search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளுந்தூர்பேட்டை"

    உளுந்தூர்பேட்டை அருகே புதுப்பெண் அடித்து கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர் பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 23).தொழிலாளி. இவரது மனைவி பார்வதி(19). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதம் ஆகிறது. பார்வதி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை பார்வதி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    வீட்டில் இருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கூவாடு பகுதியை சேர்ந்த ஒருவர் கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பகுதியில் உள்ள பார்வதியின் அண்ணன் சூர்யாவை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பார்வதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சூர்யா தனது உறவினர்களுடன் கூவாடு பகுதிக்கு வந்தார். பிணமாக கிடந்த பார்வதியின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது பார்வதியின் கழுத்தில் ரத்த காயங்கள் இருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.

    எனவே சூர்யாவுக்கு அவரது தங்கையின் சாவில் சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். அதில் தனது தங்கை பார்வதியின் சாவில் சந்தேகம் உள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பார்வதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை அடித்து கொலைசெய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 9 மாதத்தில் பார்வதி இறந்திருப்பதால் இதுகுறித்து திருக்கோவிலூர் சப்- கலெக்டர் சாருஸ்ரீயும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
    உளுந்தூர்பேட்டை:

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே வந்தது.

    அஜீஸ் நகர் அருகில் வந்தபோது தனியார் பேருந்து லாரியுடன் உரசியது. இதில் பேறுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து உகிச்ச்சை அளித்து வருகின்றனர்.

    இதில் பலரது நிலைமை கவலைக்க்டமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. #Accident
    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பா.ம.க. நிர்வாகியின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். பா.ம.க. நிர்வாகி. இவரது மனைவி புஷ்பராணி (வயது 30). இவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை புஷ்பராணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ஜெயசங்கருக்கு தொலைபேசி மூலம் ஊர் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயசங்கர் மற்றும் அவரது உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு உளுந்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.

    அங்கு வீட்டில் புஷ்பராணி பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். புஷ்பராணி வீட்டு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    மகளின் சாவுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் தந்தை ஜெயசங்கர் புகார் செய்தார்.

    அதில் எனது மகள் புஷ்பராணி சாவில் சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, சப்- இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புஷ்பராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    புஷ்பராணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் டிராவல்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பார்த்திபன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது43). டிராவல்ஸ் அதிபர். இவரது உறவினர் சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீராம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார்.

    இதையறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் ஸ்ரீராமின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த ரூ.1½ லட்சம் மற்றும் 15 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை ஸ்ரீராம் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


    உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போய் இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    இந்த சம்பவம் குறித்து ஸ்ரீராம் உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, மாணிக்கம் ஆகியோர் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி வழிப்பறி மற்றும் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #Tamilnews
    ×