search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல் உடைப்பு"

    • கோவில் பின்புறம் வைத்து உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
    • சி.சி.டி.வி. கேமரவை மேலே திருப்பி விட்டு விட்டு ஹார்டு டிஸ்கை மட்டும் திருடி சென்றுள்ளனர்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து நயினார் பாளையம் செல்லும் சாலையில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரவு சென்ற மர்ம நபர்கள் உண்டியலை தூக்கிச் சென்று கோவில் பின்புறம் வைத்து உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். கோவில் கருவறை பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி. ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகம் சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், தனிபிரிவு போலீஸ்காரர் கணேசன் ஆகியோர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணியானது 3 நாட்களுக்கு முன்பு தான் நடைபெற்றதால் பெரிய அளவில் பணம் திருட்டு போகாமல் தப்பியது என்றும், அதனால் உண்டியலில் 300 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் சி.சி.டி.வி. கேமரவை மேலே திருப்பி விட்டு விட்டு ஹார்டு டிஸ்கை மட்டும் திருடி சென்றுள்ளனர் என்றும் கோவில் உள்ளே இருந்த சாமி நகைகள், வெண்கல சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது ஆனால் திருடர்கள் குறி வைத்து ஹார்ட் டிஸ்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர் எனமுதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.
    • போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தில் கடந்த 29-ம் தேதி சுவர் ஏறி குதித்து புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்பு உண்டி யலை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஆலய பக்தர் சங்க நிர்வாகி ராஜேஷ், தேவசம் போர்டு ஸ்ரீகாரியம் முத்தமிழ் செல்வன் ஆகியோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த னர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பல்வேறு இடங்களில் உண்டியலை தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் மறுநாள் (30-ந்தேதி) மாலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உண்டியல் கண்டெடு க்கப்பட்டது. ஆனால் அதில் இருந்த காணிக்கை பணம் ெகாள்ளை போயிருந்தது.

    இதையடுத்து கொள்ளை யர்களை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கொள்ளை நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் டிப்- டாப் தோற்றத்துடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி கோயி லுக்கு வந்துள்ளனர்.

    அவர்கள் வெளியே சுற்றி திரிந்ததை பார்த்த கோயில் மேல் சாந்தி, ஆலய காம்பவுண்டுக்குள் வந்து சாமி தரிசனம் செய்யுங்கள் என கூறியுள்ளார். இதை எதிர்பார்த்து இருந்த கொள்ளையர்கள் ஆல யத்தின் உள்ளே சட்டையை கழற்றி விட்டு வந்து அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்வது போன்று நோட்மிட்டுள்ளனர்.

    இதை பார்த்த ஆலய மேல் சாந்தி பிரசாதம் வாங்கும்படி கூறியுள்ளார். ஆனால் பிரசாதம் வாங்காமல் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தனி படை போலீசார் கோவில் கொள்ளையர்களின் போட்டோக்களை கொண்டு வந்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் மேல் சாந்தியிடம், அடையாளம் காட்டும் படி கூறியுள்ளனர்,

    அதில் பார்த்தபோது வட இந்தியாவில் உள்ள பிரபல கொள்ளையனின் ஒருவன் அடையாளம் காட்டப்பட்டது, மேலும் மற்றொரு கொள்ளையன் நாகர்கோயிலை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது,

    கோயிலை கொள்ளை யடிக்க வடநாட்டு கொள்ளை யர்கள் நோட்ட மிட்டு உண்டியலை கொள்ளை யடித்து சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மகிழீஸ்வரர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்-நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
    • இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அடுத்த பெருந்தலையூர் பவானி ஆற்றங்கரையோரம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் விநாயகர், முருகர், பைரவர், நவக்கிரகம், சந்திரன், சூரியன், சரஸ்வதி, லட்சுமி, ஆஞ்சநேயர் போன்ற பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

    இங்கு ஒரு கால பூஜை நடந்து வருகிறது. கோவில் அர்ச்சகராக அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் இருந்து வருகிறார். தினமும் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    அதேபோல் நேற்று இரவு 7 மணிக்கு பூஜைகள் முடிந்து அர்ச்சகர் சண்முக சுந்தரம் கோவில் நடையை பூட்டி சென்று விட்டார். பின்னர் இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடையை திறக்க அர்ச்சகர் சண்முகசுந்தரம் வந்தார்.

    கோவில் நுழைவாயிலை திறந்து மூலவர் இருக்கும் பகுதிக்கு சென்றபோது மூலவர் பகுதியில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்-நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    கோவிலில் நள்ளிரவில் புகுந்த மர்மகும்பல் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீதர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார்.பின்னர் இது குறித்து கவுந்தப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் கோவிலுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    போலீசார் கோவிலை சுற்றி பார்த்த போது கோவிலின் வளாகத்தில் சனீஸ்வரர் கோவில் பின்புறத்தில் 2 மூட்டைகள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன.

    மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் கோவிலில் கொள்ளைய டிக்கப்பட்ட நகை மற்றும் உண்டியல் பணம் இருந்தது தெரியவந்தது.

    மகிழீஸ்வரர் கோவில் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ளதால் தினமும் நள்ளிரவில் கவுந்தப்பாடி போலீசார் அந்த பகுதியில் ரோந்து வருவது வழக்கம். அதேபோல் நேற்று நள்ளிரவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் கேட்டுள்ளதால் மாட்டி விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்களை தாங்கள் திருடிய பணம், நகை மூட்டைகளை கோவிலின் பின்புறத்தில் விட்டு சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் இருந்த உண்டியலையும் கொள்ளை கும்பல் உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர்.
    • மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் கோயில்களில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த மேட்டுப்பாளையம் பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் ஜோதி சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.

    காலையில் பக்தர்கள் வந்தபோது கோயில் முன்பு இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளைபோய் இருந்தது. நள்ளிரவில் வந்த மர்மகும்பல் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். உண்டியலில் ரூ. 10 ஆயிரத்துக்கும் மேல் இருந்ததாக தெரிகிறது.

    மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் இருந்த உண்டியலையும் கொள்ளை கும்பல் உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் கோயில்களில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது. வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது. இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாசி திருவிழா முடிவடைந்த பின்னர்தான் இந்த கோவில் உள்ள உண்டியல் திறக்கப்படும். இதில் பல லட்சம் ரூபாய் வசூலாகும்.
    • கோவிலுக்கு வந்த பக்தர்களும் கோவிலில் கொள்ளை நடந்திருப்பது அறிந்து திடுக்கிட்டனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் பிரசித்தி பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேவர் சமுதாய மக்களின் குல தெய்வ கோவில் ஆகும்.

    சமீபத்தில் வெளியான "விருமன்" படப்பிடிப்பு இங்குதான் தொடங்கப்பட்டது. இங்கு சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து நடிகர் கார்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றார்.

    இந்த கோவிலில் மாசி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் இந்த கோவிலில் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம்.

    மாசி திருவிழா முடிவடைந்த பின்னர்தான் இந்த கோவில் உள்ள உண்டியல் திறக்கப்படும். இதில் பல லட்சம் ரூபாய் வசூலாகும்.

    இந்த கோவிலில் நேற்று இரவு வழிபாடு முடிந்து பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு கோவில் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் கோவில் கதவை திறந்து உள்ளே சென்று உண்டியலை உடைத்துள்ளனர். அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பல லட்சம் ரூபாயை அள்ளிச்சென்றனர். 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை மட்டும் தரையில் கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.

    இன்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்களும் கோவிலில் கொள்ளை நடந்திருப்பது அறிந்து திடுக்கிட்டனர்.

    இதுபற்றி கோவில் நிர்வாகிகள் உத்தப்பநாயக்கனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பிரசித்தி பெற்ற ஒச்சாண்டம்மன் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையிலிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்ற 4 பேர் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் திருக்காடீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது‌. இன்று அதிகாலை கோவிலில் இருந்து சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.அப்போது பெரியக்காட்டுபாளையம் பகுதியில் திடீரென்று மின்சார தடை ஏற்பட்டு இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வந்தனர். அப்போது கோவிலில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டு வந்ததால், சந்தேகம் வந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை 4 பேர் கொண்ட கும்பல் உடைத்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் 4 பேரை பிடிக்க முயன்றனர். ஆனால் 4 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.இதனை தொடர்ந்து ரெட்டிச் சாவடி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சென்னை கோட்டூர்புரம் சேர்ந்தவர்கள் கரண் (வயது 18), செல்வம் (வயது 24), சூரிய பிரகாஷ் (வயது 18) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. மேலும் இவர்கள் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்றதாகவும், அப்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூரில் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினர்.
    • கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திரவுபதி அம்மன் சன்னதியும் அமையபெற்று உள்ளது.இன்று அதிகாலை விநாயகர் கோவிலில் இருந்து திடீரென்று அதிக ஒலியுடன் அலாரம் அடித்தது. இதனை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியில் வந்து பார்த்தபோது விநாயகர் கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் சன்னதி முன்பு இருந்த இரும்பு கேட் திறந்து இருந்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது இரும்பு கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கிடந்தது.கோவில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் இருந்த பூட்டு உடைந்து சிதறி கிடந்தன. அப்போது திடீரென்று அலாரம் அடித்த காரணத்தினால் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் யார்? என சி.சி.டி.வி காமிரா மூலம் போலீசார் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூரில் மையப் பகுதியாக உள்ள மஞ்சக் குப்பம் விநாயகர் கோவிலில் அதிகாலையில் பூட்டை உடைத்து உண்டியலில் மர்ம நபர்கள் திருட முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. மேலும் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. நேற்று நள்ளிரவு தேவாலயத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளி சென்று விட்டனர்.

    இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×