search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலை"

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம் விற்க விருப்பம் உள்ளவர்கள் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    திண்டுக்கல்:

    திண்டுக்கல், பழனி கொடைரோடு, ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையங்களில் முறையே கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம், பன்னீர் திராட்சை, வெண்ணை விற்பனை செய்வதற்கு மனு அளிக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மதுரை  ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    மதுரை ரெயில்வே கோட்டத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி, மதுரை போன்ற ரெயில் நிலையங்களில் பனைப் பொருட்கள் மற்றும் சுங்குடிச்சேலை விற்பனை செய்ய அனுமதி அளி–க்கப்பட்டிருந்தது. இத்திட்ட–த்தை மேலும் விரிவுபடுத்த மதுரை கோட்டத்தில் 30 ரெயில் நிலையங்களில் அந்தந்தப் பகுதிகளில் பிரசித்திப்பெற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்ப மனு கோரப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்ரெயில் நிலையத்தில் சின்னாள ப்பட்டி கைத்தறி சேலைகள், பழனியில் பஞ்சாமிர்தம், கொடைரோட்டில் பன்னீ ர்திராட்சை, ஓட்டன்சத்தி ரத்தில் வெண்ணை விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ளவர்கள் மனு அளிக்கலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை ஜூன் 5 ஆம் தேதி மாலை 3மணி வரை மதுரை கோட்ட அலுவலகத்தில் நேரடியாகவோ, இணை யத்தள முகவரிக்கோ அனுப்பலாம்.

    குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் 15 நாட்களுக்கு  எந்த  கட்டணமும் செலுத்தாமல் நிலையத்தின் முக்கிய பகுதியில் இந்த உள்ளூர் பொருள்களை விற்றுக்கொள்ளலாம். பதிவு பெற்ற சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அனுமதியுடன் பொருட்கள் தயாரிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சிறப்பு வாய்ந்த சிறுமுகை பட்டில் புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை கவரும் வகையில், மணமக்களின் புகைப்படங்கள் பொறித்த சேலைகளை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
    பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது என்றால் அது புடவை தான். அப்படிப்பட்ட புடவைக்கு பெயர் போன ஊர் தான் கோவை மாவட்டம் அருகே உள்ள சிறுமுகை. இந்த சிறுமுகை நகரத்தில் நெசவு செய்யும் புடவைகளான காட்டன் பட்டு, மென்பட்டு, பட்டு உள்ளிட்டவை தமிழகத்தின் பிற பகுதிகள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. உலக மக்களையும் சிறுமுகை பட்டானது கவர்ந்திழுத்து வருகிறது.

    அப்படிப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த சிறுமுகை பட்டில் புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை கவரும் வகையில், சிறுமுகையை சேர்ந்த டிசைனர் தர்மராஜ், நெசவு தொழிலாளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மணமக்களின் புகைப்படங்கள் பொறித்த சேலைகளை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த புடவைகள் மக்கள் மத்தியில் மிகவும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் ஆர்டர் கொடுத்து இந்த புடவைகளை வாங்கி செல்கிறார்கள்.

    இதுகுறித்து தர்மராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-

    எல்லோரும் திருமண புடவைகள் வாங்கும் போது அதனை பார்த்து பார்த்து வாங்குவார்கள். அதனை தங்கள் நினைவாக வைத்து கொள்வார்கள். எல்லோரும் புடவைகள் நெசவு செய்தாலும், நாங்கள் செய்வதில் சற்று வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

    அதற்காக புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகளின் புகைப்படங்கள் பொறித்த புடவைகளை நெசவு செய்ய ஆரம்பித்தோம். இது தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆர்டர்களும் கணிசமாக வருகிறது. புடவையின் முந்தானை பகுதியில் தான் மணமக்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு புடவையை நெசவு செய்வதற்கு 30 நாட்கள் ஆகும். ஒரு புடவை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம்.

    நாங்கள் இதுதவிர அனைத்து திருக்குறள்கள் பொறித்த புடவைகள், காந்தியடிகளின் தண்டி யாத்திரை சென்ற படங்கள் பொறித்த புடவைகள் என மக்கள் எந்த மாதிரி கேட்கிறார்களோ அந்த வகையில் வடிவமைத்து கொடுத்து வருகிறோம். இதுதவிர சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்த போது அவரது உருவம் பொறித்த சால்வையும் நெசவு செய்து வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×