என் மலர்

  நீங்கள் தேடியது "Security council"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம்.
  • இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல.

  உலக தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

  பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வரும் நாடுகளுக்காக நிரந்தர இடங்களும் இதில் அடங்கும் என்றார்.

  இந்தநிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அதிபர் ஜோபைடன் ஆதரிக்கிறார்.

  இந்த 3 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம் என்றார்.

  அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்.

  எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக இந்தோனேசியா, ஜெர்மனி, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா மற்றும் டொமினிக்கன் ரிப்பப்ளிக் ஆகிய நாடுகள் தேர்வாகியுள்ளன. #UNelectsSecuritycouncil
  நியூயார்க்:

  சர்வதேச விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது.

  இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

  15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி, புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது.

  அவ்வாறு முன்னர் தேர்வு செய்யப்பட்ட நெதர்லாந்து, ஸ்வீடன், எத்தியோப்பியா, பொலிவியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் பதவிக்காலம் அடுத்த ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, புதிய தற்காலிக உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஓட்டெடுப்பு நேற்று நடைபெற்றது.  மொத்தம் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையில் ஜெர்மனி மற்றும் டொமிமிக்கன் ரிப்பப்ளிக் நாடுகள் தலா 184 வாக்குகளை பெற்றன. தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவாக 183 வாக்குகளும், பெல்ஜியம் நாட்டுக்கு 181 வாக்குகளும் கிடைத்தன.

  ஆசிய-பசிபிக் கண்டத்தை சேர்ந்த நாடு என்ற வகையில் ஒரு இடத்துக்கு மாலத்தீவு - இந்தோனேசியா இடையே போட்டி நிலவியது. மொத்தம் பதிவான 190 வாக்குகளில் 144 வாக்குகள் இந்தோனேசியாவுக்கு ஆதரவாகவும், 46 வாக்குகள் மாலத்தீவுக்கும் கிடைத்தன. இதன் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பில் இந்தோனேசியா வெற்றிபெற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்குள் நுழைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #UNelectsSecuritycouncil

  ×