search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன் உல் ஹக்"

    • ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.
    • 35 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்ட் ராபின் முறையில் மோதவேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 35 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் அனைத்து ரசிகர்களும் விராட் கோலி -நவீன் உல் ஹக் மோதல் குறித்து ஆவளுடன் எதிர் பார்த்து கொண்டிருந்தனர். டுவிட்டரில் கூட mango என்ற வார்த்தை டிரெண்ட் ஆனது. நவீன் பேட்டிங் செய்த போது ரசிகர்கள் விராட் கோலி என ஆர்பரித்தனர். அதேபோல விராட் கோலி பேட்டிங் செய்த போது நவீன் பந்து வீசினார்.

    அப்போது ரசிகர்கள் மீண்டும் விராட் கோலி என கோஷமிட்டனர். அப்போது விராட் கோலி வேண்டாம் என கைசைகை மூலம் காட்டினார். இதனையடுத்து நவீன் உல் ஹக் ஓடி வந்து விராட் கோலியை கட்டியணைத்து இருவரும் கைகுலுக்கி சிரித்தனர். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • விராட் கோலியை வம்பிழுத்த நவீனை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர்.
    • அவர்கள் போட்ட பதிவை சில நேரங்கள் கழித்து மும்பை வீரர்கள் அதை டெலிட் செய்தனர்.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ- மும்பை அணிகள் மோதின. இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று, நாளை நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் குஜராத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

    முன்னதாக இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் லக்னோவுக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் இந்தியாவின் ஜாம்பவான் விராட் கோலி ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

    அந்த நிலையில் லக்னோவுக்கு எதிராக குஜராத் வென்ற போது ரசித் கான், சஹா ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்டினார். இதற்கு மும்பைக்கு எதிராக பெங்களூரு தோல்வியை சந்தித்த போது அதை மாம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டே மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தார்.

    அப்படி விராட் கோலியை வம்பிழுத்த நவீனை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர். ஆனால் அவை அனைத்தையும் விட குஜராத்துக்கு எதிராக பெங்களூரு தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய போது பிரபல ஆப்பிரிக்கன் பத்திரிக்கையாளர் அடக்க முடியாமல் சிரிக்கும் வீடியோவை பதிவிட்ட நவீன் சிரித்துக் கொண்டாடியது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

    அந்த நிலையில் நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்து வெளியேறியதால் மும்பை வீரர்கள் சந்திப் வாரியர், குமார் கார்த்திகேயா, விஷ்ணு வினோத் ஆகியோர் மேஜையில் 3 மாம்பழத்தை வைத்து "இனி வாழ்க்கையில் மாம்பழத்தை பார்க்க மாட்டேன், சாப்பிட மாட்டேன், பெயரைக் கூட கேட்க மாட்டேன்" என்ற வகையில் அமைதியாக இருக்கும் வழியை பாருங்கள் என நவீனுக்கு தக்க பதிலடி கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.

    ஆனால் சில நேரங்கள் கழித்து அவர்கள் அதை டெலிட் செய்தனர். இருந்தாலும் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த ரசிகர்கள் அவரையும் லக்னோ அணியையும் கலாய்த்து தள்ளினர். அதனால் ஏற்பட்ட தொல்லையை தாங்க முடியாத லக்னோ நிர்வாகம் தனது ட்விட்டரில் மாம்பழம் சம்பந்தமான அனைத்து வார்த்தைகளையும் செட்டிங்கில் மியூட் செய்துள்ளது. 

    • விராட் கோலி மும்பை அணிக்கெதிராக அவுட்டாகும்போது டி.வி. முன் நின்று கொண்டு மாம்பழத்தை காட்டி ஸ்வீட் மாம்பழம் என நவீன் டுவிட் செய்திருந்தார்.
    • பிளே ஆஃப் சுற்றை இழந்தபோது வாய்விட்டு சிரிக்கும் ஒரு படத்தை பதவிட்டிருந்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 2023 சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. இது கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல. எமோசன் நிறந்ததாக இருக்கும். அந்தந்த அணியின் ரசிகர்கள், வீரர்களின் ரசிகர்கள் மிகவும் ஆக்ரோஷம், எமோசன் காட்டுவார்கள்.

    குறிப்பாக விராட் கோலி எப்படி ஆடுகளத்தில் எமோசன், ஆக்ரோசமாக இருப்பார்களோ அதேபோல் அவரது ரசிகர்களும் இருப்பார்கள். விராட் கோலியுடன் யாரும் மோதிவிட்டால் அவர்களை ட்ரோல் செய்து உண்டு இல்லை என ஆக்கிவிடுவாகர்கள்.

    பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி- எல்எஸ்ஜி இடையிலான ஆட்டத்தில் எல்எஸ்ஜி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி வெற்றிக்குப் பிறகு கம்பீர்- விராட் கோலி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக்- விராட் கோலிக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டது. போட்டி முடிந்த பின் கைக்குலுக்கும் போதும் இருவரும் கைக்கொடுக்க மறுத்துவிட்டனர்.

