search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரிவலப்பாதையை ரூ.5 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கும்- அமைச்சர் எ.வ.வேலு
    X

    விருதுநகர் சூழக்கரையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடியில் நடைபெறும் பணிமனை கட்டுமான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.

    கிரிவலப்பாதையை ரூ.5 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கும்- அமைச்சர் எ.வ.வேலு

    • ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோவில் கிரிவலப்பாதையை ரூ.5 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
    • அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அரசு முதன்மைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) பிரதீப் யாதவ் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னி லையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தனர்.பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இருக்கன்குடி கோவி லுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, நடைபாதையும், சாலைகளும் அமைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கேட்டுக்கொண்டதற் கிணங்க, ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் சில நாட்களில் தொடங்க உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள திருவண்ணாமலை கோவி லின் கிரிவலப்பாதையை 2.50 கி.மீ. மேம்படுத்தும் பணி ரூ.5 கோடி மதிப்பில் பணிகள் தொடங்க உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டில் 17 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடக்கப்பட்டு, இந்த ஆண்டே பணிகள் முடிவ டைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து விருதுநகர் செல்லும் சாலைகளை இணைத்து வட்டப்பாதையாக 33.5 கி.மீட்டருக்கு தேவையான நிலம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ராஜபாளையம்- வெம்பக்கோட்டை சாலையில் ராஜபாளையம் ரெயில் நிலையம் அருகில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் கட்டப்ப டவுள்ள தொழிற்ப யிற்சி நிலையங்களில் 3 தொழிற்பயிற்சி நிலை யங்கள் விருதுநகர்,

    அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளில் புதிய தொழிற்நுட்ப பிரிவுகளுடன் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×