search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி மரணம்"

    • சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து ஊழியர்கள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர்.
    • உடல்நிலை மோசமடைந்தபோது வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்ற வாகனம் ஏற்பாடு செய்வதற்குள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கிரோர் நகரில் 12-ம் வகுப்பு படித்த மாணவி பாரதி. இவர் காய்ச்சல் காரணமாக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.

    நேற்று முன்தினம் அந்த சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து ஊழியர்கள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர்.

    அதையடுத்து அவரை ஒரு மோட்டார்சைக்கிளில் ஏற்றி வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் மோட்டார்சைக்கிளில் ஏற்றப்பட்ட நிலையில் அந்தச் சிறுமி இறந்துவிட்டார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆஸ்பத்திரியின் தவறான சிகிச்சையால்தான் சிறுமி உயிரிழந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்தபோது வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்ற வாகனம் ஏற்பாடு செய்வதற்குள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர் என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

    உத்தரபிரதேச துணை முதல்-மந்திரியும், சுகாதாரத்துறை மந்திரியுமான பிரஜேஷ் பதக் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'சிறுமி மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைக்கப்பட்டு, அங்கிருந்த மற்ற நோயாளிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரியின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

    இந்த மாத தொடக்கத்தில், அமேதியில் உள்ள, சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் இதுபோல அலட்சியம் காரணமாக ஒரு நோயாளி இறந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து அந்த ஆஸ்பத்திரியை மூட உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது.

    ஆஸ்பத்திரியை திறக்க அனுமதிக்க கோரி காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    • சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சேலம் போக்சோ நீதிமன்றம் செல்வாம்பாளை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி இந்திரா நகரை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான 22 வயது இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகியதில் கர்ப்பமானார்.

    இதனால் சிகிச்சைக்காக வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 6-ந்தேதி சிறுமி சென்றார். சிறுமியின் வயிற்றில் 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், அந்த குறை மாத குழந்தையை, டாக்டர் செல்வாம்பாள் பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    அதே சமயம் குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மறுநாள் (7-ந்தேதி) அதிகாலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனிடையே சிறுமிக்கு பிறந்த சிசுவை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்கள் இல்லாத பகுதியில் வீசப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் சிசுவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், டி.எஸ்.பி. ஹரிசங்கரி உள்ளிட்டோர் டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து, திருமணமாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை டாக்டர் ஜெயசெல்வி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் தெரியவந்ததால் சோர்ந்து காணப்பட்ட செல்வாம்பாள், இரு தினங்களுக்கு முன் வாழப்பாடியிலுள்ள அவரது மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சேலம் போக்சோ நீதிமன்றம், செல்வாம்பாளை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டது. இதனால் போலீசார், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டாக்டர் செல்வாம்பாளை நேற்றிரவு கைது செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையிலே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    அதுபோல் சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உடல்நிலை ஓரளவு சீரானதால் சிறுமி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்.
    • கடந்த சில நாட்களாக சிறுமிக்கு மீண்டும் உடல் நிலை திடீரென மோசம் அடைந்தது.

    திருவள்ளூர்:

    பூண்டி அருகே உள்ள மோவூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பது வழக்கம். கடந்த 4 மாதத்துக்கு முன்பு சிறுமி மாந்தோப்பிற்குள் மாடு மேய்க்க சென்றபோது, அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த சிறுமி சம்பவம் நடந்த மறுநாள் வீட்டில் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே உடல்நிலை ஓரளவு சீரானதால் அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு மீண்டும் உடல் நிலை திடீரென மோசம் அடைந்தது. அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமி செண்பக மாலினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது.
    • மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்தார். சக்திவேல் என்பவரின் மகள் செண்பக மாலினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்ததை அடுத்து, ஆலங்குளம் அரசு மருத்துவனையில் வெள்ளிக்கிழமை புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    நள்ளிரவு ஒரு மணிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மீண்டும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • 2 கம்புகளுக்கு நடுவே கட்டப்பட்டு இருந்த கயிற்றின் மீது ஏறி நின்றபடி சிறுமி சாகசம் செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது கண்ணகி எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி கீழே விழுந்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கங்கையம்மன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாப்பிள்ளை. இவர் குடும்பத்துடன் துரையா ஊரணி பகுதியில் கலைக்கூத்து தொழிலில் ஈடுபட்டார்.

    அவரது மகள் கண்ணகி (வயது 15), 2 கம்புகளுக்கு நடுவே கட்டப்பட்டு இருந்த கயிற்றின் மீது ஏறி நின்றபடி சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது கண்ணகி எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கண்ணகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கல்லல் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×