search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாஸ் எம்எல்ஏ"

    தேவர் மகன் 2 படம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கிருஷ்ணசாமிக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். #Karunas #Krishnasamy #Thevarmagan2
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் தேவர் மகன்-2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார்.

    தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை.

    தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே... ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா? தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமல்ஹாசன்.

    மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாக படம் எடுக்கலாம் தவிர எந்த சாதியையும் குறைத்து படம் எடுக்க கூடாது என கூறியிருந்தார்.

    அதன்படி பார்த்தால் சமீபகாலமாக சில டைரக்டர்கள் தேவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவே படம் எடுக்கின்றனர். அச்சமயம் தங்களை போன்றவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருப்பது ஏன்?


    தேவர் மகன் படத்தின் காரணமாக 25 ஆண்டுகளாக இரு சமூகத்தினரிடையே பகை தீராமல் இருப்பதாக பொய்யான கருத்தை விதைக்கும் நீங்கள் 1957-ல் இருந்த காங்கிரஸ் அரசு இரு சமூகத்தினரிடையே தீராத பகையை ஏற்படுத்த காரணமாக இருந்ததை பற்றி பேச திராணி இருக்கிறதா? உங்களுக்கு...

    புராண கதைகளில் உள்ள வீரவாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரீபெல்முத்து ராமலிங்க சேதுபதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம். யாரும் தடுக்க போவதில்லை.

    தற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர் மகன்-2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார். #Karunas #Krishnasamy #Thevarmagan2
    நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. கார் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் கார்த்திக் (வயது 27), இவர் கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் ஆவார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாங்குநேரி அருகே அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டது. இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திக் மற்றும் சிலர் சேர்ந்து பஸ்கள் மீது கல்வீசியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து கார்த்திக் மற்றும் சிலரையும் நாங்குநேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கார்த்திக் ஜாமீனில் விடுதலையாகி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் இரவு நேரங்களில் சோதனை செய்ய வந்திருப்பதாக கூறி வந்துள்ளனர்.

    இதனைதொடர்ந்து கார்த்திக், மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை (28), சுப்பையா (18) ஆகிய 3 பேரும் நேற்று இரவில் நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். ஜாமீனில் வந்த பின்னரும் எங்களை ஏன் தொந்தரவு செய்தீர்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளனர்.

    போலீசார் 3 பேரையும் வெளியேறும் படி கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த கார்த்திக், சுப்பையா, சாமிதுரை மூவரும் திடீர் என தாங்கள் கொண்டு வந்திருந்த மண் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுப்பையா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நாங்குநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கருணாஸ், மாணவி ஷோபியா போன்றோர் மீது தமிழக அரசு அடக்குமுறையை கையாள்வதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தற்போது தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மேலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கருணாசை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே பழைய வழக்குகளை கிளறுகின்றனர். அரசை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு, கைது நடவடிக்கை என பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகம் நசுக்கப்படுகிறது.

    நாக்கை அறுப்பேன் என கூறிய அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை. தனிப்படையால் தேடப்படும் எச்.ராஜா போலீசார் பாதுகாப்பில் சுற்றி வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கருணாஸ், மாணவி ஷோபியா போன்றோர் மீது அரசு அடக்குமுறையை கையாள்கிறது. நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். மேலும் ஜாமீன் பெற முடியாமல் தவிக்கும் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். மணல் திருட்டு, அரசு அனுமதியுடன் தனியார் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

    ஆனால் காவல் துறையினர் நியாயமாக போராடும் மாற்றுத் திறனாளிகள் மீது கூட அடக்குமுறையை கையாள்கின்றனர். இதனை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களை ஒன்றாக திரட்டி வலிமைமிக்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநில குழு உறுப்பினர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு கொடுத்திருக்கும் கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Karunas #Speaker
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாசை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதற்காக விரைவில் கருணாசுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்கக்கோரி தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கருணாஸ் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நேற்று 2 மனுக்களை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் கொடுத்தார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளதால் அவர் சார்பில் அவரது வக்கீல் அழகிரி மனுக்களை கொடுத்தார்.

    முதல் மனுவில், “சபாநாயகர் தனபால் அரசியல் சட்டப்படி செயல்படவில்லை. அவர் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான தீர்மானத்தை அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

    மற்றொரு மனுவில், “தமிழ்நாடு சட்டபேரவை விதி 68-ன்படியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 179(சி)படியும் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்கான தீர்மானம் கொண்டுவர விரும்புகிறேன். இதை பேரவை அலுவல்களில் சேர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.



    கருணாஸ் அளித்துள்ள இந்த மனுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இந்த மனுக்கள் அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சட்ட நிபுணர் ஒருவர் கூறுகையில், “ஒரு எம்.எல்.ஏ. சபாநாயகரை பதவி நீக்க கோரி தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால் கட்சி தலைமைக்கு தான் முதலில் பரிந்துரைக்க வேண்டும். அதை விடுத்து பேரவை செயலகத்தில் மனு கொடுக்க கூடாது.

    அவ்வாறு மனு அளிக்கும் பட்சத்தில் அவர் கட்சி விதிகளை மீறுவதாக அர்த்தம். அந்த அடிப்படையிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார். அதன்படி பார்த்தால் கருணாஸ் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற தனிக்கட்சியின் தலைவராக இருந்தாலும் அவர் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே சபைக்குள் அவர் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ. என்றே கருதப்படுகிறது.

    ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சபாநாயகரை பதவி நீக்க செய்யக்கோரி மனு கொடுப்பது அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்படும். எனவே இதை அடிப்படையாக வைத்து கட்சி தாவல் தடை சட்டத்தின்படி கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை மிக எளிதாக அ.தி.மு.க. தலைவர்களால் பறிக்க முடியும் என்று பெரும்பாலான சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே கருணாஸ் கொடுத்த கடிதம் அவருக்கே சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு 1972-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது சபாநாயகராக இருந்த கே.ஏ.மதியழகன் கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்தார். அதாவது எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார்.

    இதையடுத்து அவர் மீது ஆற்காடு வீராசாமி பதவி நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மூலம் சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டார்.

    தமிழக சட்டசபை வரலாற்றில் சபாநாயகரை பதவி நீக்கம் செய்தது அப்போதுதான். அதன் பிறகு எந்த சபாநாயகரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.

    கடந்த 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. அப்போதைய தி.மு.க. சபாநாயகர் ஆவுடையப்பனை பதவி நீக்க கோரி 2 தடவை தீர்மானம் கொண்டு வந்தது. அந்த 2 தீர்மானங்களும் தோல்வியை தழுவின.

    அதுபோல கடந்த ஆண்டு சபாநாயகர் தனபாலை பதவி நீக்க செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானமும் தோல்வியை தழுவியது.

    தற்போது தனபால் மீது 2-வது முறையாக பதவி நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வர மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடவை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவரே மனு கொடுத்துள்ளார். தி.மு.க. அவருக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதற்கு சட்டசபை நிகழ்வு தான் விடை தரும். #Karunas #Speaker
    ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாசை 3-வது முறையாக போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Karunas #KarunasMLA
    சென்னை:

    காமெடி நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

    நாடார் சமுதாயம் பற்றி தரக்குறைவாக விமர்சித்த அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் போலீஸ் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் பேசினார்.

    இதற்காக நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கருணாஸ் கடந்த மாதம் 23-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தனது ஆதரவாளர்களுக்கு மது வாங்கி கொடுப்பதற்காக மட்டுமே தினமும் ரூ.1 லட்சம் வரை செலவு செய்கிறேன். தனது அமைப்பான முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கொலை செய்யவும் தயங்கக் கூடாது என்றும் கருணாஸ் பேசி இருந்தார்.

    இதற்காக அவரை காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர். ஆனால் கோர்ட்டு அதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போராட்ட வழக்கிலும் கருணாஸ் கைது செய்யப்பட்டார். திருவல்லிக்கேணி போலீசார் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். கோர்ட்டில் போலீஸ் காவல் மறுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த 2 வழக்குகளிலும் கருணாஸ் ஜாமீன் பெற்றார்.

    இதையடுத்து கடந்த 29-ந்தேதி வேலூர் சிறையில் இருந்து அவர் விடுதலையானார்.


    நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய 2 போலீஸ் நிலையங்களிலும் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்படி காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும், 10.30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலும் கருணாஸ் கையெழுத்து போட்டு வந்தார்.

    சிறையில் இருந்து வெளியே வந்ததும் கருணாஸ் அளித்த பேட்டியில் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்திப்பேன். ஆயிரம் முறை சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று ஆவேசமாக பேட்டி அளித்தார்.


    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைவதற்கு நானே முக்கிய காரணமாக இருந்தேன் என்று அடிக்கடி கூறி வரும் கருணாஸ், எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூரில் நடந்தது என்ன? என்பது பற்றி விரைவில் தெரிவிப்பேன் என்றார். அது தொடர்பான ரகசியத்தை தலைமை நீதிபதியிடம் முறையிட உள்ளதாகவும் கருணாஸ் கூறி வருகிறார். இதனால் அவர் வெளியிடப்போகும் கூவத்தூர் ரகசியம் என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் புளியங்குடியில் போடப்பட்ட ஒரு வழக்கில் கருணாசை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் புலித்தேவன் நினைவிடத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி கருணாஸ் மாலை அணிவிக்க சென்றார்.

    அப்போது கருணாஸ் ஆதரவாளர்களுக்கும், தேவர் பேரவை தலைவர் முத்தையா தேவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது.

    இதில் கருணாஸ் மற்றும் முத்தையா தேவரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 2 தரப்பினரும் அளித்த புகாரில் புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முத்தையா தேவர் காரை சேதப்படுத்தியதாக கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் இப்போது கருணாஸ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.

    அவரை கைது செய்வதற்காக புளியங்குடி டி.எஸ்.பி. ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

    நேற்று மாலையில் புளியங்குடியில் இருந்து புறப்பட்ட போலீசார் இன்று அதிகாலையில் சென்னை வந்தனர். சாலிகிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டுக்கு அதிகாலை 4 மணி அளவில் போலீஸ் படை சென்றது.

    நெல்லையில் இருந்து வந்திருந்த 15-க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்னை விருகம்பாக்கம் போலீசாரும் சென்றனர். மொத்தம் 50 பேர் கருணாசின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் கருணாஸ் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாசை 3-வது முறையாக போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே புளியங்குடியில் போடப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் கருணாஸ் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. #Karunas #KarunasMLA
    முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் எம்எல்ஏவுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #KarunasMLA #Karunas #EgmoreCourt
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



    அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், கருணாஸ் எம்எல்ஏவின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கருணாசுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்கிடையே ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கிலும் கருணாஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார்.  இந்த வழக்கில் ஜாமீன் கோரி எம்.எல்.ஏ கருணாஸ், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது.

    அவதூறு வழக்கில் தற்போது ஜாமீன் கிடைத்தாலும் இரண்டாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால்தான் கருணாஸ் எம்எல்ஏவால் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வர முடியும். #KarunasMLA #Karunas #EgmoreCourt
    ×