search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நவீன் உல்-ஹக்கை நோக்கி ஷூவை காட்டிய விராட் கோலி: வைரலாகும் வீடியோ
    X

    நவீன் உல்-ஹக்கை நோக்கி ஷூவை காட்டிய விராட் கோலி: வைரலாகும் வீடியோ

    • லக்னோ பேட்டிங் செய்ய தொடங்கியது முதல் கோலி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
    • லக்னோ அணியின் வீரர்களான கெய்ல் மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா ஆகியோரை கோலி வம்புக்கு இழுத்து வாக்கு வாதம் செய்தார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் அணி லக்னோவை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது.

    லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது.

    பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 19.5 ஓவர்களில் 108 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் பெங்களூர் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெங்களூருவில் கடந்த 10-ந்தேதி நடந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 212 ரன் குவித்தும் கடைசி பந்தில் லக்னோவிடம் தோற்றது. அதற்கு நேற்றைய ஆட்டத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

    பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோ அணி வீரர்கள் வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள். லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் நேரடியாக மைதானத்துக்கு வந்து ஆர்.சி.பி. ரசிகர்களை பார்த்து வாயில் விரலை வைத்து அமைதியா இருங்கள் என்று சைகை செய்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட்கோலி நேற்று நடந்து கொண்டார். லக்னோ பேட்டிங் செய்ய தொடங்கியது முதல் அவர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு விக்கெட் விழுந்ததும் அவர் ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு சென்றார்.

    லக்னோ அணியின் வீரர்களான கெய்ல் மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா ஆகியோரை அவர் வம்புக்கு இழுத்து வாக்கு வாதம் செய்தார். அப்போது நவீன் உல்-ஹக்கை பார்த்து ஷூவை உயர்த்தி காட்டினார் விராட் கோலி. உடனே தூசு இருந்தது என அவர் கூறிவிட்டு சென்று விட்டார்.

    இதை விராட் கோலி வேனுமென்றே ஷூவை காட்டியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×