டும் வந்து தேடி பார்த்த பொழுது தாயாரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர்களுடைய விசாரணை நடைபெற்று வந்த வழக்கானது அடிதடி சம்பந்தப்பட்ட வழக்கு அவற்றின் இறுதி கட்ட வாய்தாவிற்காக தான் அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோர்ட் வளாகத்தில் இருந்து காணாமல் போனதாகவும் அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புகாரை பெற்றுக் கொண்ட அதியமான் கோட்டை காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தவர் காணாமல் போனது பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் காணாமல் போனாரா? அல்லது கடத்தப்பட்டு இருப்பாரா? அல்லது ஏதேனும் திசை திருப்பும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பணம் ரூ.100 வாங்கி கொண்டு சென்றார்,
    • தாகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்

    கடலூர்:

    சிதம்பரம் பழைய புவனகிரி ரோடு தொழிலாளர் குடியிருப்பில் வசிப்பவர் சுதாகர் (வயது 42) . இவர் தட்டுவண்டி தொழிலாளி . சம்பவத்தன்று காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பணம் ரூ.100 வாங்கி கொண்டு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் பெரிய காஜியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சுதாகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவரது மகன் சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் செல்வக்குமார் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடந்த 8-ந் தேதி அருள்குமார் தனது விவசாய நிலத்தில் பணியை முடித்து விட்டு அருகில் உள்ள பண்ணைக்குட்டைக்கு குளிக்கச் சென்றார்.
    • தொடர்ந்து அருள்குமார் மரணம் மர்மச்சாவாக மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    கோவை

    அன்னூரை அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார் (வயது 33). கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.

    இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

    புதுமாப்பிள்ளை

    கடந்த 8-ந் தேதி அருள்குமார் தனது விவசாய நிலத்தில் பணியை முடித்து விட்டு அருகில் உள்ள பண்ணைக்குட்டைக்கு குளிக்கச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    நீண்டநேரமாகியும் அருள்குமார் வீடு திரும்பாததால் அவரது மனைவி சம்யுக்தா தேடத் தொடங்கினார்.

    உறவினர்கள் அருள்குமாரை தேடி பண்ணைக்குட்டைக்கு சென்றனர். அங்கு நீரில் மூழ்கிய நிலையில் அருள்குமார் பிணமாக மிதந்தார்.

    சாவில் மர்மம்

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அருள்குமாரின் உடலை மீட்டனர். அருள்குமார் பண்ணை குட்டை நீரில் மூழ்கி இறந்து இருப்ப தாக கூறப்பட்டது. இதுதொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அருள்கு மார் மரணத்தில் சந்தே கம் இருப்பதாக கூறி அவரது மாமனார் ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எனது மகளின் கணவரான அருள்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அருள்குமார் குளிக்கச் சென்ற தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம் போலீசார் விசாரிக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த மனுவை தொடர்ந்து அருள்குமார் மரணம் மர்மச்சாவாக மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    • 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்தனர்.
    • நத்தம் இரட்டை கொலை சம்பவத்தில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியைச் சேர்ந்தவர் தங்கராஜா (வயது 41). டி.வி. மெக்கானிக். இவர் கடந்த 6-ந் தேதி தனது கடை முன்பு நின்று பேசிக் கொண்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரிவாளால் வெட்டியதில் தங்கராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ஒன்று கூடி உதயகுமாரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த உதயகுமாரும் உயிரிழந்தார். அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் லிங்கவாடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து உதயகுமாரை அடித்துக் கொன்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தங்கராஜாவின் தந்தை தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்தனர். அதில் இரட்டை கொலை சம்பவத்தில் நத்தம் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். குறிப்பாக ஜாதிய ரீதியில் குற்றவாளிகளை அடையாளப் படுத்துகின்றனர்.

    மேலும் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் இரவு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. ஏற்கனவே போலீசார் மீது அடிக்கடி பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் அது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இல்லையெனில் லிங்கவாடி கிராம மக்கள் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றனர்.

    • வீரக்கல் ஊராட்சி தலைவர் மீது 8 உறுப்பினர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
    • நேரடியாக வைத்து விசாரணை நடத்துவதாக கூறியதை யடுத்து வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், வீரக்கல் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல், துணைத் தலைவராக இருப்பவர் யூசின்ராஜா ஆகியோர் வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை.

    தலைவரும், துணைத் தலைவரும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், வரவு செலவு கணக்குகளை முறையாக காண்பிப்பது இல்லை என்றும் தொடர்ந்து உறுப்பினர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் தனிநபர் கழிப்பறை திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என்பது உட்பட பல்வேறு புகார்களை கூறி வேல்வள்ளி, அம்சவள்ளி, ராமசந்திரன், ரேணுகாமேரி, தீபா, நாகலட்சுமி, மதன்குமார், மூர்த்தி உட்பட 8 வார்டு உறுப்பினர்கள் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையானிடம் புகார் மனு கொடுத்தனர்.

    ஊராட்சி நிர்வாகம் முறையாக செயல்பட வேண்டும். எந்தப் பணியைச் செய்தாலும் வார்டு உறுப்பினர்களை கலந்து ஆலோசித்த பின்னரே செய்ய வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்தனர். வார்டு உறுப்பினர்களின் புகார் மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான் ஒரு வார காலத்தில் வீரக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் வார்டு உறுப்பினர்களை நேரடியாக வைத்து விசாரணை நடத்துவதாக கூறியதையடுத்து வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

    ×