search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டக்கலை பயிர்களுக்கு மானியத்துடன் நுண்ணீர்பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்பு படம்.

    தோட்டக்கலை பயிர்களுக்கு மானியத்துடன் நுண்ணீர்பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

    • தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த அளவு நீராதாரத்தை கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 625 எக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த அளவு நீராதாரத்தை கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் தாங்களே கணினிமூலம் விண்ணப்பிக்க https://tnhorticulture.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம்.

    தோட்டக்கலைப்பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்ப்பயிர்கள், வாசனை திரவிய பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 855 வரையும், மற்ற விவசாயிகளுக்கு எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530-ம் மானியம் பெறலாம்.

    இந்த திட்டத்துக்கான நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 625 எக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களது நில ஆவணங்களை சிட்டா, இ அடங்கல், புகைப்படம், நில வரைபடம், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு உள்ளதற்கான சான்று, ரேஷன் கார்டு, ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து நேரில் பதிவு செய்யலாம்.

    தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர்பாசனம் அமைத்து சாகுபடி பரப்பை அதிகரித்து அதிக வருவாய் பெறலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×