search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம் விற்க வாய்ப்பு

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம் விற்க விருப்பம் உள்ளவர்கள் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    திண்டுக்கல்:

    திண்டுக்கல், பழனி கொடைரோடு, ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையங்களில் முறையே கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம், பன்னீர் திராட்சை, வெண்ணை விற்பனை செய்வதற்கு மனு அளிக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மதுரை  ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    மதுரை ரெயில்வே கோட்டத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி, மதுரை போன்ற ரெயில் நிலையங்களில் பனைப் பொருட்கள் மற்றும் சுங்குடிச்சேலை விற்பனை செய்ய அனுமதி அளி–க்கப்பட்டிருந்தது. இத்திட்ட–த்தை மேலும் விரிவுபடுத்த மதுரை கோட்டத்தில் 30 ரெயில் நிலையங்களில் அந்தந்தப் பகுதிகளில் பிரசித்திப்பெற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்ப மனு கோரப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்ரெயில் நிலையத்தில் சின்னாள ப்பட்டி கைத்தறி சேலைகள், பழனியில் பஞ்சாமிர்தம், கொடைரோட்டில் பன்னீ ர்திராட்சை, ஓட்டன்சத்தி ரத்தில் வெண்ணை விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ளவர்கள் மனு அளிக்கலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை ஜூன் 5 ஆம் தேதி மாலை 3மணி வரை மதுரை கோட்ட அலுவலகத்தில் நேரடியாகவோ, இணை யத்தள முகவரிக்கோ அனுப்பலாம்.

    குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் 15 நாட்களுக்கு  எந்த  கட்டணமும் செலுத்தாமல் நிலையத்தின் முக்கிய பகுதியில் இந்த உள்ளூர் பொருள்களை விற்றுக்கொள்ளலாம். பதிவு பெற்ற சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அனுமதியுடன் பொருட்கள் தயாரிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×