திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை பிரியா ஆனந்த்

பிரியா ஆனந்த் நடித்து வரும் 'அந்தகன்' படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.பிரியா ஆனந்துடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை பிரியா ஆனந்த்
Published on

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். 'வாமனன்' படம் மூலம் தமிழிலும், 'லீடர்' படம் மூலம் தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதேபோல், பாலிவுட் திரைப்படமான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, 'அந்தகன்' படத்தில் நடித்து வரும் பிரியா ஆனந்த், பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.

நடிகை பிரியா ஆனந்த் சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

விஐபி சாமி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்த பிரியா ஆனந்திற்கு ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்களுடன் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பின்னர், கோவிலில் இருந்து வெளியேறிய பிரியா ஆனந்துடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com