search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தன மரம்"

    • சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டூர் அன்சூர் மோரிப்பாளையம் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த பகுதியில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் குண்டூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (35), வீரையன்(எ) காளிமுத்து, ஆனந்தகுமார் (42), சொரண்டி பகுதியை சேர்ந்த சஞ்சித் (21) ஆகிய 4 பேரும் 15 சந்தன மரங்களை வெட்டி செதுக்கி கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து வீரையன்(எ) காளிமுத்து, சஞ்சித், ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து சந்தன மரத்தையும் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.  

    • டி.என்.பாளையம் அருகே சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது 4 பேர் கும்பல் தப்பி ஓடினர்.
    • தப்பியோடிய 4-நபர்களும் பிடிபட்டால், சட்ட விரோதமாக சந்தன மரங்களை கடத்தி யாருக்கு? இந்த கும்பல் விற்பனை செய்கின்றனர் என்பது போன்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம் கிராமம் வேதபாறை பள்ளம் கத்தாழைமடுவு என்ற இடத்தில் சந்தன மரங்களை ஒரு கும்பல் வெட்டி கடத்துவதாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடமான கத்தாழை மடுவு என்ற இடத்தில் சென்று பார்த்த போது 6-பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி கட்டைகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்.

    வனத்துறையினர் வருவதை பார்த்த கடத்தல் கும்பல் தப்பியோட முயன்ற போது 2-பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர், இதில் 4-பேர் தப்பியோடினர்.

    பிடிபட்ட 2- நபரிடம் டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், கள்ளிப்பட்டி பகவதி நகர் பகுதியைச் சேர்ந்த சடையன் என்பவரது மகன் பெரியசாமி (24), நாகராஜ் (47), முத்து (45), சடையன் (55), மாருச்சாமி (40) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6- பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி எடுத்து விற்பனை ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    சம்பவ இடத்தில் பிடிபட்ட பெரியசாமி மற்றும் 17-வயது சிறுவன் என இருவரிடம் இருந்து சுமார் 8 கிலோ அளவுள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் தப்பியோடிய நாகராஜ், முத்து, சடையன், மாருச்சாமி ஆகிய 4- நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வனத்துறையினர் கூறுகையில், இந்த 6 பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் மொத்த விற்பனையில் ஈடுபட இருந்ததாக தெரிவித்தனர்.

    தப்பியோடிய 4-நபர்களும் பிடிபட்டால், சட்ட விரோதமாக சந்தன மரங்களை கடத்தி யாருக்கு? இந்த கும்பல் விற்பனை செய்கின்றனர் என்பது போன்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளியையொட்டி பள்ளிக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது.இதை சாதகமாக பயன்படுத்தி மரம் வெட்டப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள  ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புங்கை, வாகை, சவுக்கு, சந்தனம், வேம்பு உட்பட ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் அங்கு 20 அடி உயரம் வளர்ந்து இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டு கடத்தி சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைமையாசிரியர் ஸ்டெல்லா அளித்த புகாரின்படி  திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

     தீபாவளியையொட்டி பள்ளிக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி மரம் வெட்டப்பட்டுள்ளது. மரத்தின் அடிபகுதியில் இருந்து 10 அடி வரை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு 1999ம் ஆண்டு வனத்துறை சார்பில் இந்த மரம் நடப்பட்டது. 22 ஆண்டு பழமையான மரத்தை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ×