search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுண்ணீர் பாசனம்"

    • தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த அளவு நீராதாரத்தை கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 625 எக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த அளவு நீராதாரத்தை கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் தாங்களே கணினிமூலம் விண்ணப்பிக்க https://tnhorticulture.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம்.

    தோட்டக்கலைப்பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்ப்பயிர்கள், வாசனை திரவிய பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 855 வரையும், மற்ற விவசாயிகளுக்கு எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530-ம் மானியம் பெறலாம்.

    இந்த திட்டத்துக்கான நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 625 எக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களது நில ஆவணங்களை சிட்டா, இ அடங்கல், புகைப்படம், நில வரைபடம், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு உள்ளதற்கான சான்று, ரேஷன் கார்டு, ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து நேரில் பதிவு செய்யலாம்.

    தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர்பாசனம் அமைத்து சாகுபடி பரப்பை அதிகரித்து அதிக வருவாய் பெறலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • காய்கறி பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்
    • வளர்ச்சி மற்றும் மகசூல் அதிக அளவில் கிடைக்கிறது.

    திருப்பூர் : 

    பொங்கலூர் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஷர்மிளா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கலூர் வட்டாரத்தில் விவசாயிகள் காய்கறி பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்.இந்த பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் நீர் நேரடியாக வேர் பகுதியை சென்றடைவதால் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிக அளவில் கிடைக்கிறது.

    இது போன்று சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 855-ம், இதர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530-ம் வழங்கப்பட உள்ளது.

    எனவே நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு நகல், வங்கி பாஸ்புத்தக்கத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் பொங்கலூரில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகம் மற்றும் தோட்டுக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா- 7708328657, தோட்டக்கலை அலுவலர் தமிழி-9361509373, உதவி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வசுமதி-6383457415, சம்பத்-9159273839 மற்றும் கோகுல்ராஜ்-9524847465 ஆகியோரை ெதாடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம்.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிறு,குறு விவசாயி சான்றி தல் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம், புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்கத் தொட்டி 116 கனமீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

    • நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.
    • களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தபடுகிறது. எனவே களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்ப் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழைதூவான் அமைத்து தரப்படுகிறது,

    நாமக்கல் வட்டாரத்தில் இந்த ஆண்டு 100 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு,குறு விவசாயிகள் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2 எண்கள் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது உழவன் செயலியின் வாயிலாக தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தெரிவித்து உள்ளார்.

    • மின் மோட்டார் பம்பு செட் புதியதாக அமைத்திட விவசாயி செலவளிக்கும் தொகையில் 50 சதவீதம் (ஜிஎஸ்டி நீங்கலாக) அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
    • ஒரு கன மீட்டருக்கு ரூ.350 என்ற அளவில் ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் வரையிலும் (120 கன மீட்டருக்கு) மானியம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் 50 எக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 50 எக்டேர் பரப்பளவில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் வேளாண்மைத்துறையில் துவரை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனமும், ராகி, நிலக்கடலை, உளுந்து, பச்சைபயறு, கொள்ளு, எள்ளு போன்ற பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனம், மழைத் தூவுவான் ஆகிய நுண்ணீர் பாசன கருவிகளும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. பாசன நீரை சிக்கனமான முறையில் பயன்படுத்திடவும்,

    குறைந்த நீரில் அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்திடவும் ஏதுவாக நுண்ணீர் பாசன முறையை புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் நீர் வழங்கும் ஆதார வசதியை ஏற்படுத்துவதற்காக, டீசல் மோட்டார், மின் மோட்டார் பம்பு செட் புதியதாக அமைத்திட விவசாயி செலவளிக்கும் தொகையில் 50 சதவீதம் (ஜிஎஸ்டி நீங்கலாக) அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    தங்கள் நிலத்தில் புதிதாக நீர் தேக்கத் தொட்டி அமைத்திட 50 சதவீத மானியம் என்ற வகையில் ஒரு கன மீட்டருக்கு ரூ.350 என்ற அளவில் ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் வரையிலும் (120 கன மீட்டருக்கு) மானியம் வழங்கப்படும்.

