search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நுண்ணீர் பாசனம்
    X

    விவசாயி ஒருவரின் தோட்டத்தில் நுண்ணீர் பாசனம் கருவி அமைக்கப்பட்டுள்ள காட்சி.

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நுண்ணீர் பாசனம்

    • நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.
    • களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தபடுகிறது. எனவே களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்ப் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழைதூவான் அமைத்து தரப்படுகிறது,

    நாமக்கல் வட்டாரத்தில் இந்த ஆண்டு 100 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு,குறு விவசாயிகள் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2 எண்கள் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது உழவன் செயலியின் வாயிலாக தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×