search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்

    • தூய்மை பணியாளர்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான சீருடைகள் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் சேரும் மண்ணை உடனுக்குடன் அகற்றுவதற்காக ரூ.66 லட்சம் மதிப்பிலான சாலையோர மண் அகற்றும் வாகனத்தை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மாநகராட்சியில் பணிபுரிந்து இறந்த 6 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.54 லட்சத்து 50 ஆயிரத்து 177 மதிப்பிலான பணிக்கொடை தொகை, மாநகராட்சியில் பணிபுரியும் 332 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான சீருடைகள் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதையடுத்து மாநகரா ட்சியின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் சேரும் மண்ணை உடனுக்குடன் அகற்றுவதற்காக ரூ.66 லட்சம் மதிப்பிலான சாலையோர மண் அகற்றும் வாகனத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில்மகே ஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×