search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணத்தகராறில் பெண்ணை கொல்ல முயன்ற 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
    X

    கோப்புப்படம்.

    பணத்தகராறில் பெண்ணை கொல்ல முயன்ற 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

    • பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கண்ணன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.
    • அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் காமையகவுண்டன்பட்டி பாலம்செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் மனைவி விஜயபிரபா (வயது 44). கணவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்த அவர் தையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் கம்பத்தைச் சேர்ந்த பாலமுருகன் (51) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலமுருகனின் நண்பரான கண்ணன் (32) என்பவர் விஜயபிரபாவிடம் ரூ.20 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.

    அதற்கு விஜயபிரபா ஏற்கனவே வாங்கிய பணத்தை தராத நிலையில் மீண்டும் எதற்கு பணம் தர வேண்டும்? என கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கத்தரிக்கோலால் விஜயபிரபாவை பல இடங்களில் குத்திக் கொல்ல முயன்றார். படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மற்றும் கண்ணனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கண்ணன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.

    அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.


    Next Story
    ×