என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி கோர்ட்டுக்கு வந்த பெண் மாயம்: மகன் பரபரப்பு புகார்
    X

    தாய் காணமல் போனதாக புகார் தர வந்த மகன்.

    தருமபுரி கோர்ட்டுக்கு வந்த பெண் மாயம்: மகன் பரபரப்பு புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீதிமன்றத்திற்கு வந்தவர் காணாமல் போய் விட்டதாக புகார் அளித்துள்ளார்.
    • காணாமல் போனாரா? அல்லது கடத்தப்பட்டு இருப்பாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ராஜா கொள்ளஹள்ளி அரக்காசன கொட்டாய் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், அவருடைய தாயார் நாகமணி நீதிமன்றத்திற்கு வந்தவர் காணாமல் போய் விட்டதாக புகார் அளித்துள்ளார்.

    அந்தப் புகார் மனுவில் ஜெயக்குமார் அவருடைய தந்தை முருகன் மற்றும் தாயார் நாகமணி (வயது 45) ஆகியோர் நேற்று முன் தினம் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு ஏற்கனவே விசாரணை நடைபெற்று வந்த வழக்கிற்கு ஆஜராகுவதற்காக தடங்கம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மேல் தளத்தில் ஜெயக்குமார் மற்றும் அவருடைய தந்தை சென்ற பொழுது அவருடைய தாயார் தரைதளத்தில் காத்திருந்ததாகவும் மீண்டும் வந்து தேடி பார்த்த பொழுது தாயாரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர்களுடைய விசாரணை நடைபெற்று வந்த வழக்கானது அடிதடி சம்பந்தப்பட்ட வழக்கு அவற்றின் இறுதி கட்ட வாய்தாவிற்காக தான் அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோர்ட் வளாகத்தில் இருந்து காணாமல் போனதாகவும் அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புகாரை பெற்றுக் கொண்ட அதியமான் கோட்டை காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தவர் காணாமல் போனது பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் காணாமல் போனாரா? அல்லது கடத்தப்பட்டு இருப்பாரா? அல்லது ஏதேனும் திசை திருப்பும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×