    இதற்கிடையே, விராட் கோலி மும்பை அணிக்கெதிராக அவுட்டாகும்போது டி.வி. முன் நின்று கொண்டு மாம்பழத்தை காட்டி ஸ்வீட் மாம்பழம் என டுவிட் செய்திருந்தார். மேலும், பிளே ஆஃப் சுற்றை இழந்தபோது வாய்விட்டு சிரிக்கும் ஒரு படத்தை பதவிட்டிருந்தார்.

    இது ஆர்சிபி மற்றும் விராட் கோலி ரசிகர்களை கோப்படுத்தியது. சென்னையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணிக்கெதிராக எல்எஸ்ஜி படுதோல்வியடைந்தது.

    182 ரன்கள் விட்டுக் கொடுத்ததுடன், 101 ரன்னில் சுருண்டது. குறிப்பாக 3 பேர் ரன் அவுட் ஆனார்கள். நவீன் உல் ஹக் 4 ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். இருந்தாலும் 38 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    பேட்டிங்கில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வாங்கடா... வாங்க... என எதிர்பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி ரசிகர்கள் மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கை ட்ரோல் செய்து வருகின்றன.

    இதற்கிடையே டுவிட்டரில் எல்எஸ்ஜி அணி magoes, mango, sweet, aam ஆகிய வார்த்தைகளை Muter words-ல் வைத்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.

    • நவீன்-உல்-ஹக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
    • மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன்-உல்-ஹக் 4 ஓவரில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நவீன்-உல்-ஹக் 4 ஓவரில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்கை விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.


    மேலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் கூட சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட வீடியோவில் வேகப்பந்து வீச்சாளரை "தி மேங்கோ கை" என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட்கோலி ஒரு ரன்னில் ‘அவுட்’ ஆனார்.
    • இந்தப் போட்டியின் படத்தை நவீன்-உல்-ஹக் பகிர்ந்துள்ளார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். போட்டியில் கடந்த 1-ந்தேதி லக்னோவில் நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

    இந்த போட்டி முடிந்த பிறகு பெங்களூர் அணி வீரரும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகரும் முன்னாள் தொடக்க வீரருமான கவுதம் காம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. டெல்லியை சேர்ந்த இருவரும் களத்தில் மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் லக்னோ அணி வீரர்கள் நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் விராட்கோலி ஆக்ரோஷமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    இதற்காக விராட்கோலி, காம்பீருக்கு தலா 100 சத வீதமும், நவீன்-உல்-ஹக்குக்கு 50 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலியை கிண்டல் செய்யும் விதமாக நவீன்-உல்-ஹக் ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவின.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட்கோலி ஒரு ரன்னில் 'அவுட்' ஆனார். இந்தப் போட்டியின் படத்தை நவீன்-உல்-ஹக் பகிர்ந்துள்ளார். அதில் "இனிப்பான மாழ்பழங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கோலி ஆட்டம் இழந்த உடன் இதை பதிவிட்டு உள்ளார். ஆனால் நவீன்-உல்-ஹக் யாருடைய பெயரையும் அதில் குறிப்பிடவில்லை. விராட்கோலி அவுட் ஆனதை குறிக்கும் வகையில் தான் அவர் கிண்டல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. 

    • லக்னோ பேட்டிங் செய்ய தொடங்கியது முதல் கோலி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
    • லக்னோ அணியின் வீரர்களான கெய்ல் மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா ஆகியோரை கோலி வம்புக்கு இழுத்து வாக்கு வாதம் செய்தார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் அணி லக்னோவை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது.

    லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது.

    பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 19.5 ஓவர்களில் 108 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் பெங்களூர் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெங்களூருவில் கடந்த 10-ந்தேதி நடந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 212 ரன் குவித்தும் கடைசி பந்தில் லக்னோவிடம் தோற்றது. அதற்கு நேற்றைய ஆட்டத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

    பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோ அணி வீரர்கள் வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள். லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் நேரடியாக மைதானத்துக்கு வந்து ஆர்.சி.பி. ரசிகர்களை பார்த்து வாயில் விரலை வைத்து அமைதியா இருங்கள் என்று சைகை செய்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட்கோலி நேற்று நடந்து கொண்டார். லக்னோ பேட்டிங் செய்ய தொடங்கியது முதல் அவர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு விக்கெட் விழுந்ததும் அவர் ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு சென்றார்.

    லக்னோ அணியின் வீரர்களான கெய்ல் மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா ஆகியோரை அவர் வம்புக்கு இழுத்து வாக்கு வாதம் செய்தார். அப்போது நவீன் உல்-ஹக்கை பார்த்து ஷூவை உயர்த்தி காட்டினார் விராட் கோலி. உடனே தூசு இருந்தது என அவர் கூறிவிட்டு சென்று விட்டார்.

    இதை விராட் கோலி வேனுமென்றே ஷூவை காட்டியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×