search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதியதாரர்கள்"

    • எப்போது உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
    • அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய உயிர்வாழ் சான்றிதழை அவர்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வழங்க வேண்டுமென்றும், ஒரு மாதம் சலுகைக் காலம் வழங்கப்படும் என்றும் 31.5.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    இது விடுதலைப் போராட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் பயன்பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்றும், இதனை உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை என்றால், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், இந்த அரசாணையில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியவர்கள் சிறப்பு நேர்வாக ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், முந்தைய ஆண்டுகளில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்றவர்கள் எப்போது உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த அரசாணை ஒரு தெளிவற்றதாக இருக்கிறது. இந்த அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உயிர்வாழ் சான்றிதழ் தொடர்பான 31-5-2023 நாளிட்ட நிதித் துறை அரசாணை எண். 165-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும், இதுகுறித்து ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் கருத்தினைக் கேட்டு அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர் நலச்சங்கம் சார்பில் வழக்கு
    • அகவிலைப்படி உயர்வை வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக வழக்கறிஞர் வாதிட்டார்.

    சென்னை:

    அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுளள்து.

    தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    அதன்பிறகு நான்குமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டபோதும், தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை எனக் கூறி, அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர் நலச்சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயண பிரசாத் விசாரித்தார்.

    அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அகவிலைப்படி உயர்வை வழங்க மறுத்ததால் 86 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும், 20 அயிரம் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணியில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் நிலையில், தங்களுக்கு வழங்க மறுப்பது பாரபட்சம் என்றும் வாதிட்டார். மேலும், கடந்த ஜூலை மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    ஆனால் நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்ற துறைகளில் போதுமான நிதி இருப்பதாகவும், குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்த அரசு, போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதால் அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு 81 கோடி ரூபாய் செரலவாகும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை வழங்க வேண்டும் என்ற கேள்வி எழும்போதெல்லாம், நிதி நெருக்கடி என்ற பதிலையே அரசு வழங்கி வருவதாக அதிருப்தி தெரிவித்தார். நிதி நெருக்கடியை ஒரு காரணமாக சொல்லும் அரசு, சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது எப்படி? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

    அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வரும் நவம்பர் முதல் வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அகவிலைப்படி உயர்வை வழங்கியது தொடர்பான அறிக்கையை நவம்பர் 25ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

    • நேர்காணல் செய்வதற்கான கால அளவு 20-5-2022 ன் படி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆகும்.
    • 2508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் செய்வதற்கான கால அளவு 20-5-2022 ன் படி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆகும். திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் (சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் உட்பட) நாளது தேதி வரை 2508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர். ஆண்டு நேர்காணல் புரிவதற்கான காலக்கெடு முடிவதற்கு குறைவான நாட்களே உள்ளதால் தங்களது ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு, நாளது தேதி வரை ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ள ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது மின்னணு வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மின்னணு வாழ்நாள் சான்றினை ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக இந்திய தபால் துறை வங்கி, இ-சேவா மற்றும் பொது சேவைமையங்கள் (சேவை கட்டணம் உண்டு) மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும் கருவூலத்திற்கு நேரில் சென்றும் நேர்காணல் புரியலாம். மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க அளிக்க வேண்டிய விவரங்கள் : ஆதார் எண், பி.பி.ஓ.,எண், வங்கி கணக்கு எண் மற்றும்செல்போன் ஓ.டி.பி., அளிக்க வேண்டும் என கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார். 

    • தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி - 1995 சேலம் மண்டல ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை மாநாடு நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மத்திய அரசு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். அதுவரை இடைக்காலமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி - 1995 சேலம் மண்டல ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை மாநாடு நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாடு வரவேற்பு கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஐசிஎல் மாணிக்கம் வரவேற்றார். மாநில செயலாளர் பாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் . அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு பொருளாளர் மோகனன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    மத்திய அரசு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். அதுவரை இடைக்காலமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கமுட்டேசன், ஆண்டு உயர்வு, சர்வீஸ் வெயிட்டேஜ் இஎஸ்ஐ போன்ற சட்ட சலுகைகளை அமுலாக்க வேண்டும். கேரளா போல் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் சேலம் மண்டல கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • வருடாந்திர ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து கடந்த 2 வருடம் விலக்கு அளிக்கப்பட்டது.
    • வயது முதிர்வு காரணமாக நேரில் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.

    மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை, அவர்களது வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க சென்னை நகர மண்டல அஞ்சல்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, வருடாந்திர ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து ஓய்வூதியதாரர்களுக்கு மாநில அரசு விலக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டு மாநில அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 7,15,761 பேர் வருகிற ஜூலை முதல் செப்டம்பர் மாதம்வரை தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக நேரில் சென்று இந்த சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாத ஓய்வூதியதாரர்களுக்கு ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக, தபால்காரரிடம் ரூ.70 ரொக்கமாக செலுத்த வேண்டும்.

    ஓய்வூதியதாரர்கள் தங்களது பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால், உடனடியாக டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும் என சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதத்தில் இருந்து 9 சதவிகிதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami
    சென்னை:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்களும்,  ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் தமிழக அரசுக்கு 1157 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

    ஓய்வூதியதாரர்களுக்கு 154 முதல் 2250 ரூபாய் வரையும், அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரையும் கூடுதலாக ஊதியம் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூன் 2018 முதல் ஆகஸ்ட் வரை நிலுவையாகவும், அதன் பிறகு சம்பளத்துடனும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
    ×