search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலுக்கு செல்ல தடை"

    • மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர்.

    ராமேசுவரம்:

    வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதற்கேற்றாற் போல் ராமேசுவரம் கடல் பகுதி இன்று காலை வழக்கத்தைவிட மாறுபட்ட நிலையில் காணப்பட்டது.

    இதற்கிடையே மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களிலும், நடுக்கடலில் நங்கூரமிட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு இலங்கை அரசு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கிய நிலையில் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து ராமேசுவரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் சென்ற அவர்களிடம் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    8 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் சூறைக் காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர்.

    • கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தொலைதூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது,
    • இன்று (31-ந் தேதி) முதல் மறுஉத்தரவு வரும்வரை யாரும் கடலுக்கு செல்லக்கூடாது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தொலைதூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை குறிப்பதாகும்.தையொட்டி கடலூர் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. எனவே, கடலில் சூறைக்காற்றானது 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிைல ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகை மீன்பிடி படகுகளும் இன்று (31-ந் தேதி) முதல் மறுஉத்தரவு வரும்வரை யாரும் கடலுக்கு செல்லக்கூடாது. ஏற்கனவே ஆழ்கடலில் விசைப்படகுகளில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். அல்லது அருகில் உள்ள துறைமுகத்தில் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும்.


    இந்த உத்தரவை மீறி மீனவர்கள் மீன் பிடிக்க சென்றால் அவர்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. விசைப்படகுகளை தவிர்த்து 3,500 படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    • தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவ உள்ளது‌.
    • மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மீன்வள த்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - 

    வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது . மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவ உள்ளது‌. கடல் காற்றானது 45 முதல் 65 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. ஆகவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் நாளை (18-ந் ) தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாது அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் ஏற்கனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள் அருகாமையில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் 19, 20 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகு, மீன்பிடி வலை மற்றும் இயந்திரம் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம், பாம்மன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. அலைகள் பனைமர உயரத்துக்கு எழும்புகின்றன.

    எனவே ராமேசுவரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் வளத்துறை அலுவலகத்தில் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் இன்று வழங்கப்படவில்லை.

    மேலும் ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிக காற்று காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

    ×