search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை சிறுமி கொலை"

    கோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். #KamalHaasan #GirlHarassment
    கோவை:

    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    தென் சென்னை பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்த அவர் இன்று மத்திய சென்னை மற்றும் வட சென்னை பகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

    இந்நிலையில் கோவை துடியலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது 2 நாட்களாக கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் இன்றைய பிரசாரத்தை ரத்து செய்த கமல் விமானம் மூலம் கோவை சென்றார். அங்கு இருந்து துடியலூர் சென்ற கமல், சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,  ‘வீட்டின் அருகே 20 அடி தள்ளி குழந்தைகள் விளையாடக் கூடிய சூழல் இல்லாவிடில் நல்ல தமிழகமாக இருக்காது. சிறுமி வழக்கில் காவல்துறை தன் கடமையைச் செய்யும் என நம்புகிறேன்’ என்றார். #KamalHaasan #GirlHarassment
    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாயமானார். மறுநாள் காலை வீட்டருகே சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் பனியனால் கட்டப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலையாளிகளை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் செய்தனர். நேற்று துடியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அந்த வாலிபர்கள் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.



    சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. #GirlHarassment
    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிளஸ்-2 மாணவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாயமானார். மறுநாள் காலை வீட்டருகே சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் பனியனால் கட்டப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலையாளிகளை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் செய்தனர். நேற்று துடியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அந்த வாலிபர்கள் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை சிறுமியின் பெற்றோரிடம் கூறிய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதை வீடியோ மூலம் காட்டினர். விரைவில் கொலையாளிகளை கைது செய்து விடுவோம் என போலீசார் உறுதி அளித்ததை ஏற்று, சிறுமியின் உடலை பெற்றுக் கொண்டனர்.

    இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. மணி மேற்பார்வையில் 10 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

    மேலும், நள்ளிரவில் செல்போனில் பேசியவர்களின் பட்டியல் சேகரித்து விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த வழக்கில் சட்டப்பிரிவுகள் கொலை(302), பாலியல் வன்புணர்ச்சி(376ஏ) மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிடிபட்ட 6 பேரிடமும் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    சிறுமி படித்த பள்ளிக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கு முன்பு யாரேனும் மிட்டாய் வாங்கி தருகிறேன் என்று ஆசை காட்டி சிறுமிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டிருந்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா, தனிப்படை போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். வழக்கு விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணை நிலவரத்தை சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என கூறி உள்ளார். #GirlHarassment

    கோவையில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. #GirlHarassment
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது:-

    கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த மன வேதனையளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான பின்னணியில், அதே மாவட்டத்தில் மேலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 25-ந்தேதி காணாமல் போன குழந்தை வீட்டுக்கு அருகிலேயே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.

    சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்துள்ள இந்த கோரச் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

    குரூரமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது, போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GirlHarassment
    கோவையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்றுமுன்தினம் மாயமானார்.

    பலஇடங்களில் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்காததால் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் வீட்டருகே நேற்று காலை சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது. கை, கால்கள் டி-சர்ட்டால் கட்டப்பட்டு இருந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

    ஆனால், சிறுமியை கடத்திக் கொலை செய்தவர்களை கைது செய்து உரிய தண்டனை கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர்களது உறவினர்கள் கூறி கலைந்து சென்றனர். இந்நிலையில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று இரவு 7.30 மணி அளவில் பன்னிமடை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கொலையாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மறியலை கைவிட்டனர். எனினும், இன்று காலை வரை கொலையாளிகள் கைது செய்யப்படாததால் சிறுமியின் உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு துடியலூர் பஸ் நிலைய சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


    இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    மேலும் கொலையாளிகளை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டிய ராஜன் உத்தரவிட்டார். அதன்படி டி.எஸ்.பி. மணி மேற்பார்வையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை கொண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிறுமி படித்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் உள்பட பலரிடம் விசாரித்தனர். பஸ் நிலையம் உள்ளிட்ட அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதுதொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர்கள் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #GirlHarassment
    ×