என் மலர்
நீங்கள் தேடியது "ஏழுமலையான் கோயில்"
- பாட்னாவின் முக்கிய பகுதியான மொகாமாவில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் வழங்கப்பட்டுள்ளது.
- பீகார் மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருடன், திருப்பதி தேவஸ்தான குழு விரைவில் பேச்சுவார்த்தை
பீகாரின் தலைநகரான பாட்னாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் (ஏழுமலையான் கோயில்) கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது அம்மாநில அரசு. பீகார் தலைமைச் செயலாளர் பிரத்யா அம்ரித், திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில், இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
பாட்னாவில் முக்கிய பகுதியான மொகாமா பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் என். லோகேஷ் ஆகியோர் அன்புடன் வரவேற்றுள்ளனர். பாட்னாவில் ஏழுமலையான் கோயில் கட்ட ஒப்புக்கொண்டதற்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை பீகார் அரசின் கலாச்சார உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றார். மேலும் கோயில் கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிடவும், செயல்படுத்தவும் பீகார் மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருடன், திருப்பதி தேவஸ்தான குழு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.
- அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணி அனுபவம்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கான மாத ஊதியம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் மற்றும் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு கண்டிஷன். வைஷ்ண பிராமணர்கள் மட்டுமே ஆகம விதிப்படி விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பிரியா ஆனந்த் நடித்து வரும் 'அந்தகன்' படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.
- பிரியா ஆனந்துடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். 'வாமனன்' படம் மூலம் தமிழிலும், 'லீடர்' படம் மூலம் தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதேபோல், பாலிவுட் திரைப்படமான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, 'அந்தகன்' படத்தில் நடித்து வரும் பிரியா ஆனந்த், பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.
நடிகை பிரியா ஆனந்த் சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
விஐபி சாமி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்த பிரியா ஆனந்திற்கு ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்களுடன் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர், கோவிலில் இருந்து வெளியேறிய பிரியா ஆனந்துடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் சர்ச்சையில் சிக்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் வகையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பிராங்க் வீடியோ எடுத்ததை தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டிடிஎஃப் வாசன் மீது வழக்கு எண் 72/2024 பிரிவு 299 கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பினர்.
டிடிஎஃப் வாசனுக்கு திருப்பதி காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் திருப்பதி விரைந்துள்ளனர்.






