search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகல் விளக்கு"

    • பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
    • அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.

    திண்டுக்கல்:

    தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாத த்தில் பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை திருக்கா ர்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.

    இதற்காக திண்டுக்கல் கடைவீதிகளில் சாலை யோரங்களில் அகல் விளக்கு, திரி, எண்ணெய் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அம்மன் விளக்கு, பாவை, கும்பம், விநாயகர் மற்றும் டிசைன் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கி வருகின்றனர். ரூ.2 முதல் ரூ.100 வரையிலான 1 இன்ச் முதல் ஒரு அடி வரை விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    • வடகிழக்கு பருவமழையால் விளக்கு தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிகோட்டகம் செட்டி புலம், செம்போடை ,பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா ஒட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீபத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் ஆனால் வடகிழக்கு பருவ மழையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன இதுவரை தயாரித்து உள்ள அகல்விளக்குகள்வீட்டின் உள்ளே காயவைத்து வருகின்றனர்.

    வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கும் நிலையில் விளக்குகள் தயாரிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது

    எனவே தமிழ்நாடு அரசு மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    • ஆஞ்சநேயர்கோவிலை இடித்து தள்ளியதை எதிர்த்து அகல் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    • உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் கடை வீதியில் அமைந்துள்ள சகஜானந்தா சிலை அருகில் சிவன் குலத்தார் அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள காகிதப்பட்டறைஊராட்சியில்பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர்அங்கிருந்த ஆஞ்சநேயர்கோவிலை இடித்து தள்ளியதைஎதிர்த்து சிவன் குலத்தார் அறக்கட்ட ளை நிர்வாகிகள் கையில் அகல் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில்மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ், நிர்வாகிகள் இள வரசன், சரவணன், மோகன், ஜெயபால் மற்றும்10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

    • பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
    • அனுப்பட்டியில் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த16ந் தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதைத்தொ டர்ந்து அனுப்பட்டியில் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே நேற்று பெண்கள் அகல் விளக்குகள் ஏந்தி காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தயாரித்த விளக்குகளை வெயிலில் நன்கு காயவைத்து அதை சுடுவலையில் அடுக்கி தீயில் இட்டு தயார் செய்கின்றனர்.
    • பனி மூட்டமாக இருப்பதாலும் அகல்விளக்குகளை வெயிலில் காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம். இதுபோல் கோவில்களிலும், பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவர். அகல் விளக்கு என்பது எண்ணெய் விளக்கின் ஒரு வகையாகும்.

    இது பொதுவாக களி மண்ணால் செய்யப்பட்டு, பருத்தி திரியால், நெய் அல்லது நல்லெண்ணை கொண்டு எரியூட்டப்படும். விளக்கேற்றுவ தால் துன்ப இருள் அகற்றப்பட்டு மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.

    இப்படி சிறப்பு வாய்ந்த தீபத்திரு விழாவையொட்டி, தமிழகத்தில் பல்வேறு இடங் களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.

    தஞ்சை கீழவாசல் பழைய மாரியம்மன்கோவில் சாலை சாலக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடா் மழை இருந்து வந்த நிலையில், தற்காலிகமாக அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியை நிறுத்தி வைத்திருந்தனா். தற்போது மழை ஓய்ந்ததால் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் மும்முரம் காட்டி வருகின்றனா்.

    ஒரு முகவிளக்கு, 5 முக விளக்கு என பல அளவுகளில் அகல் விளக்கை வடிவமைக்கிறார்கள். அதன்பின்னர் தயாரித்த விளக்குகளை வெயிலில் நன்கு காயவைத்து அதை சுடுவலையில் அடுக்கி தீயில் இட்டு தயார் செய்கின்றனர்.

    இப்பகுதியில் தயாரிக்கப்படும் அகல்விளக்குகள் தஞ்சை மட்டுமின்றி பிற ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது மழை பெய்து ஓய்ந்தாலும் அவ்வப்போது மேகமூட்டம் திரள்வதாலும், பனி மூட்டமாக இருப்பதாலும் அகல்விளக்குகளை வெயிலில் காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அகல்விளக்குகளை தீயில் சுடுவதற்கு தேவையான வைக்கோல், தென்னை மட்டை, கீற்றுகளும் மழையில் நனைந்ததை காய வைக்க முடியவில்லை.

    இதனால் 7 நாட்களில் முடிய வேண்டிய பணி கூடுதல் நாட்கள் ஆகிறது.

    இது குறித்து அகல்விளக்கு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுமபோது,

    கார்த்திகை தீபத்திரு விழாவிற்கான அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மழைக்கால மாக இருப்பதால், மண்ணை பதப்படுத்தி, விளக்குகள் தயாரிப்பதில் சிக்கல் உள்ளது.

    பனிப்பொழிவு காரணமாக விளக்குகளை காய வைக்க முடியாத நிலை உள்ளது. ஒருமுகம் கொண்ட 3 விளக்குகள் ரூ.10-க்கும், 5 முக விளக்கு ஒன்று ரூ.70-க்கும், 7 முக விளக்கு ஒன்று ரூ.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி எங்களுக்கு வேலை இருக்கும். அதன்பிறகு கட்டிட வேலைக்கும், ஓட்டல் வேலைக்கும், பிற கூலி வேலைக்கும் தான் செய்கிறோம்.

    மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். நாங்கள் தயாரிக்கும் அகல்விளக்குகளை மாவட்ட நிர்வாகமே கொள்முதல் செய்ய வேண்டும். எங்கள் தெருவில் காலிமனை உள்ளது.

    அந்த இடத்தில் அகல்விளக்குகள் தயாரிக்க மேற்கூரை அமைத்து கொடுத்தால் மழை காலத்திலும் அகல்விளக்குகள் நனையாமல் இருக்க வசதியாக இருக்கும். அகல்விளக்குகள் தயாரிக்க உதவும் மண் திருவை வழங்க வேண்டும் என்றார்.

    • லாரி டிரைவர் கட்டுப்பட்டைஇழந்து தாறுமாறாக ஓடினார்.
    • போலீஸ் தலைமை காவலர் சுரேஷ் விரைந்து சென்று போக்கு வரத்தை சரி செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இருந்து 12 டன்அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்றுபெங்களூர்சென்றது.பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரியின் முன்பக்க டயர் திடீர்என வெடித்து. இதனால் லாரி டிரைவர் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. லாரியைஓட்டி வந்தடி ரை வர் பரசுராமன் சாதுர்ய மாக பாலத்தின் கட்டையில் மோதி லாரி நின்றது இதனால் லாரியில் வந்த டிரைவர் உட்பட அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தபினார்.இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் திடீர் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் என்பதும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் போக்குவரத்து போலீஸ் தலைமை காவலர் சுரேஷ் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    ×