search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்எஸ் ஷர்மிளா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது
    • ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார்

    பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.

    இந்த வேட்பாளர் பட்டியலில் ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து 5 பேர், பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத்தும், கதிஹார் தொகுதியில் மூத்த தலைவர் தாரிக் அன்வரும், பகல்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ அஜீத் சர்மாவும் போட்டியிடுகின்றனர்.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார். ஒடிசாவின் பர்கர் தொகுதியில் முன்னாள் எம்.பி சஞ்சய் போய் போட்டியிடுகிறார்.

    • விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
    • தொண்டர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அமராவதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைத்தனர்.

    இதற்கிடையே, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அம்பாபுரத்தில் உள்ள முன்னாள் எம்பி ராமச்சந்திர ராவ் வீட்டிற்கு செல்ல காரில் புறப்பட்டு வந்தார். அப்போது போலீசார் ஷர்மிளாவின் காரை பின்தொடர்ந்தனர். இதையடுத்து, ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் தங்கினார்.

    இந்நிலையில், விஜயவாடாவில் இருந்து கட்சி தொண்டர்களுடன் புறப்பட்ட ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது தொண்டர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி என புதிய கட்சியை தொடங்கினார் ஷர்மிளா
    • திங்கள் அன்று கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்தார்

    ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய் எஸ் ஷர்மிளா (YS Sharmila), தனது சகோதரருடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டால் 2021 ஜூலை மாதம் அவரது கட்சியில் இருந்து விலகினார்.

    தொடர்ந்து, ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (YSR Telangana Party) எனும் புதிய கட்சியை தொடங்கினார்.

    ஆனால், சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளா இணைந்தார். தனது கட்சியையும் காங்கிரசுடன் இணைத்தார்.

    கடந்த திங்கட்கிழமையன்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு (Gidugu Rudra Raju) தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை, ராஜு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு அனுப்பி வைத்தார்.

    இந்நிலையில், இன்று ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒய்எஸ் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதன் மூலம் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஆந்திர அரசியலில் சகோதரன்-சகோதரி போட்டி உருவாக வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    கடந்த 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் ஆந்திராவில், காங்கிரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
    • ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இதையடுத்து, கடந்த நவம்பர் 3-ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன். கேசிஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெரும் ஊழலால், ஒரு பணக்கார மாநிலம் இப்போது பெரும் கடனில் சுமையில் சிக்கியுள்ளது" என கூறியிருந்தார்.

    அதனை தொடர்ந்து, ஐதராபாத்தில் ஜனவரி 2-ம் தேதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒய்எஸ் ஷர்மிளா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை நேரில் சந்தித்து முக்கியமான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்

    இந்நிலையில், டெல்லி சென்ற ஒய்எஸ் ஷர்மிளா, ஜனவரி 4-ம் தேதி அகில இந்தியா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

    இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க ஷர்மிளா டெல்லி சென்றார்.
    • தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.

    ஐதராபாத்:

    ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலுங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஷர்மிளா தனது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க ஷர்மிளா டெல்லி சென்றார்.

    அங்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை அவர் சந்தித்து பேசினார். மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

    எந்தவித நிபந்தனையும் இன்றி ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பாலேரு தொகுதியில் ஷர்மிளா போட்டியிடுவார் எனவும், காங்கிரஸ் கட்சிக்காக தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.

    இந்த வாரம் சோனியா காந்தி முன்னிலையில் ஷர்மிளா காங்கிரசில் கட்சியை இணைக்க உள்ளார்.

    ×