search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதுக்கல்"

    • சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
    • உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மணியனூர் காந்தி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இது குறித்த தகவலின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து கடத்தலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (60) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பலகாரம், தின்பண்டங்கள் விற்கும் கடைகளுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • திருட்டுத்தனமாக பதுக்கி ைவக்கப்பட்டிருந்த 187 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 31 பேர் கைதாகினர்.
    • தல்லாகுளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி உள்பட பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்தந்த பகுதிகளில் திடீர் சோதனை ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த 31 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 187 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக தல்லாகுளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற செல்லூர் மீனாட்சிபுரம் ஜீவா நகரை சேர்ந்த காமராஜை(57) கைது செய்தார். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.4 ஆயிரத்து 169-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காரைக்காலில் இருந்து பாக்கெட் சாராயத்தை கடத்திவந்து பதுக்கி வைத்து விற்பனை.
    • போலீசார் விமல்ராஜை கைது செய்து சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் கள்ள சாராயம் விருப்பதாக மயிலாடுதுறை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்ததை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டன.

    அப்போது ராஜாத் தெரு, திருவிழந்தூர் பல்லவராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் விமல்ராஜ் (வயது 20). இவர் காரைக்காலிருந்து பாக்கெட் சாராயத்தை கடத்திவந்து பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான அன்பரசன் உள்ளிட்ட போலீசார் சாராயம் விற்பனை செய்து வந்த விமல்ராஜை கைது செய்து சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    • அனுமதி பெறாமல் உள்ள பட்டாசு கடைகள் குறித்த போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
    • பதுக்கி வைக்கப்பட்ட சுமார் ஒரு கோடி மதிப்பிலான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நீடாமங்கலம்:

    ‌ திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதி குட்டி சிவகாசி என்றும் அழைக்கப்படுவதும் உண்டு.

    இதில் அனுமதி பெறாமல் உள்ள பட்டாசு கடைகள் எது? என்பது குறித்த ஆய்வு நடத்தும் பணியில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் வலங்கைமான் காவல்துறை ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

    வலங்கைமானில் உள்ள வெடிக்கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் அரசு நிர்ணயித்த அளவைவிட தனிநபராக வீட்டிலும் குடோ னிலும் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் ஒரு கோடி மதிப்பிலான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அதை பதுக்கி வைத்ததாக வலங்கைமான் பகுதியை சேர்ந்த சுந்தர், ராஜா, ரவிச்சந்திரன், சீனிவாசன், மற்றொரு ரவிச்சந்திரன், அருணகிரிநாதன், பாலகுரு ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் மீதமுள்ள கடைகளில் அனுமதிபெறப்ப ட்டுள்ளதா? என்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த அதிரடியான சோதனை நடைபெற்று வருவது, வெடி கடைகள் நடத்தும் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • அப்போது அங்குள்ள ரைஸ் மில்லில் 280 மூட்டைகளில் சுமார் 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பூலாவரி லட்சுமனூர் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் டி.எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் பூலாவரி லட்சுமனூர் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ரைஸ் மில்லில் 280 மூட்டைகளில் சுமார் 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மில் உரிமையாளர் செந்தில்குமார் (வயது 42)போலீசார் வருவதைக் கண்டு தப்பி ஓடிவிட்டார், இதை யடுத்து அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொ) விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரில் வீட்டில் அருகில் இருந்த செந்தில்குமாரை கைது செய்தனர். 

    ×