search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "watershed"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது.
  • பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.

  மதுரை:

  மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

  இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவாதிட்டார்.

  இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

  மேலும் அரசு ஆவணங்களின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

  • இந்த நாளில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது.
  • மக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.

  கடலூர்:

  புரட்டாசி,தை,ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது என்பதால் இன்று புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை கடற்கரையில் கடலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் வருகை தந்து புரோகிதர்கள் முன்னிலையில் படையல் இட்டு தங்களது முன்னோர்களை நினைத்து புனித நீராடி தர்ப்பணம் செலுத்தி வழிபட்டனர். இதேபோல் கடலூர் தென்பெண்ணை ஆறு கெடிலம் ஆறு உள்ளிட்ட பல நீர்நிலைப்பகுதியில் பகுதிகளில் ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.

  • கடந்த சில நாட்களாக 5000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. பின்னர் அதையும் குறைத்தது.
  • 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களால் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருகிறது.

  சென்னை:

  காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது.

  இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்துவிட்டது.

  காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை தரவேண்டிய நீரில் மூன்றில் ஒரு பங்கை கூட தராத நிலையில் இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

  அதன்படி தமிழகத்திற்கு காவிரியில் 5000 கன அடிநீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை முதலில் உத்தரவிட்டன. அதற்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த சில நாட்களாக 5000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. பின்னர் அதையும் குறைத்தது.

  இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு, அடுத்த 15 தினங்களுக்கு தொடர்ந்து 3000 கன அடி நீர் வீதம் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து பெங்களூருவில் பந்த் நடந்தது. மேலும் மாநிலம் தழுவிய அளவில் இன்று கர்நாடகத்தில் பந்த் நடந்து வருகிறது.

  தமிழகத்திற்கு 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட நிலையில் அதனை பின்பற்ற கர்நாடகா அரசு பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களால் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருகிறது.

  இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது.

  இதில் தமிழகம் சார்பில் நீர் வளத்துறை செயலாளர் (பொறுப்பு) டாக்டர் மணிவாசன், காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் எல்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

  அப்போது தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். வினாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட் டால்தான் நெற் பயிர்களை காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தினார்கள்.

  ஆனால் இதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் எங்களுக்கே தண்ணீர் போதாது என்று கூறினார்கள்.

  கர்நாடகாவின் இந்த பிடிவாதம் காரணமாக இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் ஒருபோக சாகுபடிக்கு உலை வைத்துவிடும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  • 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக அகற்றப்பட்டது.
  • பொதுமக்களுக்கு நிவாரண பொருளாக 10 கிலோ அரிசி 1000 பணம் வேஷ்டி புடவைகள் வழங்கப்பட்டது.

  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி அருகில் கொற்கை ஊரா ட்சியில் உயர் நீதிமன்றம் நீர்நிலை புற ம்போக்கு குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற அறிவிப்பின் பேரில் கொற்கை ஊராட்சியில் சுமார் 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக அகற்றப்பட்டது.

  இதனால் பொதுமக்கள் வீடுகள் இல்லாமல் அவதி பட்ட நிலையில் செல்வராஜ் எம்.பி, மாரிமுத்து எம்.எல்.ஏ, தலைமையில் பொதுமக்களுக்கு நிவாரண பொருளாக 10 கிலோ அரிசி 1000 பணம் வேஷ்டி புடவைகள் வழங்கப்பட்டது.

  இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், கொற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  ×