search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் உண்டியலை உடைத்து பல லட்சம் திருட்டு
    X

    உண்டியலில் உள்ள பணத்தை திருடி சென்ற கொள்ளையர்கள் சில்லரை காசுகளை விட்டு சென்றுள்ளனர்.

    பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் உண்டியலை உடைத்து பல லட்சம் திருட்டு

    • மாசி திருவிழா முடிவடைந்த பின்னர்தான் இந்த கோவில் உள்ள உண்டியல் திறக்கப்படும். இதில் பல லட்சம் ரூபாய் வசூலாகும்.
    • கோவிலுக்கு வந்த பக்தர்களும் கோவிலில் கொள்ளை நடந்திருப்பது அறிந்து திடுக்கிட்டனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் பிரசித்தி பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேவர் சமுதாய மக்களின் குல தெய்வ கோவில் ஆகும்.

    சமீபத்தில் வெளியான "விருமன்" படப்பிடிப்பு இங்குதான் தொடங்கப்பட்டது. இங்கு சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து நடிகர் கார்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றார்.

    இந்த கோவிலில் மாசி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் இந்த கோவிலில் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம்.

    மாசி திருவிழா முடிவடைந்த பின்னர்தான் இந்த கோவில் உள்ள உண்டியல் திறக்கப்படும். இதில் பல லட்சம் ரூபாய் வசூலாகும்.

    இந்த கோவிலில் நேற்று இரவு வழிபாடு முடிந்து பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு கோவில் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் கோவில் கதவை திறந்து உள்ளே சென்று உண்டியலை உடைத்துள்ளனர். அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பல லட்சம் ரூபாயை அள்ளிச்சென்றனர். 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை மட்டும் தரையில் கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.

    இன்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்களும் கோவிலில் கொள்ளை நடந்திருப்பது அறிந்து திடுக்கிட்டனர்.

    இதுபற்றி கோவில் நிர்வாகிகள் உத்தப்பநாயக்கனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பிரசித்தி பெற்ற ஒச்சாண்டம்மன் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×