    மேலும், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நீர் கடத்தும் குழாய்கள் அமைத்தல் பணிக்காக இத்திட்டத்தில் விவசாயி செலவிடும் தொகையில் 50 சதவீதம் என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரையில் மானியம் வழங்கப்படும். இந்த துணை நீர் மேலாண்மை திட்டத்தில் பயனாளிகளாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் புதிதாக சொட்டு நிர், தெளிப்பு நீர், மழை தூவுவான் அமைத்திட விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

    எனவே, இதுவரை நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் பயன்பெறாத விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் கூடுதல் பயன்பெறலாம். இதில் பயன்பெற சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரைப்படம், சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உடன் தங்கள் பகுதிக்கு உரிய வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி உடனே பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குறைந்து வரும் நீர் ஆதார நிலைல் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்த குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்றிட்ட அனைவரும் நுண்ணீர் பாசனத் திட்டத்தினையும், துணை நீர் மேலாண்மை திட்டத்தின் மானியத்தினையும் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் விவரங்களுக்கு தலைமையிடம் வாரியாக உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அதன்படி, கிருஷ்ணகிரி மாதையன் - 9488753781, ஆலப்பட்டி முத்துசாமி - 9443363925, மாதேப்பட்டி முனிராஜி - 8344371443, மோரமடுகு சிவராசு - 8248888751, மகாராஜகடை விஜயன் - 8838343514 மற்றும் கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை அலுவலர் பிரியா - 9442559842 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தவறாமல் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பயிர் சாகுபடியில் நீர்ப்பற்றா க்குறை மிகப்பெ ரியபிரச்சினையாக உள்ளது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டா ரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்ப ட்டுள்ளது. இது குறித்து மடத்து க்குளம் வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:- தற்போதைய சூழலில் பயிர்சாகுபடியில் நீர்ப்பற்றா க்குறை மிகப்பெ ரியபிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு காணபிரச்சனைக்கு நுண்ணீர் பாசன திட்டம் சிறந்ததாகும்.சாதாரண முறையைக்காட்டிலும் 50 முதல் 65 சதவீதம் வரை நீர் சேமிக்கப்படுவதோடு பயிர் வளர்ச்சி, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பலன்கள் கிடை க்கிறது. மனித உழைப்பு 50 முதல் 75 சதவீதம் வரை மிச்சமாகிறது.

    மேலும் திரவ உரங்கள், நீரில் கரையக்கூடிய உரங்க ளை, பாசன நீரில் கலந்து நேரடியாக பயிர்களுக்கு வழங்க முடியும். நீரும், உரமும் வேர்ப்பகுதியில் பயிருக்கு கிடைப்பதால் பயிர் வளர்ச்சி நடவு முதல் அறுவடை வரை நன்கு அமைத்து விளைச்சல் அதிகரிக்கிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஒருஹெக்டருக்கு அதிகப்பட்சமாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 855 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய் வழங்கப்படுகிறது. பயிர் இடைவெளிக்கேற்ப மானியத்தொகை வழங்க ப்படுகிறது.

    நுண்ணீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா,அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார், வங்கி புத்தக நகல், புகைப்படம் - 2, ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, துங்காவி, தாந்தோணி, மைவாடி, கடத்தூர்,கணியூர், மெட்ராத்தி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், கொமரலிங்கம், சங்கராமநல்லூர், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, அக்ரஹாரகண்ணா டிபுத்தூர், பாப்பான்குளம், சர்கார்கண்ணாடிபுத்தூர் விவசாயிகள்உதவி தோட்டகலை அலுவலர் நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பித்து, சொட்டு நீர் பாசன விபரங்கள் மற்றும் மானிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்தார். 

    ×