search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரயான்"

    • மானாமதுரையில் பாபா மெட்ரிக் பள்ளியில் சந்திரயான் கொண்டாடப்பட்டது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் நர்சரி ப்ரைமரி பள்ளியில் மாணவர்களுக்கு சந்திரயான் 3 பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அதை தயாரித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    விழாவிற்கு நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் கபிலன் மற்றும் நிர்வாகி மீனாட்சி முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ரியாக ஏழு மணிக்கு பொதுச் செயலா ளர் குமரவேல் தீபங்களை ஏற்றி வைத்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் கைலாசநாதர் கோவிலில் சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவிலின் சபா மண்டபத்தில் இந்தியா வடிவத்தில் விளக்கு கள் மற்றும் புஷ்பங்கள் அலங்கரிக்கப்பட்டது. சரியாக ஏழு மணிக்கு பொதுச் செயலா ளர் குமரவேல் தீபங்களை ஏற்றி வைத்தார். முதன்மைச் செயலாளர் மனோகரன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சந்திரயான் வெற்றிக்கும் இதற்காக பாடு பட்ட விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    பின்னர் சுகந்த குந்தலாம்பிகை மற்றும் கைலாசநாதருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. முடிவில் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

    • சந்திராயன் 2-க்கு பிறகு, சந்திரயான்-3 என்பது இந்தியாவின் மூன்றாவது நிலவுப் பணியாகும்.
    • சந்திரனில் சூரிய உதயம் இருக்கும்போது விண்கலம் தரையிறங்கும் தேதி தீர்மானிக்கப்படுகிறது.

    பெங்களூரு:

    இந்திய நாடே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலவு திட்டமான சந்திரயான்-3 விண்கலம் வருகிற (ஜூலை) 14-ந்தேதி அன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. இதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நேற்று அறிவித்தது.

    ஜி-20 விண்வெளி பொருளாதார தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரயான்-3 விண்கலம் ஏவுகணையானது, மார்க்-III (எல்விஎம்3) மூலம் ஏவப்படும். இதற்காக ஜூலை 12 மற்றும் 19-ந்தேதிக்கு இடைப்பட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2-க்கு பிறகு, சந்திரயான்-3 என்பது இந்தியாவின் மூன்றாவது நிலவுப் பணியாகும். இது சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரை இறங்குவதற்கும், உலாவுவதற்கும் இறுதி வரை தனது திறனை இந்த விண்கலம் வெளிப்படுத்தும்.

    சந்திரயான்-3, உள்நாட்டிலேயே தரையிறங்கும் தொகுதி, உந்துவிசை தொகுதி மற்றும் கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் மற்றும் நிரூபிக்கும் நோக்கத்துடன் ஒரு ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவல்படி, லேண்டர் ஒரு குறிப்பிட்ட சந்திர தளத்தில் மென்மையாக தரையிறங்கும் மற்றும் ரோவரை நிலைநிறுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது அதன் இயக்கத்தின் போது சந்திரன் மேற்பரப்பில் உள்ள இடத்திலேயே ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்ளும் வகையிலி லேண்டர் மற்றும் ரோவரில் அறிவியல் தரவுகளை கொண்டுள்ளன.

    எனவே திட்டமிட்டபடி ஜூலை 14-ந்தேதி சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட்டால் வருகிற ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24-ந்தேதி சந்திரனின் மேற்பரப்பில் விண்கலம் தரையிறங்கும்.

    சந்திரனில் சூரிய உதயம் இருக்கும்போது விண்கலம் தரையிறங்கும் தேதி தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு தரையிறங்கும் போது, சூரிய ஒளி இருக்க வேண்டும். எனவே ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று தரையிறங்கும்.

    லேண்டரும், ரோவரும் சூரிய ஒளி இருக்கும் வரை 14 நாட்கள் வரை நிலவில் இருக்கும். சூரிய ஒளி இல்லாத போது, ரோவரில் இருக்கும் ஒரு சிறிய சோலார் பேனல் அடுத்த 14 நாட்களுக்கு ஒளி வரும் வரை பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான சக்தியை உருவாக்கும்.

    அங்குள்ள வெப்பநிலை மைனஸ் 40 டிகிரிக்கு கீழே செல்கிறது. அத்தகைய சூழலில் பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்ந்து செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் நாங்கள் சில சோதனைகள் செய்தோம். அதன் மூலம் கடுமையான சூழ்நிலையிலும் பேட்டரி செயல்படுவதற்கான வழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரயான் 3 விண்ணில் செலுத்துவதற்கு தயாராக உள்ளது.
    • அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியை இஸ்ரோ முடித்துள்ளது. சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விண்கலம் ஆனது தரை இறங்குதல் (லேண்டர்) மற்றும் உலாவுதல் (ரோவர்) கட்டமைப்புகளை கொண்டுள்ளது.

    இதற்கிடையே, விண்கல பரிசோதனை பணிகள் நடைபெற்று வந்தன. சந்திரயானை ஏந்திச் செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும்.

    இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறுகையில், நிலவுக்குச் செலுத்துவதற்கு சந்திரயான்-3 விண்கலம் தயாராக உள்ளது. ஜூலை மாதம் 13-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் அதிக கனம் வாய்ந்த மார்க்-3 என்ற ராக்கெட் உதவியுடன் விண்கலம் செலுத்தப்படும்.

    • இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
    • சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.

    சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

    இதன்பின்பு அதே ஆண்டில் செப்டம்பர் 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. எனினும், நிலவிற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது.

    நிலவின் இருண்ட பக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடந்து வந்தது.

    இதில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வந்தனர். எனினும், கொரோனா பெருந்தொற்று, அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் தொடர்ச்சியாக திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.

    இதனை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    சந்திரயான்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.

    எனினும், சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அதனால், அவற்றை சிறிது காலத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம். பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்த கூடிய இரு காலங்களில் ஜூனை (2023-ம் ஆண்டு) தேர்வு செய்து அதனை விண்ணில் செலுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

    விண்ணில் அனுப்பிய 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்றுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ×