search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிவலப்பாதை"

    • கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது.

    பழனி:

    பழனி கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்க கூடாது, கோவிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மார்ச் 8ம் தேதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. அதன்படி பழனி கிரிவலப்பாதைக்கு வரும் 9 இணைப்புச்சாலைகளில் 8 சாலைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டது. கொடைக்கானலில் இருந்து வரும் வாகனங்கள் பாதையில் மட்டும் அடைப்பு ஏற்படுத்தாமல் தற்காலிக கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இந்நிலையில் கிரிவலப்பாதை அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் ஊர்வலம் நடத்தி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர். ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது. கோர்ட்டு உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. கிரிவலப்பாதை வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சொடி காணப்பட்டது. 

    • திருப்பரங்குன்றத்தில் கிரிவலப்பாதையை சீரமைக்க வேண்டும்.
    • குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடை பெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் அளித்த மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:-

    சீரான குடிநீர் வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர். தங்கள் பகுதிக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ சரிவர தண்ணீர் வராத நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்க்க வேண்டும். சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல கிரிவலப் பாதைகளில் தெரு விளக்கு சரிவர எரிவதில்லை மற்றும் கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருநகர் பகுதியில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள் சரிவர அள்ளப்படவில்லை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லை என அப்பகுதி மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல திருநகர் ஒன்றாவது பஸ் நிறுத்தத்தில் இருந்து எட்டாவது பஸ் நிறுத்தம் வரை சாலையின் இரு பகுதிகளிலும் ஆக்கிர மிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    செங்குன்றம் நகர் பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அந்த பகுதிக்கு சாலை வசதி மற்றும் இப்பகுதியில் தெருநாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • கிரிவலப்பாதையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பரங்குன்றம்,

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    மதுரைக்கு மிக அருகாமையில் இருப்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர் கள் திருப்பரங் குன்றத்திற்கும் வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி பேருந்து நிலையம் அருகே செல்லும் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் பெரியரத வீதி கிரிவலப் பாதை செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கழிவுநீர் வழியாகவே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    மேலும் அப்பகுதியில் வணிக வளாகங்கள் அதிக அளவில் இருப்ப தால் வியாபாரிகளும், கடை களுக்கு வரும் வாடிக்கை யாளர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகா ரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே சுகாதார சீர்கேடாக இருக்கும் கிரிவலப் பாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள மான்களுக்கு பொதுமக்கள் வழங்க உணவுகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள் உள்ளன.

    வனப்பகுதியில் இருந்து மான்கள் மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதைக்கு வருவதை தடுக்க வனத்துறை சார்பில் வனப்பகுதியின் எல்லையில் இரும்பு கம்பியால் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது அந்த இரும்பு வேலிகள் வரை துள்ளி குதித்து மான்கள் கூட்டமாக வருகின்றன. அந்த மான்களை கண்டதும் கிரிவலத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மான்களுக்கு பிஸ்கெட், பன், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி போடுகின்றனர்.

    வனவிலங்குகளான மான்கள் போன்றவை காட்டில் இயற்கையாக விளைய கூடிய செடி, கொடி, காய்கனிகளை சுயமாக தேடி உண்ணும் பழக்கத்தை கொண்டவை.

    மக்கள் உணவு பொருட்களை போடுவதால் மான்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட இடத்திற்கு சென்றால் உணவு கிடைக்கும் என்று சுயமாக உணவு தேடும் பழக்கத்தை மறந்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வருகின்றன.

    பெரும்பாலும் கிரிவலப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் எதிரே வனப்பகுதியில் காலை மற்றும் மதியம் வேலையில் மான்கள் கூட்டமாக வந்து நிற்கின்றன.

    மக்களை கண்டதும் பயந்து ஓடிவிடும் மான்கள் அவர்கள் கையை நீட்டியதும் உணவு பொருட்கள் தருகின்றனர் என்று அச்சமின்றி அருகில் வருகின்றன. மக்கள் அளிக்கும் உணவு பொருட்களால் சில சமயங்களில் மான்களுக்கு ஆபத்து ஏற்பட கூடும்.

    கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.

    இதுகுறித்து திருவண்ணாமலை வனத்துறையினர் கிரிவலப்பாதையில் வனப்பகுதிகளில் உள்ள மான்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுகுறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோவில் கிரிவலப்பாதையை ரூ.5 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
    • அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அரசு முதன்மைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) பிரதீப் யாதவ் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னி லையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தனர்.பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இருக்கன்குடி கோவி லுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, நடைபாதையும், சாலைகளும் அமைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கேட்டுக்கொண்டதற் கிணங்க, ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் சில நாட்களில் தொடங்க உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள திருவண்ணாமலை கோவி லின் கிரிவலப்பாதையை 2.50 கி.மீ. மேம்படுத்தும் பணி ரூ.5 கோடி மதிப்பில் பணிகள் தொடங்க உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டில் 17 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடக்கப்பட்டு, இந்த ஆண்டே பணிகள் முடிவ டைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து விருதுநகர் செல்லும் சாலைகளை இணைத்து வட்டப்பாதையாக 33.5 கி.மீட்டருக்கு தேவையான நிலம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ராஜபாளையம்- வெம்பக்கோட்டை சாலையில் ராஜபாளையம் ரெயில் நிலையம் அருகில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் கட்டப்ப டவுள்ள தொழிற்ப யிற்சி நிலையங்களில் 3 தொழிற்பயிற்சி நிலை யங்கள் விருதுநகர்,

    அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளில் புதிய தொழிற்நுட்ப பிரிவுகளுடன் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×