search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைதண்டனை"

    • போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தா என்பவர் முபாராக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    • தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியரான முபாராக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்று செசன்ஸ் நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மேட்டுபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் முபாராக் (வயது26). இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    அந்த பள்ளியில் பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 21.4.2022-ந் தேதியன்று முபாராக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தா என்பவர் முபாராக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போதைய மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தருமபுரி மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன்படி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியரான முபாராக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்று செசன்ஸ் நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.

    இதைத்தொடர்ந்து முபாராக்கை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடுகளில் கொள்ளை, வழிப்பறி என பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
    • புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

    ஊத்துக்குளி:

    சேலம் மாவட்டம் சீலை நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கண்ணன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூர் மங்களம் ரோடு குளத்துப்புதூரில் வசித்து வருகிறார். இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு முதல் சேலம் மாவட்டம், சேலம் மாநகரம், ஈரோடு, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகரம்,கோவை உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடுகளில் கொள்ளை, வழிப்பறி என பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

    இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெட்டிக்கடை என்ற கிராமத்தைச் சேர்ந்த விஷ்வராஜ் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 4 பவுன் தங்க செயினை திருடிச் சென்றார்.இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

    பின்னர் கைரேகை பிரிவு நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த ரேகையை பதிவு செய்தபோது அது தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கண்ணன் ரேகையுடன் ஒத்துப்போனதை கண்டறிந்து அவரை கைது செய்து திருடிய நகையை மீட்டு அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஊத்துக்குளி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கண்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கை விசாரித்த ஊத்துக்குளி நீதிபதி, கண்ணன் மீது சுமத்தப்பட்ட குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கண்ணன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.
    • அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் காமையகவுண்டன்பட்டி பாலம்செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் மனைவி விஜயபிரபா (வயது 44). கணவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்த அவர் தையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் கம்பத்தைச் சேர்ந்த பாலமுருகன் (51) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலமுருகனின் நண்பரான கண்ணன் (32) என்பவர் விஜயபிரபாவிடம் ரூ.20 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.

    அதற்கு விஜயபிரபா ஏற்கனவே வாங்கிய பணத்தை தராத நிலையில் மீண்டும் எதற்கு பணம் தர வேண்டும்? என கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கத்தரிக்கோலால் விஜயபிரபாவை பல இடங்களில் குத்திக் கொல்ல முயன்றார். படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மற்றும் கண்ணனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கண்ணன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.

    அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.


    • அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்
    • மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் மாணவியிடம் இதுகுறித்து கேட்டு உள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்டு கே.கே.மட்டம் பகுதியை சேர்ந்தவர் புச்சித்தன் என்ற கன்னட தாத்தா (வயது 67). இந்தநிலையில் 15.7.2020-ந் தேதி புச்சித்தன், 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி விளையாடுவது போல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.

    இதற்கிடையே பள்ளி மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் மாணவியிடம் இதுகுறித்து கேட்டு உள்ளனர். அதற்கு அவள் முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.


    மேலும் மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. சிறை தண்டனை இதுகுறித்து மாணவியின் பெற்றோர் எமரால்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புச்சித்தினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது.


    அதன்படி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புச்சித்தனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். பின்னர் போலீசார் புச்சித்தனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×