search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீருடைகள்"

    • ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரனார் பிறந்தநாளையொட்டி மாற்று திறனாளிகளுக்கு சீருடைகள் வழங்கும் விழா நடந்தது.
    • அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் தியாகி இமானுவேல் சேகரனார் 100-வது பிறந்தநாளையொட்டி, மாவீரன் சுந்தரலிங்கம் அமைப்புசாரா கட்டுமான மற்றும் ஆட்டோ தொழிலாளர் கள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு சீருடை வழங்கும் விழா இருளப்ப சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க செயலாளரும், புதிய தமிழகம் நகர துணை செயலாளருமான விங்கம் தலைமை தாங்கினார். மாற்றுதிறனாளிகள் நல ஆர்வலர் முத்துகிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் ராதாகிருஷ்ணராஜா வரவேற்றார்.

    புதியதமிழகம் மாநில பொதுசெயலாளர் வி.கே.ஐயர் சிறப்புரையாற்றினார். தேவேந்திரர் குல வேளாளர் மகாசபை தலைவர் முத்துக்காளை, மாற்றுத்திற னாளிகளுக்கு சீருடைகளை வழங்கினார். செந்தட்டியாபு ரம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. முடிவில் வனராஜ் நன்றி கூறினார்.

    • அவர்–களுக்கான முழுமையான சீருடைகள் வழங்கவும் ஏற்பாடு.
    • தஞ்சை மாவட்டத்தில் சாரண, சாணியர் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்,டிச.23-

    தஞ்சை தூய அந்தோணி யார் மேல்நிலைப்பள்ளி சாரண, சாரணியர் இயக்க அணிவகுப்பில் முதலிடம் பெற்றமைக்காக மேயர் சண்.ராமநாதன் கேடயம் வழங்கி பாரட்டி பேசினார்.

    தஞ்சைதூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக கேடயங்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் சாரண சாரணியர் இயக்க தஞ்சை கல்வி மாவட்ட புரவரும், தஞ்சை மேயருமான சண்.ராமநாதன் கலந்து கொண்டு கேடயங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

    தஞ்சை மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சாரணர், சாரணியர் படைகள் தொடங்கவும், அவர்களுக்கான முழுமையான சீருடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்வதோடு, மாவட்ட அமைப்புக்கான அலுவலகமும் விரைவில் கட்டித்தரப்படும் என்றார்.

    சாரண, சாரணியர் இயக்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை ஆணையரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருமான சிவக்குமார் முன்னிலை வகித்து, சாரண, சாரணியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில்,

    தஞ்சை மாவட்டத்தில் சாரண, சாணியர் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பாக உழைக்கும் மாவட்ட செயலர் சந்திர–மௌலி, மாவட்ட பயிற்சி ஆணையர் குழந்தைசாமி உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களையும் பாராட்டுவதாக கூறினார்.

    நிகழ்ச்சியில் கவின் மிகு தஞ்சை இயக்க தலைவரும் மருத்துவருமான ராதிகா மைக் கேல் மாவட்ட சாரண ஆணையரும் மாவட்ட கல்வி அதிகாரியுான கோவிந்தராஜ், சாரணிய ஆணையர் கோமளவள்ளி, தூய அந்தோணியர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி அல்போன்ஸ் வாழ்த்துரை வழங்கினார்.

    மாவட்ட சாரண அமைப்பு ஆணையர் சாமிநாதன், வரவேற்றார். சாரணியர் அமைப்பு ஆணையர் ஜோசப் ஜெயந்தி நன்றி கூறினார். சாரண பயிற்சி ஆணையர் எழுத்தாளர் கவிஞர் குழந்தைசாமி நிகழ்ச்சியை தொகுத்தார்.

    பல்வேறு பள்ளி சாரண, சாரணியர் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனார். மாவட்ட தலைமையிட சாரணிய ஆணையர் இந்துமதி உடனிருந்தார்.

    ஏற்பாடுகளை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி உதவி சாரண ஆசிரியர்கள் சஞ்சை, ஜோஸ்வா தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர்.

    முன்னதாக ஜாய்பிரின்ஸ் தலைமையிலான அணிவகுப்பு நடந்தது.

    • தூய்மை பணியாளர்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான சீருடைகள் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் சேரும் மண்ணை உடனுக்குடன் அகற்றுவதற்காக ரூ.66 லட்சம் மதிப்பிலான சாலையோர மண் அகற்றும் வாகனத்தை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மாநகராட்சியில் பணிபுரிந்து இறந்த 6 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.54 லட்சத்து 50 ஆயிரத்து 177 மதிப்பிலான பணிக்கொடை தொகை, மாநகராட்சியில் பணிபுரியும் 332 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான சீருடைகள் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதையடுத்து மாநகரா ட்சியின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் சேரும் மண்ணை உடனுக்குடன் அகற்றுவதற்காக ரூ.66 லட்சம் மதிப்பிலான சாலையோர மண் அகற்றும் வாகனத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில்மகே ஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • கடலூரில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
    • மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் சிட்டிபாபு, செல்வராஜ், சகாயசெல்வன், தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, மூத்த விளையாட்டு வீரர்கள் அமீர்ஜான், நெடுஞ்செழியன், அப்துல் கனி முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    சென்னையில் பெண்கள் அணியும், திருச்சியில் ஆண்கள் அணியும் பங்கேற்கும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட மாணவ, மாணவியர் அணிக்கு அண்ணா விளையாட்டரங்கில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார்.

    இணை செயலாளர்கள் சிட்டிபாபு, செல்வராஜ், சகாயசெல்வன், தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, மூத்த விளையாட்டு வீரர்கள் அமீர்ஜான், நெடுஞ்செழியன், அப்துல் கனி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கினார். சுப்புராயன், காசி, தயாளன், பயிற்சியாளர்கள் கோவிந்தராஜன், மோகன சந்தர், செங்குட்டுவன், வினோத்குமார், சதீஷ், தமிழிசை மற்றும் முத்து கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சியாளர் பாலாஜி நன்றி கூறினார்.

    • தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
    • ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தபோது நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது.

    இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை, மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    பள்ளிகள் கோடை விடுமுறை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடை களுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் மொத்த விற்பனை 25 சதவீதம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    ×