search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U19 கிரிக்கெட்"

    இலங்கையில் நடைபெற்று வரும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெற்றது. #IND19vSL19
    இந்தியா - இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என வென்றது. இந்நிலையில் இன்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணியின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை இளைஞர்கள் 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 143 ரன்கள் சுருண்டது.

    பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய இளைஞர அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக பவன் ஷா, அனுஜ் ராவத் ஆகியோர் களம் இறங்கினார்கள். பவன் ஷா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்னும், ஆர்யன் ஜூயல் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் அனுஜ் ராவத் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார்.

    ஐந்தாவது வீரராக களம் இறங்கிய சமீர் சவுத்ரி 35 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வியாழக்கிழமை நடக்கிறது.
    சச்சின் தெண்டுல்கர் மகன் என்பதால் அர்ஜூனுக்கு தனிப்பட்ட முறையில் விஷேச கவனிப்பு இருக்காது என U19 பவுலிங் கோச்சர் தெரிவித்துள்ளார். #ArjunTendulkar
    இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர், சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை பதிவு செய்துள்ளார். மேலும் டெஸ்டிலும் ஒருநாள் போட்டியிலும் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற முத்திரையை பதிவு செய்துள்ளார்.

    இவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், நடுகள பேட்ஸ்மேனும் ஆவார். இவர் முதன்முறையாக 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

    19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சனத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின் தெண்டுல்கரின் மகன் என்பதற்காக அர்ஜூன் விஷேசமாக பார்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு எல்லா வீரர்களும் ஒரே மாதிரிதான் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சனத் குமார் கூறுகையில் ‘‘பயிற்சியாளர் பதவியில் எனது வேலை என்ன என்பது எனக்கு முழுவதுமாக தெரியவில்லை. ஆனால், ஒரு பயிற்சியாளராக அனைத்து வீரர்களும் எனக்கு ஒன்றுதான்.

    அர்ஜூன் தெண்டுல்கர் மற்ற இளைஞர்களைவிட மாறுபட்டவர் இல்லை. என்னுடைய வேலை ஒவ்வொரு வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான்’’ என்றார்.
    ×