என் மலர்
நீங்கள் தேடியது "slug 97447"
- தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்? உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
- அந்த நபர் 20 வயது உடையவர் என்று மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் உயர்நிலைப்பள்ளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாக சுட்டார்.
இதனால் பள்ளியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் பள்ளிக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்? உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
அந்த நபர் 20 வயது உடையவர் என்று மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- வெள்ளை மாளிகையில் 24-ந்தேதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவியுடன் தீபாவளி கொண்டாட உள்ளார்.
- கமலா ஹாரீஸ், டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
வாஷிங்டன் :
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இந்தியாவில் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதைப்போல பல நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை விமரிசையாக கொண்டாட உள்ளனர்.
அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர், கவர்னர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தலைநகர் வாஷிங்டனில் அரசு சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்திய-அமெரிக்க பிரபலங்கள் தலைநகரில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார். இதற்காக பிரபலமான இந்திய-அமெரிக்கர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் என ஏராளமானோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாடினார். இதில் பங்கேற்பதற்காக சுமார் 200 இந்திய-அமெரிக்கர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் இந்திய நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், பங்கேற்றவர்களுக்கு இந்திய உணவுகளும் பரிமாறப்பட்டன.
இதைப்போல வெள்ளை மாளிகையில் வருகிற 24-ந்தேதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளி கொண்டாட உள்ளார். இதில் ஏராளமான இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்நது 26-ந்தேதி வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், தனது அமைச்சகத்தில் தீபாவளி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஏராளமான தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15-ந்தேதி தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது. இதில் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், செனட்டர் சக் சியூமர், இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், அடுத்த ஆண்டு (2023) முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவித்தார். இது தீபங்களின் திருவிழா குறித்து அறிய குழந்தைகளை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய செனட்டர் சியூமர், 'நாங்கள் எங்கள் சமூகத்தையும், எங்கள் இந்திய சமூகத்தையும் நேசிக்கிறோம், நாங்கள் அனைவரும் இங்கு நியூயார்க்கில் எங்கள் பன்முகத்தன்மையுடன் ஒன்றிணைவதை நாங்கள் விரும்புகிறோம்' என்று தெரிவித்தார்.
- பாதுகாப்பான மற்றும் வளமான பாகிஸ்தானைத்தான் அமெரிக்கா விரும்புகிறது.
- பாகிஸ்தானும் அமெரிக்கா முக்கியமானதாக கருதும் ஒரு உறவு நாடாகும்.
வாஷிங்டன்:
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் உலகின் ஆபத்தான நாடுகளில் ஒன்று என, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் பேசும் போது தெரிவித்தார். அமெரிக்க அதிபர், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.
இதற்கு பாகிஸ்தான் தனது அதிருப்தியை தெரி வித்தது. தலைநகர் இஸ்லா மாபாத்தில் உள்ள பாகிஸ்தா னுக்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. இந்த நிலையில் ஜோ பைடன் கருத்துக்கு பதில் அளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ஒரு பொறுப்பான அணுசக்தி நாடு என்றும், நாங்கள் மிகவும் தீவிரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தானை ஆபத்தான நாடு என்று கூறிய விவகாரத்தில் அமெரிக்கா திடீர் பல்டி அடித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியதாவது:-
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் திறன் மீது அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் வளமான பாகிஸ்தானைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. பாகிஸ்தான் உடனான நீண்ட கால ஒத்துழைப்பை அமெரிக்கா மதிக்கிறது. பாகிஸ்தானும் நாங்கள் முக்கியமானதாக கருதும் ஒரு உறவு நாடாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன.
- ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. குற்றச் செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று கற்பழிப்பு என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் அரசு அலுவலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சிறிய அளவிலோ அல்லது திடீரென்றோ தாக்குதல் நடத்தலாம் என்றும் பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
- காயமடைந்த இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- இதுபோன்ற நடத்தையால் மக்கள் கலக்கம் அடையவில்லை என சமூக வலைத்தளத்தில் ஆதங்கம்
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலியன்ஸ் உடையணிந்த 6 இளம்பெண்கள் கொண்ட கொள்ளைக் கும்பல் கைவரிசை காட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் டைம்ஸ் சதுக்கம் சுரங்க ரெயிலுக்குள் ஏறிய அந்த பெண்கள் அங்கிருந்த இரண்டு பெண்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பர்ஸ், கிரெடிட் கார்டு, செல்போன் போன்றவற்றை பறித்து சென்றுள்ளனர். காயமடைந்த இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏலியன்ஸ் போன்று இறுக்கமான உடை அணிந்த பெண்களின் அடாவடி செயலை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
'நியூயார்க் அதன் பழைய தந்திரங்களுக்குத் திரும்பியுள்ளதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். நியூயார்க் எப்போதும் சிறப்பாக இருக்கிறதா? இதுபோன்ற நடத்தையால் மக்கள் கலக்கம்கூட அடையவில்லை. இது பைத்தியக்காரத்தனம், என ஒருவர் ஆதங்கத்துடன் கூறி உள்ளார்.
- துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தப்பி சென்றார்.
- தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஒக்லாந்தில் இடை நின்ற மாணவர்களுக்கு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்குள் ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் திடீரென்று நுழைந்து சரமாரியாக சுட்டார்.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் 6 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பொறுப்பற்ற அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
வாஷிங்டன்:
அண்மையில் ரஷிய தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். பதிலடி கொடுக்க எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) உள்ளன.
அவை நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை. எங்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,வாஷிங்டனில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேசியதாவது:
ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் (ரஷியாவின்) இந்த பொறுப்பற்ற அணு ஆயுத அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். அதிபர் புதின் தொடங்கிய போரை நிறுத்தச் சொல்லுங்கள். உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக, ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவின் வலிமையான கண்டனங்களுடன் பிற நாடுகளும் சேர்ந்து ரஷியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம்.
- இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல.
உலக தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வரும் நாடுகளுக்காக நிரந்தர இடங்களும் இதில் அடங்கும் என்றார்.
இந்தநிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அதிபர் ஜோபைடன் ஆதரிக்கிறார்.
இந்த 3 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம் என்றார்.
அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்.
எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல என்றார்.
- உக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
- ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
வாஷிங்டன்:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, இது போருக்கான காலம் அல்ல என உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச்சபையின் 77-வது கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பேசுகையில், ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்றார்.
இந்நிலையில், ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், நீண்ட காலமாக ரஷியாவுடன் உறவு பாராட்டி வரும் இந்தியாவின் பிரதமர், போரை முடிவுக்கு கொண்டு வருமாறு புதினிடம் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது. இதில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஐந்தாவது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.
முதல் செட்டை அல்காரஸ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ரூட் 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வென்றார். 3-வது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டைபிரேக்கருக்கு அந்த செட் சென்றது. இதில் அல்காரஸ் 7-1 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.
அல்காரஸ் அதே உத்வேகத்துடன் ஆடி 4-வது செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். ஸ்கோர் 6-4 , 2-6, 7-6 (7-1 ), 6-3. இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 20 நிமிட நேரம் தேவைப்பட்டது.
19 வயதான அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபனில் கால்இறுதியில் நுழைந்ததே இவரது சிறந்த நிலையாக இருந்தது.
அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் அல்காரஸ் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். குறைந்த வயதில் 'நம்பர் 1' இடத்தை பிடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதன்மூலம் நம்பர் ஒன் கனவு நிறைவேறியது.
கேஸ்பர் ரூட்டின் முதல் கிராண்ட்சிலாம் கனவு இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் கலைந்து போனது.
- கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார்.
- கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.
நியூயார்க்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா)-கரோலின் கார்சியா ( பிரான்ஸ் ) மோதினார்கள்.
இதில் 17-வது வரிசையில் உள்ள கார்சியா 6-3 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 28 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார்.
கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார். ஜபேர் காலிறுதி ஆட்டத்தில் 6-4 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் அஜ்லா டாம்லிஜோனோ விச்சை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.
28 வயதான அவர் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே)-மேட்டோ பெரிடினி (இத்தாலி) மோதினார்கள்.
இதில் ரூட் 6-1, 6-4, 7-6(7-4) என்ற நேர் செட் கணக்கில் 13-வது வரிசையில் உள்ள பெரிடினியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
23 வயதான கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.